முருங்கைக்காய் கூட்டு
07 Mar,2014
தேவையான பொருட்கள்:
சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் – 2 கப்
கடலைப்பருப்பு – கால் கப்
பாசிப்பருப்பு – கால் கப்
தேங்காய் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 2
சீரகம் – கால் டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீ ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் – ஒரு டீ ஸ்பூன்
கடுகு – கால் டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.
பிறகு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும். ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம்பருப்பு ,தாளித்து வேகவைத்த பருப்புகலவை ,வேகவைத்த முருங்கைக்காய் சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும் .சுவையான முருங்கைக்காய் கூட்டு ரெடி