அன்னாசிப்பழ பானகம்
02 May,2014
தேவையான பொருட்கள்:
அன்னாசிப்பழம் - பாதி
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புதினா - சிறிது
பச்சை கொத்துமல்லி - சிறிது
வெல்லம் பொடித்தது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
• அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
• இரண்டு, மூன்று துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதியை மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, புதினா, கொத்துமல்லி, வெல்லம், சிறிது தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
• அதை ஒரு வடிகட்டியில் ஊற்றி நன்றாக வடிகட்டவும்.
• பின்னர் அதில் உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். எடுத்து வைத்திருக்கும் அன்னாசிப் பழத்துண்டுகளை பொடியாக நறுக்கி அதன் மேல் தூவி விடவும்.
• குளிர்பதனப் பெட்டியில் 1/2 மணி நேரம் வைத்திருந்து பருகவும்.