உன்மேல் ஆசைதான் தனிமதி

31 Dec,2010
 

சொந்தமண்ணை விட்டு நினைவுகளைமட்டும் சுமந்து கொண்டு, பசுமைகளையெல்லாம் பறிகொடுத்தவனாய், பகல் இரவு பார்க்காமல் பட்ட கடன் தீர உடலை வருத்தி...

எந்தப்பாவமும் அறியாத வீட்டின் கூரை அடுத்தவர்களைக் காப்பாற்றிக்கொண்டு தான் மட்டும் வெய்யிலிலும், மழையிலும் அடிபட்டு வாழ்வது போல் என் வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டு போகிறது..

இந்நிலையில் என் மொபைல் போன் என்தூக்கத்தையும் மீறி விடாமல் அடித்துக்கொண்டது...
ம்...இந்தச்சாமத்தில் என்றால் வேறு யார்...? காசு,காசு என்று 1 டொலரை 100 ரூபாவால் பெருக்கிப் பார்க்கும் அம்மாவாகத்தானிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்..

அம்மா தான்...

கண்ணா...உன் மாமாவின் மகளின்ர புருஷன் அதுதான் உமாவின் புருஷன்..

ஓம்.ஓம்..சொல்லுங்க...

அந்தப்பொடியன் மோட்டர் சைக்கிளால் போக பின்னால வந்த லொறி அடிச்சு பொடியன்.அந்த இடத்தில் இறந்துவிட்டான். பாவம் அவள் உமா, 2 சின்னப் பிள்ளைகள் வேறு..இனி யார் தான் அதுக்குத் துணையோ..நீ ஒருக்கா எடுத்துக் கதை. நான் இன்றைக்கு பஸ்சில கொழும்புக்குப் போறன்..

இடிந்து போனான் கண்ணன்..ஓ வென்று அவன் அழவேணும் போல இருந்தது. ஆனால் அந்தப்பொழுதில் அவன் கண்கள் மூடிக்கொண்டதைத் தவிர அவன் அழவில்லை..

உமா..
ம்.எந்தச் சிற்பியும் செதுக்காத வண்ணச் சிலை..கண்ணனுடைய அம்மாவின் அண்ணனின் மகள். இருவருக்கும் ஒரே வயது. அதனால் டியூசன் கிளாசில் ஒன்றாகப் படித்தார்கள்..உமா வயசுக்கு வந்துவிட்ட செய்தியறிந்த உமாவின், கண்ணனின் பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கண்ணனுக்கு மஞ்சள் தண்ணீரால் ஊற்றி கேலி செய்தார்கள்...நாளடைவில் அதுவே உண்மையாகிவிட்டது.

வசதியான குடும்பம். அதைவிட உமாவின் அப்பா ஸ்கூல் அதிபரும் கூட.. இதற்கு எதிர் மாறாக கண்ணனுடைய வீட்டு நிலவரம்..கண்ணனுடைய அப்பா வீடு வீடாக தபால் கொடுப்பவர். அதனால் குடும்பச் செலவும், சூழ்நிலையும் அன்றாட வாழ்க்கைக்கே உண்டியல் தட்டும் நிலை.
நாட்டுப்பிரச்சனையைக் காரணம் காட்டி, கண்ணனின் மாமா, தன் சகோதரியின் வீட்டுப்பத்திரத்தை அடைமானம் வைத்து பணம் புரட்டி கண்ணனை கனடா அனுப்ப ஏற்பாடு செய்தார்...


மறுத்தான் கண்ணன்..எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தான், படிப்பை பாதியிலேயே முடித்துவிட அவன் மனம் வேதனையடைந்தது. உமாவிடம் மண்டியிட்டு அழுதான்.."உமா எனக்கு உன்னைப்பார்க்காமல் ஒரு நாளாவது இருக்கமுடியாது..நான் கனடாவிற்கு போகமாட்டேன் உமா.." நான் படித்து நல்ல வேலை எடுத்தால் மாமா சந்தோசப்படுவார்தானே..

இல்ல கண்ணன் நீங்க போயிட்டு வாங்க.எங்க காதலுக்கு அப்பா தடை சொல்லமாட்டார்.அப்படி ஏதாவது எனக்கு வரன் பார்த்தால் உங்களைத்தவிர வேறு யாருக்கும் இந்த உடல் போகாது. அப்படியும் நடந்தால் நான் உயிரை விட்டுவிடுவேன் கண்ணா..இந்த உலகத்தில உங்கள விட வேறு எதுவுமே எனக்கு பெரிசல்ல...நீங்க போய் வரும் வரையில நான் காத்துக்கொண்டிருப்பேன்..

எழுந்தான் பிரிய மனமின்றி பிரிந்தான். பல தொடர்புகள்...மணிக்கணக்கில் போன் பேசிய நாட்கள், தினமும் எழுதிய கடிதங்கள்....அத்தனைக்கும் கண்ணூறு பட்டது போல் அதிர்ச்சியுற்றவனாய் அந்த அழைப்பு...

உமாவிடமிருந்துதான் அந்த அழைப்பு என்றதை "வசீகரா உன் பொன் மடியில்.." என்ற பாடலி்ன் ரிங்ட்ரோனில் இருந்து அறிந்து கொண்டான்..என்னதான் வேலை அலுப்பில் படுத்திருந்தாலும் உமாவிடமிருந்து வரும் போன் என்றால் புதிய உற்சாகம் பிறந்தது போல எழுந்திடுவான் கண்ணன்..

ஹாய் டியர்..ம்ம்ச்..

கண்ணன்....

அட இது என்னடா புது மரியாதை..வழமையாக இந்த மச்சி டேய் மச்சான் என்றுதானே சொல்லும்...சரிடா போகட்டும் ம்...சொல்லு...கணக்கு பாடத்தில ஏதும் டவுட்டா..?

கண்ணன் இனி இப்படி எல்லாம் கதைக்காதீங்க...ப்ளீஸ்...

ஏய்....உமாச் செல்லம் என்னடா ஆச்சு...? அத்தை திட்டினாங்களா..? அல்லது மாமா..அல்லது என்னோட கூடப்பிறந்த 2 பெண் குட்டிப் பிசாசுகள்...ம் சொல்லு சொல்லு..யாரா இருந்தாலும் இங்கயிருந்தே அக் ஷன் எடுக்கிறேன்..

கண்ணன் ப்ளீஸ் விளையாடாதீங்க......நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளுங்க..

சரிடா சொல்லம்மா..

எனக்கும் சுகுமாருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கு. அவரைத்தான் நான் கலியாணம் செய்யப்போகிறேன்.

உமா இது பொய்தானே...சும்மா இருடா...என் மனசை ஒரே கீறிப்பார்த்துச் சிரிப்பதே உனக்கு வேலையாகிப்போச்சுடா..

இல்ல கண்ணன்....உண்மை. இப்ப வீட்டில் யாரும் இல்லை. அதனால் தான் இதனை உங்களுக்குச் சொல்ல முடிந்தது...இது விசயமாக மாமிக்கு கூட இன்றைக்குத்தான் அப்பா சொன்னவர்...முதலே தெரிந்தால் உங்களுக்கு கதை போயிடும் என்று சொல்லாமல் விட்டுவிட்டார்....

உமா நீ என்ன சொல்லுகிறாய்....?

ஏதோ கண்ணன் சின்ன வயசில இருந்து பழகினோம், காதலிச்சோம்...ஆனால் அதுக்காக ..

அதுக்காக....??கேள்வி எழுப்பினான் கண்ணன்..

உங்கப்பாவைக் கட்டிக்கொண்டு மாமி படுகிற வாழ்க்கையை கண்ணால பார்த்த பிறகு எப்படி.நானும் அதுபோல அஞ்சுக்கும், 10 க்கும் அடுத்தவங்களிட்ட கையேந்தி வாழுறது. நீங்க போய் 2 வருசம் இன்னும் தான் உங்கட கடன் முடியல்ல..சுகுமார் லண்டனில படிச்சிட்டு கொழும்பில சொந்தமா பிஸினஸ் செய்கிறார்..நானும் சரி என்று சொல்லிட்டேன்..

நோ....நோ....நான் இதை நம்பமாட்டேன்..உன்ன யாரோ கட்டாயப்படுத்தி சம்மதிக்கவச்சிருக்கிறாங்க..உமா சொல்லு உமா...யாராயிருந்தாலும் சொல்லு....எங்களுக்கு யாரைப்பற்றியும் கவலையில்ல...எங்கட வாழ்க்கை எங்கட கையிலதான் உமா.....ப்ளீஸ்..

இல்ல கண்ணன்..என்னோட முடிவைச் சொல்லிட்டேன்...தயவு செய்து இனிமேலும் என் பெயரை சொல்லாதீங்க...

உமா உன்ர பெயரை பிளாக் போர்ட்டிலா எழுதி வச்சிருக்கிறேன்.அழிக்கிறதிற்கு...
என் உயிர் உமா நீ..உடம்பில ஓடுற ஒவ்வொரு சொட்டு இரத்தமும் நீதான் உமா...

உமா என்னை பையித்தியமாக்கிட்டு போகாத உமா..

உமாவிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை..மறுபடி மறுபடி போன் போட்டான்.ஆனால் உமாவின் வீட்டுப்போன், மொபைல் எல்லாமே சுவீச் ஓவ் என்று சொல்லியது..


நண்பர்கள், நண்பிகள் என்று பல வழிகளிலும் உமாவைப் பற்றிய செய்திக்காக முயற்சி செய்தான் கண்ணன்..கடைசியில் எல்லோருமே சொன்னார்கள்...டேய் விடுடா மச்சி...இவளென்ன பெரிய அழகுராணியாடா...காதல் என்ற சொல்லை காசுக்கு விற்கிறவளாச்சே....ஏதோ உனக்கும், அவளுக்கும் கலியாணம் முடிந்த பிறகு.....

நோ....ஸ்டொப்பிட்..ப்ளீஸ் இனிமே அவளைப்பற்றி எதுவுமே பேசாதீங்க...நீங்க என்ன சொன்னாலும், நான் நேசித்த என் உமா அப்படிப்பட்டவளல்ல...அது மட்டும் உண்மை..

அன்றிலிருந்து இன்று வரை உமாவின் சுகங்கள் கூட கேட்டறியவிரும்பாதவனாய், கண்ணன்..தனிமரமாய் வாழ்ந்து வந்தான். அவன் உழைப்பில் அவன் தங்கைகள் இருவருக்கும் இனிதே திருமணம் நடந்தேறியது...ஐந்து ஆண்டுகள் உமாவின் நினைப்பில் மட்டும் வாழ்ந்து வந்தான்..ஆனால் அவளுடைய பிறந்த நாள் வரும்போதெல்லாம்....பலமுறை அவளுடன் கதைக்க மனம் விரும்பி போன் எடுப்பதும் பிறகு மனதைக் கல்லாக்கிக் கொண்டு இருப்பதுமாக காலத்தைக் கடத்திக் கொண்டு இருந்தான்..

உமாவின் கணவர் இறந்த செய்திகேட்டவுடன் அவனால் உமாவுடன் போனில் கதைக்க மனம் இடம் கொடுக்க மறுத்தது...நாட்கள் 3 ஆகிவிட்டது. மறுபடியும் கண்ணனின் அம்மாவின் கோல் வந்திருந்தது. வேலையில் இருந்ததால் அவனால் உடனே எடுக்க முடியவில்லை.

வீட்டிற்கு வந்தவுடன், அம்மாவுடன் கதைப்பம் என்ற நினைவில் போன் எடுத்தான்...

ஹலோ...

ஹலோ....நீங்க யாரு.....? என்ர அத்தான் இறந்ததை அறிந்து எடுக்கிறீங்களா...அவரை உங்களுக்குத் தெரியுமா அண்ணா..? எனக்கும் என்ர பிள்ளைக்கும் இனி யார் அண்ணா துணை...? கடவுள் ஏன்..ஆங்...ஆங்...அழுகிறாள் உமா...

இதயத்தில் மின்சாரம் அடித்தது போல் ஓர் வலியில்.....கண்களிலிருந்து கண்ணீர் தடையில்லாத அருவி போல் வழிந்தது கண்ணனுக்கு..

மீண்டும் ஹலோ....

ஓ.......இது கண்ணனின் அப்பா..

அப்பா நான்...கண்ணன்.....

அடடா நீயாப்பா....அவள் உமா பாவம்டா .....நீ என்று தெரியாமல் கதைச்சிருக்கிறாள்...நீ ஆறுதலாக நாலு வார்த்தை கதைச்சியா..? யார் போன் பண்ணினாலும் புசத்திக்கொண்டு இருக்கிறாள்..

இல்..ல இல்லப்பா..வேணாம்...

பொறு பொறு டெலிபோனைக் கொண்டே குடுக்கிறன் நீ கதைச்சால் சந்தோசப்படுவாள்...

வேணாம்.....அப்பா ப்ளீஸ் வேணாம்..

நான் வரப்போறன் என்று அம்மாவிடம் சொல்லுங்க....

பொறு பொறு.வைக்காதே அம்மா நிற்கிறா கூப்பிடிறன் நீ கதை...

தம்பி கண்ணா......

அம்மா நான் வாறன்...வந்து கதைக்கிறன்...

வேண்டாம்...நாங்களிருக்கிறோம் தானே....நீ ஏன் இப்ப அவசரப்படுகிறாய்..இன்னும் 2 நாள் போனால் எல்லாம் சரியாகிடும்....நீ உமாவோட கதைக்கப்போறீயோ..

இல்ல வேண்டாம்...என்னால என் னால..கதைக்கமுடியாமல் இருக்கம்மா...தொண்டையெல்லாம் அடைச்சது போல இருக்கம்மா...அவள் பாவம் இந்த நிலைமையில என்னால ஆறுதல் கூட சொல்லமுடியாமலிருக்கு..

பின்ன சரி....கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் போல...நான் வைக்கிறன்...உமாவிட்ட சொல்லுறன்...நீ தான் கதைச்சது என்று..

ம்...மாமா, மாமியிடமும் சொல்லுங்கோ நான் கேட்டதாக..

சரி....சரி..கண்ணா..அம்மா வைக்கிறன்..ஓகே பாய்..

கண்ணனின் வருகை எல்லோருக்குமே ஆறுதலையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. உமாவின்


குழந்தைகளை மட்டும்தூக்கி தோளில் சாய்த்துக்கொண்டான். உமா எதுவுமே பேசாது தன் தாயின்

மடியில் தலைவைத்து அழுதுகொண்டிருந்தாள்...

 

நாட்கள் வெகுவாக சென்று கொண்டிருந்தது. இதுநாள் வரைக்கும் உமாவும் கண்ணனும்

ஒருவரையொருவர் பேசிக்கொள்ளவில்லை. பிள்ளைகளுக்கு மட்டும் டி.வியில் கார்ட்டூன்

ஓடிக்கொண்டிருக்கும்... உமாவின் 2 பிள்ளைகளுடைய வேலைகளையும் சுகுமாரின் வீட்டார்

கவனித்துக்கொண்டு இருந்தார்கள். உமாவின் கண்கள் எந்நேரமும் பனித்துளிகளால் நிரம்பியது

போன்று இருக்கும்..

 

கண்ணன் அவன் அம்மாவிடம் எடுத்துச்சொன்னான்...உமா, தன் பிள்ளைகளின்

கடமைகளையாவது செய்யச் சொல்லுங்களேன்.இப்படியே அழுது கொண்டு இருப்பதால் என்ன

பலன்..? கண்ணனின் அம்மாவிற்கும் கண்ணன் சொல்லுவது சரி என்றே தோன்றியது. அதனால்

உமா மெல்ல மெல்ல தன் குழந்தைகளை கவனிக்கத் தொடங்கினாள்..

 

இப்ப சாப்பாடு வேண்டாம் அத்தை, நான் பிறகு சாப்பிடுறன். மூடி வையுங்கோ என்று உமா

சொன்னபோதெல்லாம்.....கண்ணன் சாப்பிடாமல் எதுவும் பேசாமல் எழுந்து வெளியே சென்று

விடுவான். நாட்கள் செல்லச் செல்ல உமாவிற்கு விளங்கிவிட்டது. கண்ணனின் செய்கைகள்

தன்னை பழைய உமாவாக பார்க்க நினைக்கிறான் என்று. அதனால் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு

கண்ணனை பார்ப்பாள்...கண்ணனும் சாப்பிடுவான்..தனக்குள் சிரித்துக்கொண்டாள் உமா..

 

அவள் மனம் கண்ணனிடம் நிறைய நிறைய பேச வேண்டும், தன்னை விட்டுப்பிரிந்த நாளில்

இருந்து இன்று வரை நடந்தவைகள் எல்லாம் பேச வேண்டும் என்று ஆவல்

கொண்டாள்..கண்ணனின் மனதிலும் அதுபோல் இருருந்தாலும் அவன் எதையும்

காட்டிக்கொள்ளாமல் பிடிவாதமாகவே இருந்தான்...சுகுமாரின் 31 வது நாள் கிரிகைகள் செய்ய

ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பாடு நடந்தது. அதனால் சுகுமாரின் அழகான போட்டோ ஒன்று

பெரிசாக்கிக்கொள்வதற்கு தேவைப்பட்டது...அந்தப் பொறுப்பை கண்ணனிடம் விடப்பட்டது.

 

உமாவின் கபேட்டினுள் உள்ள பெட்டியை எடுத்து அல்பங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தான்..ஒரு

படத்தை எடுத்துக்கொண்டு வந்தான்...தானே பெரிசாக்கி கொண்டுவருவதாகச் சொல்லி வெளியே

சென்ற கண்ணன்..இரவாகியும் வீட்டிற்கு வரவில்லை....யாராவது பிரண்ட்ஸ் கண்டு

கூட்டிக்கொண்டு போயிருப்பார்கள் என்று சொந்தங்கள் சொன்னார்கள்...எல்லோருமே

நித்திரைக்குச் சென்று விட்டார்கள்.ஆனால் கண்ணன் வரவேயில்லை...உமாவின் இருதயம் டக்

டக் என்று பெரிய சத்தமாக அடித்துக்கொண்டது.....அவளால் உறங்க முடியவில்லை.

கண்ணனின் மொபைல் போனுக்கு எடுத்தாள்...எதுவித பதிலும் இல்லை..

 

அவள் பதட்டத்துடன் அத்த..அத்த...


உமா என்னம்மா....? நீ இன்னும் தூங்கல்லையோ...


இல்ல மணி ஒரு மணி சாமம்...கண்ணன் இன்னும்...


அட என்னம்மா நீ..அவன் என்ன சின்னப்பிள்ளையா..யாராச்சும் பிரண்ட்ஸ் வீட்ட, அல்லது படம்

என்று எங்காவது போயிருப்பான்.....நீ போய் பிள்ளைகளோட படம்மா..


ம்..சரி அத்தை..


அவளால் நித்திரை கொள்ளமுடியவில்லை...மீண்டும் மீண்டும் கண்ணனின் போனுக்கு டயல்

செய்தபடியிருந்தாள்.ஆனால் ஒரு வித பதிலும் இல்லை..உமாவின் எண்ணங்கள் இப்பொழுது

சுகுமாரின் நினைவலிருந்து கண்ணனின் பக்கம் சென்று கொண்டிருந்தன...

 


அடிக்கடி கைகளை பிசைந்து கொண்டு வாசல் கதவை எட்டி எட்டி பார்த்தாள்...ம்ஹும் கண்ணன்

வரவில்லை...அவளையுமறியாமல் அழத்தொடங்கினாள்....கடவுளிடம்


மன்றாடினாள்...கடவுளே...எதுவுமே ஆகக் கூடாது கண்ணனுக்கு....கடவுளே......கடவுளே என்று


மனதார கும்பிட்டுக்கொண்டாள்...

 

காலை 8 மணியிருக்கும் கண்ணன் வந்தான்...அவன் வந்ததையோ இரவிரவாக எங்குதான்

போனாய் என்று யாருமே கேட்கவில்லை. சாதாரணமான விசயமாக எடுத்துக்கொண்டார்கள்.

ஆனால் உமாவிற்கு போன உயிர் திரும்பக் கிடைச்சது போல ரொம்ப சந்தோசப்பட்டாள்..

கண்ணன் யாரிடமும் எதுவுமே பேசாது குளியலறைக்குள் சென்றான்..


உமா காலைச்சாப்பாடு செய்து கண்ணனுக்கும், அவள் மாமாவிற்கும் எடுத்து மேசையில்

வைத்தாள்....கண்ணன் தனக்கு பசிக்கல்ல என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றான்..

உமாவின் மனது குறுகுறுக்கத் தொடங்கியது...எதுக்காக கண்ணன் இப்படி நடக்கிறான்..? தான்

நேரடியாக இதைக் கேட்டால் என்னாகும்..

 

பலவாறு சிந்தித்து ஒரு முடிவிற்கு வந்தாள்...சுகுமாரின் அந்திரேட்டி நிகழ்வுகள்

முடியட்டும்...அதன் பிறகு கண்ணனுடன் நிறைய பேசவேண்டும் என்று எண்ணினாள் உமா..

 

உமாவின் வீடு இப்பொழுது அமைதியாகயிருந்தது. உமாவின் அம்மா, அப்பாவோடு கண்ணனின் அம்மா, அப்பா மட்டுமே அங்கயிருந்தனர். கூடி வந்த சொந்தங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒருவராக தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று விட்டார்கள்..

மீண்டும் கனடா போவதற்கான ஆயத்தங்களைச் செய்தான் கண்ணன்..சுகுமாரும் இறந்து 45 நாட்கள் கடந்து போயின.உமாவிற்கு மட்டும் இன்று தான் இந்தக் கொடிய சம்பவம் நடந்தது போல் சோகமே உருவாகக் காணப்பட்டாள்..உமாவின் குழந்தைகள் கண்ணனுடன் நல்ல அன்பாகப் பழகினார்கள்...கண்ணன் அதிகமாக யாருடனும் பேசியதில்லை..அவன் அம்மாவுடனும் தான்..

கண்ணா...நீ இன்னும் 2 நாளையால் போகப்போறாய்...அம்மா இனி எப்ப பார்க்கப்போறோனோ தெரியாது...அப்பாவும் அந்த நிலைதான்..

அம்மா, உங்கள எல்லாரையும் ஸ்பொன்சர் செய்து எடுக்க அலுவல் பார்க்கிறேன் என்று சொல்ல நீங்க தானே வரமாட்டோம் என்று சொன்னீங்கள் இப்ப ஏன் என்னை நினைச்சு வருதப்படுகிறீங்க..விடுங்கோ பேசாம..உங்களுக்கு தேவை காசு தான்...என்னை காசு காசாக காய்க்கும் மரமாகத்தான் நீங்க பார்க்கிறீங்க...பேசாம விடுங்கோ இந்தக்கதையை...என்னால ஏலும் மட்டும் உழைச்சு அனுப்புறன் யோசிக்காதீங்கோ..

இஞ்ச வா கண்ணன்.ஏன் இப்ப அம்மாவோட இப்படி கதைக்கிறாய்..? உனக்கு நல்லது தான் அவ நினைக்கிறா..அப்பா நான் சொல்லுறன் கேள்..

யாருடைய சொல்லும் தேவையில்ல..
எனக்கு நல்லது என்றது எல்லாம் எப்பவோ தொலைஞ்சு போச்சு....நீங்க நல்லாயிருங்கோ...அது போதும்..

அண்ணா இங்க வாங்கோ.....அம்மா, அப்பாவோட கதை வேண்டாம்..என்னுடைய பெஸ்ட் பிரண்ட் பெயர் ஜமுனா...இஞ்ச பாருங்கோ போட்டோவை.....ஈமெயிலிலும் நிறைய போட்டோஸ் வச்சிருக்கிறேன்...அம்மாவும் நீங்க வருகிறீங்க என்றவுடன் ஜமுனாவின்ர அப்பா, அம்மாவோட எல்லாம் பேசிவச்சிருக்கிறா..ஜமுனாவிற்கு உங்களத் தெரியும்..போனவாரம் அந்திரேட்டிக்கு கூட வந்திருந்தவ..

ஓஓஓ அதுதானோ அன்டைக்கு அம்மா சொன்னவ கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கப்போகிறதாக...ம்....இப்படி வேற எண்ணமோ..இன்னும் 2 நாள் இங்க இருந்தா எனக்கு பையித்தியம் தான் வந்துடும்...நான் வத்தளையில இருக்கிற முரளி வீட்ட தங்கி அங்கயிருந்து பயணம் போகப்போறன்..

ஐயோ அண்ணா...உங்களுக்கு பிடிக்கல்ல என்றால் பிடிக்கல்ல என்று சொல்லுங்கோ..அதுக்காக ஏன் நீங்க...

தம்பி கண்ணா....உன்ன யாரும் வற்புறுத்தமாட்டோம்....நீயாக யாரையும் விரும்பினால் சொல்லு...

தன் தாயை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் கண்ணன்..நெருப்பை கண்ணில் வைத்தது போன்றதொரு பார்வை...

மெளனமாக வெளியே போவதற்காக மாட்டியிருந்த சேட்டை எடுத்தான்..அப்பொழுது உமா எதிரே வந்தாள்..கண்ணன் உங்களோட நான் கொஞ்சம் கதைக்க வேணும்...

ஏற்கனவே ரொம்ப கோபமாக இருக்கிறான் கண்ணன்.இந்த நேரத்தில் உமாவும் வந்து எதிரே நிற்கும் போது அவனுடைய கோபம் அதிகமாகியது...கண்ணன்..மிகவும் நல்லவன்....இளகின மனதுக்காரன்..யாருக்காவது உதவ வேண்டும் என்றே சதா நினைப்பவன். ஆனால் கோபம் என்று வந்து விட்டாலோ யாருடனும் பேச மாட்டான் எங்கையாவது வெளியில் சென்று விடுவான்..உமாவிற்கு அவன் குணம் நன்றாகத் தெரிந்தும் இப்ப தடுப்பது அவனுக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை..

