தலைமைச் செயலகம்’ உருவாக்கப்பட்ட பொழுது !அம்பாறையில் இருந்ததாக அறியப்பட்ட ராம் மலேசியாவில் இருந்தார் .

23 Apr,2014
 

மற்றுமொரு மர்ம முடிச்சு அவிழ்ந்தது! - தலைமைச் செயலகம்’ உருவாக்கப்பட்ட பொழுது அம்பாறையில் இருந்ததாக அறியப்பட்ட ராம் மலேசியாவில் இருந்தார்  .

 .

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இருப்பை மறுதலித்து 21.07.2009 அன்று கே.பியை தலைவராகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரிலான

கும்பல் உருவாக்கப்பட்ட பொழுது அம்பாறையின் வனப்பகுதிகளில் இருந்ததாக அறியப்பட்ட ராம் மலேசியாவில் தங்கியிருந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியை சிங்களப் படைகள் கைப்பற்றிய சில நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய அம்பாறை மாவட்டத் தளபதி நகுலனுடன் சிங்களப் படைகளிடம் சரணடைந்த தென்தமிழீழத்திற்கான கட்டளைத் தளபதி ராம், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை உடைப்பதற்குத் தேவையான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு இணங்கிய நிலையில் சிங்களப் புலனாய்வுப் பிரிவினரால் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முஸ்லிம் வணிகர் ஒருவராக வேடமிடப்பட்டு போலியான கடவுச் சீட்டில் மலேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்ட ராம், அங்கிருந்தவாறே கே.பியை தலைவராகக் கொண்ட ‘தலைமைச் செயலகம்’ என்ற குழுவை உருவாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார்.

அப்பொழுது இந்தியாவில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவும், திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைச் செயலகப் பொறுப்பாளராகவும் கடந்த காலங்களில் விளங்கிய சுரேஸ் அல்லது அமுதன் (தற்பொழுது இலண்டனில் மாறன் என்ற பெயரில் ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பலை இயக்குபவர்), மலேசியாவில் தங்கியிருந்த ராமு.சுபன் (தற்பொழுது இலண்டனில் வசிப்பவர்), ஐரோப்பாவில் தங்கியிருந்த விநாயகம் அல்லது அறிவழகன் (தற்பொழுது பிரான்சில் வசிப்பவர்), இலண்டனில் தங்கியிருந்த கே.பி.ரெஜி ஆகியோருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட ராம், இவர்களின் உதவியுடன் ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பலை உருவாக்கினார்.

இதன் பின்னர் 2009 ஓகஸ்ட் 5 அன்று கே.பியின் கைது நாடகம் நிறைவுற்றதும் அவருடன் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட ராம், பொலனறுவையில் உள்ள சிங்களப் படை முகாம் ஒன்றில் இருந்தாறு ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பலை இயக்கியதோடு, இதன் ஊடாக சிறிது காலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளின் அன்றாட செயற்பாடுகளையும் கண்காணிப்பிற்கு உட்படுத்தி வந்தார்.

அக்காலப் பகுதியில் தமது செயற்பாடுகள் பற்றிய நாளாந்த அறிக்கைகளையும், வாராந்த – மாதாந்த கூட்டங்களில் கலந்து கொண்ட செயற்பாட்டாளர்களின் விபரங்களையும் வழங்குவதற்குப் பின்னடித்த, அல்லது உரிய நேரத்திற்கு வழங்கத் தவறிய வெளிநாட்டுக் கிளைப் பிரதிநிதிகளைக் கடிந்து கொண்ட ராம், அவர்களுக்கு இயக்க நடைமுறை பற்றி தொலைபேசி மூலம் (காட்டில் இருப்பதாகக் கூறிக்கொண்டு) நீண்ட ‘கொள்கை விளக்கங்களையும்’ வழங்கினார்.

இதனால் ராம் மீது சந்தேகம் கொண்டு செயற்பாட்டாளர்கள் சிலர் விசாரணைகளை மேற்கொண்ட பொழுதே சிங்களப் படைகளின் பிடியில் அவர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் விளைவாகவே 2009 நவம்பர் 27ஆம் நாளன்று அம்பாறையின் வனப்பகுதிகளில் இருந்து உரையாற்றுவதாகக் கூறி ராம் வெளியிட்ட ஒலிவடிவ அறிக்கை புலம்பெயர் தேசங்களில் பிசுபிசுத்துப் போனது.

எனினும் மலேசியாவில் இருந்தவாறே ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பலை ராம் உருவாக்கியமை இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளமை, அக்கும்பலின் தோற்றுவாயில் மேலும் மறைந்திருக்கக்கூடிய மர்மங்கள் பற்றிய கேள்விகளைத் தோற்றுவித்துள்ளது.

புலம்பெயர் தேசங்களில் போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளையும், விளையாட்டு விழாக்களையும் நடத்தியும், விசுவநாதன் உருத்திரகுமாரனின் தலைமையிலான ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற கும்பலுக்குப் பக்கபலமாக நின்றும் ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பல் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

'தலைமைச் செயலகம்' என்ற கும்பல் முதன்முதலாக வெளியிட்ட அறிக்கை:

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

21 - யூலை – 2009.

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் மக்களே,

எமது தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர் படிந்த காலகட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலை குலைந்து நிற்கின்றது. ஈடு செய்ய முடியாத - கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத - மிகப்பெரிய இழப்புக்களை, எம்மினம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், சிறிலங்கா நாடு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் - தமிழீழ விடுதலைக்காக நாம் வீறுகொண்டு எழுந்து போராட வேண்டியது எமது வரலாற்றுக் கடமை. ஒப்பற்ற எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணிற்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்து விட்ட மக்களினாலும் எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் - வரலாற்றின் தேவை கருதி - பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப - புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் – தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை நாம் மீள்-ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கு எமது இயக்கம் பணிவோடு அறியத்தருகின்றது.

போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும், பாதைகளும் காலத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் மாற்றமடையலாம். எமது இறுதி இலட்சியமான தமிழீழம் என்றும் மாறாதது. எனவே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். அன்றும் இன்றும் இனி என்றும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ்த் தேசியத்தின் தலைவர்.

எமக்கு முன்னாலுள்ள தடைகளை உடைத்தெறிந்து எமது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளி வந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எமது உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட - நீண்ட - விரிவான –ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டு-முடிவுக்கு அமைய - தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த திரு.செல்வராஜா பத்மநாதன் அவர்கள் - இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக எமது போராட்ட நகர்வுகளை வழிநடாத்திச் செல்வார் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிறைவேற்றுச் செயற்குழுவினராகிய நாங்கள் எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம்.

எமது போராட்டத்தை முனைப்புடன் முன்னகர்த்தும் நோக்கில் எமது இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய விபரங்களை நாம் விரைவில் அறியத்தருவோம். எமது எதிர்கால செயற்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலையாய ஆதரவையும் அறிவார்ந்த கருத்துக்களையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

 

தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமித்ததாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்;று குவித்ததாலும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் தோற்று விட்டதென்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச் சேர்ந்த நாடுகளும் நினைக்குமாயின் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம். எம் பெருந்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தியுள்ளது என்ற உண்மையையும் நாம் எமது அடுத்த கட்ட போராட்ட நகர்வுகளின் ஊடாக உலகிற்கு உணர வைப்போம்.Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம்india

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Kommende Film danmark

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies