ஒரே மரத்தில் நாற்பது வகையான பழங்கள். நியூயார்க் பேராசிரியர் சாதனை.
29 Jul,2014
நியூயார்க்கில் உள்ள ஒரு விவசாய விஞ்ஞானி, ஒரே மரத்தில் நாற்பது வகையான பழங்கள் கொடுக்கும் வகையில் ஈடுபட்டிருந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த மரத்தை பார்வையிட தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
நியூயார்க் அருகே உள்ள Syracuse University என்ற பல்கலைக்கழகத்தில் பேராசிரியாராகவும், விஞ்ஞானியாகவும் இருப்பவர் Van Aken என்பவர். இவர் புதுமையான மரங்கள் உண்டாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இவருடைய முயற்சியால் உருவாக்கப்பட்ட ஒரு மரத்தில் நாற்பது வகையான பழங்கள் கிடைக்கின்றன. இந்த மரத்தில் பீச்சஸ்( peaches) பழம் முதல் பிளம்ஸ் (plumbs) வரையிலும், செர்ரி பழம் முதல் almonds என்னும் பழம் வரை அனைத்து வகை பழங்களும் காய்க்கின்றன.
இந்த அதிசய மரத்தின் ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு வகையான பழங்கள் காய்த்து தொங்குகின்றன. கோடைக்காலத்தில் பசுமையான நிறமாக காணப்படும் இந்த அதிசய மரம், குளிர்காலம் வந்தால் முற்றிலும் கலர்கலராக மாறிவிடுகின்றது. இந்த அதிசய மரம் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. Syracuse University வளாகத்தில் அமைந்துள்ள இந்த மரத்தை தற்போது சுற்றுலாப்பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இதுபோன்று இன்னும் பலவகையான மரங்களை உற்பத்தி செய்யப்போவதாக பேராசிரியர் Van Aken செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்