உமா கதைக்க வேண்டும் என்று சொன்னவுடன் அங்கிருந்த கண்ணனின் பெற்றோர்களும், சகோதரிகளும் அவ்விடத்தை விட்டுச் சென்றனர்..

சற்று நேர மெளனத்தின் பின்பு உமா உனக்கும், எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை..நீ என் வழியில் குறுக்கிடாதே.....ப்ளீஸ்..

இல்ல கண்ணன் சம்பந்தம் இருக்கு.அப்படி சம்பந்தம் இல்லை என்றால் நீங்க ஏன் இவ்வளவு செலவழிச்சு இங்க இந்த நேரத்தில் வரவேண்டும்..

ஏதோ உணர்வு என்னை இங்க வரவச்சது.....உண்மை.....பட் இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சது ஏனடா வந்தோம் என்று....நான் வராமலே இருந்திருக்கலாம்...

நோ..அப்படிச் சொல்லாதீங்க.....இப்ப எனக்குள்ள ஆறுதல் நீங்க தான்....பாருங்க அவர் இறந்ததோட சரி எல்லாருமே என்னைப்பற்றியும் என் பிள்ளைகளைப்பற்றியும் நினைக்காம போயிட்டார்கள் கண்ணன்..

உமா நீ என்னதான் இப்ப சொல்ல வாறாய்..

கண்ணன் நீங்க கலியாணம் கட்ட வேண்டும்....உங்கட தங்கச்சி பிரண்ட் ஜமுனா நல்ல பிள்ளை...

ஸ்டொப்பிட் உமா...நீ என்ன உன் மனசில நினைச்சு இருக்கிறாய்...நீ யார் எனக்கு இதெல்லாம் சொல்லுறதிற்கு.....உன்னை வார்த்தைகளால நோகடிக்கவேண்டாமே என்றுதான் நான் இத்தனை நாள் பொறுமை பொறுமை என்று லூசன் மாதிரி இருந்து கொண்டு வாறன்..ஆனா நீ...ச்சீ...உனக்கு முன்னால நின்று கதைக்கவே எனக்கு பிடிக்கல்ல...தள்ளிப் போ...நான் வெளியில போகவேணும்..

உமா அழுதாள்...சட்டென்று கண்ணனின் கையை பிடித்தாள்...கெஞ்சினாள் கண்ணன் பழசையெல்லாம் .....

உமா விடு....தயவு செய்து என் வழியில விடு...

இல்ல கண்ணன் உங்களுக்கு யாரில கோபம் ப்ளீஸ் சொல்லுங்க..

இதற்குப் பிறகும் பொறுக்க முடியாமல் தன் ரூமுக்குள் போய் ஒரு கடிதத்தை எடுத்து வந்தான்..

உமாவின் முன் தூக்கி எறிந்தான்...

அதனை எடுத்துப் பார்த்த உமா அதிர்ச்சியானால்...இது எப்படி உங்க....கை..யில..

வார்த்தைகள் வெளி வராமல் தடுமாறினாள் உமா..

 

என்ன உமா என்ன பாக்கிறாய்..பார்த்தியா கடவுள் இருக்கான் உமா...நான் உன்மேல வச்ச புனிதமான அன்பிற்கு என்னாச்சு என்று கடவுள் காட்டியிருக்கான்..இப்ப சொல்லு அப்ப இல்லாத அக்கறை இப்ப உனக்கு எங்கயிருந்து வந்திச்சு...நீ எவ்வளவு கெட்டித்தனமாக எனக்கே பொய் சொல்லிட்டு இப்படி ஒரு காரியத்தை செய்திருக்காய்....இப்ப எனக்கு புத்தி சொல்ல உனக்கு என்ன இருக்கு..அறுகதை..

உங்களுக்கு எப்படி...கண்ணன்....இந்தக்கடிதம்..

அதுதான் சொன்னேனே....தெய்வம் காட்டியிருக்கின்று..அன்னைக்கு சுகுமாரின் போட்டோ ஒன்று என்லார்ஜ் பண்ண நான் தானே உன் ரூமுக்குள் போனனான்..அந்த நேரம்தான் உன்னுடைய ஆல்பத்திலிருந்து இந்தக்கடிதம் பட்டது..சரி அம்மாவின்ர எழுத்தாகயிருக்கிறதே.அப்படி என்னதான் மருமகளுக்கு எழுதியிருக்கிறா என்று படிச்சுப் பார்த்தேன்...உண்மையில் அன்றைக்கு திரும்ப வெளிக்கிட வேணும் போலயிருந்தது.....ஏனடா வந்தோம் என்றது போலவும் இருந்தது..நீ இருக்கிற நிலைமையில நான் இதை ஏன் தெரியப்படுத்தவான் என்று எனக்குள்ள வச்சு கவலைப்பட்டன்....ஆனா அம்மாவில எனக்கு எந்த வித கோபமும் இல்ல..ஏன்னா அவ சுபாவம் அப்படித்தான்....இருக்கிறத விட்டிட்டு பறக்கிறதிற்கு ஆசைப்படுகிற குணம்..அவவிற்கு...ஆனா நீ..

கண்ணன்.....வெயிட்..வாசிக்கிறன் பாருங்க..

ஓ...எனக்கு விளங்கவில்லை என்று நீ வாசிச்சு விளக்கம் சொல்லப்போறாயா உமா....

ப்ளீஸ் வெயிட்

கடிதத்தை வாசித்தாள்..

அன்புள்ள மருமகள் உமாவிற்கு..
நாங்கள் அனைவரும் நலம். அதுபோல் உன்னுடைய நலனிற்கும் கடவுள் அருள்புரிவாராக..
படிப்பு எல்லாம் எப்படிப் போகிறது உமா..? ஹொஸ்டல் வாழ்க்கையின் அநுபவங்கள் எப்படி..? கண்ணன் போன் எடுப்பானா உமா..?

உமா உன்னிடம் இந்த ஏழை மனசு அத்தை ஒரு உதவி கேட்கிறேன்..நீ பணக்கார வீட்டுப்பிள்ளை...நாங்க கண்ணனை அனுப்ப பட்ட பாடு உனக்கு நன்றாகத் தெரியும்..இப்ப கண்ணன் கனடா போன பிறகு தான் எங்கட வீட்டிலே புதிய அத்தியாயம் பிறந்திருக்கிறது.கோமதிக்கு ஒரு நல்ல வரன் வந்துள்ளது....ஆனால் அவர்கள் கண்ணனை தங்கள் மகளுக்கு கட்டித்தரும்படி கேட்கிறார்கள். நான் சொன்னால் கண்ணன் கேட்க மாட்டான்..
நீ சொன்னால் கேட்பான்...உன் அப்பா உன்னைப்பிரிந்து வாழமாட்டார்.....அதனால நீ கனடா போறது எல்லாம் நடக்காத காரியம்..கண்ணனை மறந்து விடு....கோமதிக்கு நல்ல வாழ்வு அமையவேண்டுமானால் அது உன்னுடைய கையிலதான் இருக்கு உமா.....இதை நீ செய்வாய் என்ற நம்பிக்கையோடு...தயவு செய்து நான் இப்படி எழுதியதாக கண்ணனிடம் சொல்லிவிடாதே உமா....உன் அன்பு அத்தையின் வேண்டுகோள்..

உன் அன்புள்ள அத்தை..


ம்...படிச்சாச்சா ..ஒரு கடிதம் உன்னை எப்படியெல்லாம் பேச வச்சிருக்கு...நீ உண்மையில் என்னை உயிருக்குயிராக நேசிச்சால் என்ன பிரச்சனை என்றாலும் என்னட்ட சொல்லியிருக்கலாம் தானே.....

சொறி கண்ணன்...

இப்ப சொல்லி என்ன பிரையோசனம்...? பெரிய தியாகி என்ற நினைப்பு.காதலை நீ தியாகம் செய்தாய்....ஆனா என்னையல்லவா உயிரோடு கொன்றாய் நீ..
எத்தனை..எத்தனை நாள் நான் அந்த நாலு சுவருக்குள்ள அடைபட்டு அழுதழுது நெஞ்சு வெடிச்ச சோகத்தில தெரியுமா உனக்கு.கொஞ்சமாவது என்னை நீ நினைச்சுப் பார்த்தியா உமா....எத்தனை தரம் உன்னோட பேச வேண்டும் என்று எவ்வளவு முயற்சி எடுத்தேன்....யாரோ நெஞ்சில ஏறி மிதிக்கிற மாதிரி எல்லாம் இருந்துச்சு தெரியுமா...பையித்தியக்காரனைப்போல திரிஞ்சேன் தெரியுமா உமா..ம்....இப்பவும் நான் பையித்தியக்காரன்தான் இன்னும் போய் உனக்கு கதை சொல்லிக்கொண்டிருக்கிறேன்....போனது எல்லாம் போகட்டும்....உனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சது என்று ஒரு திருப்தியில இருந்தேன்...ஆனா...ஐ ஆம் சொறி திரும்பத் திரும்ப உன் கணவரின் ஞாபகங்களை தந்ததிற்கு..
ஆனா ஒரு விசயத்தில் சந்தோசப்படுறன்...உமா..நான் சின்ன வயசில இருந்து உன்னோட பழகியபடியால எனக்குத் தெரிஞ்சது அது இப்ப நிஜமாகயிருக்கு......நீ எப்பவும் என்னைவிட்டுப் போக விரும்பவில்லை என்று...ஆனா நீ தான் என்னை சரியாகப் புரிஞ்சு கொள்ளவில்லை என்று கவலையாகயிருக்கு...

அம்மா பசிக்குது.....என்று ஓடி வந்த குழந்தையை தூக்கிக்கொண்ட உமாவிற்கு கண்ணன் சொல்லுகிறான்..

உமா இப்ப உனக்கு ஏற்பட்ட இந்த வாழ்க்கை ஒரு விபத்து போலத்தான்.இதையே நினைச்சு உன் வாழ்க்கையை நீ கெடுத்திடாதே......உனக்கு எப்பவும் போல மனம் விட்டு பேச, உனக்கும் குழந்தைகளுக்கும் என்ன உதவி தேவைப்பட்டாலும் எந்த நேரம் என்றாலும் எப்பவும் போல இந்தக் கண்ணன் உனக்கு உதவி செய்ய காத்திருப்பான்...இதற்காக நீ யாரிடமும் பொமிஷன் எடுக்கத் தேவையில்ல....என்னோட கலியாண வாழ்க்கை உன்ன நினைச்சதோடேயே நிறைஞ்சு போச்சுது.....சரி...எல்லாரும் வாறாங்க....எதையும் காட்டிக்கொள்ளவேண்டாம் உமா.....நான் வெளியில முரளி வீட்டிற்குப் போறன்..

வெளியில் செல்லுகிறான் கண்ணன்...குழந்தையையும் தூக்கிக் காண்டு தன் பெட்றூமுக்குள் சென்ற உமா கட்டிலில் விழுந்து கேவிக் கேவி அழுகிறாள்..

மீண்டும் குழந்தை..
ம்மா வாம்மா..ம்மா வாம்மா...


கண்ணன் கனடா போனாலும் மறந்திடாதீங்க...அடிக்கடி போனில பேசுங்க...( இது நெருங்கிய நண்பி)

கண்ணா குளிருக்குள்ள கண்ட மாதிரி வெளியில சுத்தாத....கண்ட நிண்ட வருத்தம் வந்திடும்...கவனம்..(இது அம்மாவின் அழுகையோடு )

ம்..

கண்ணா அப்பா பார்க்க அடிக்கடி வருவால்ல..

ம்..கண்டிப்பா..யோசிக்காதீங்க அப்பா..

ஒவ்வொருவராக விடைபெறும் நேரம்....

ஹாய்டா மச்சி இனி எப்படா காணப்போறமோ....வாடா அங்க உழைச்சுக்கொண்டு இங்க வாடா....

ம்..ஓமடா

சித்தப்பா....சித்தப்பா தூக்குங்க..தூக்குங்க...

ம்....வாடா வாடா செல்லம்....

சித்தப்பா இந்தாங்க நைஸ் ரோஸ்...இது உங்களுக்காகவே வீட்டிலயிருந்து பெரிசா இங்க மட்டும் கொண்டு வந்தேன்..ஆனா கொஞ்சம் சின்னனா போச்சே... 

அதுக் கென்னடா செல்லம்...சித்தப்பா இதை பாக்கட்டில வச்சிருக்கேன்..ம்ம்ம்......ச்ச்ச்...

குழந்தையையும் தூக்கிக் கொண்டு தனிநிலவாய் நின்றிருந்த உமாவிடம் சென்றான் கண்ணன்..உமா என்ன யோசிக்கிறாய்..

தலையைக் குனிந்து கொண்டு அழுதாள்..

இங்க வந்ததால எனக்கு இத்தனை நாளா என் மனதை வதைத்துக்கொண்ட கேள்விக்கு விடை கிடைச்சிட்டு....நீ காதல் தியாகம் செய்ததாக நினைச்சுக்கொண்டாய்.....என்னைக் கொலை செய்துவிட்டு...
எப்பவும் உமா நீ சந்தோசமாகயிருக்கவேணும்...எப்ப வேணுமானாலும் என் உதவி தேவைப்பட்டால் தயங்காம கேளு...இனி ஒரு திருமண வாழ்வு எனக்கு எப்போதும் இல்ல...எல்லாம் உன்னோடுதான்....சுகுமாரின் கவலைகளை இந்த பிள்ளைகளின் முகங்களைப்பார்த்து போக்கிக் கொள்ளு...உன்னை இப்படி பொட்டில்லாமல், பூவில்லாமல் பார்க்க என்னால முடியல்ல..ப்ளீஸ் அன்புக்கு அடையாளமாக இந்தப் பூவை வாங்கிக் கொள்ளு...உங்கம்மா உனக்கு பொட்டு வச்சு பூ வச்சு அழகு பார்த்தா, அத விதவை என்ற அடையாளமாக எடுத்துக்கொள்ளாதே...
எப்பவும் நீ சிரிச்சபடி சந்தோசமாக வாழவேணும்...என்றைக்கும் உனக்கும் குழந்தைகளுக்கும் ஆதரவாக இந்தக் கண்ணன் இருப்பான்..எதுவானாலும் மனவிட்டு பேச நானிருக்கேன் உமா..

கையை நீட்டி அந்த ஒற்றை ரோஜாவை வாங்கிக்கொண்டாள்...

ஆ..சித்தப்பா சித்தப்பா அது நான் உங்களுக்கு தந்தன் ...டோண்ட் கிவ் டு அம்மா.. 

இருவரும் சிரித்துக்கொண்டார்கள்..மீண்டும் குழந்தைகளின் கன்னத்தில் முத்தமிட்டபடி செக்குருட்டி கிளியரன்சுக்காக லைனுக்குப் போனான் கண்ணன்...

பின்னால் ஓடிப்போனாள் உமா....

விழிகளில் ஈரம் நிரம்பியிருக்க கண்ணனைப்பார்க்கிறாள்...

கண்ணனும் பார்க்கிறான்...அவன் விழிகளும் கலங்கியது...எல்லோருக்கும் கையசைத்து விடைபெற்றான்...

அவன் கண்கள் இப்பவும் கூறியது உமா உன்மேல் எப்பவும் ஆசைதான்.. 


"முற்றும்"
ஆக்கம் "தனிமதி.."Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies