ருசி மிகுந்த செய்முறைகள் :

12 Apr,2013
 

அன்னாசி அல்வா


நன்கு பழுத்த
அன்னாசி    -    பாதி
சர்க்கரை    -    ஒன்றரை கிலோ
மைதா    -    300 கிராம்
நெய்    -    300 கிராம்
முந்திரி    -    50 கிராம்
ஏலக்காய் தூள்    -    சிறிதளவு
உணவு மஞ்சள்
வண்ணம்    -    சிறிதளவு.
அன்னாசியை தோல் சீவி 1 சிறிய துண்டு மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, மற்றவற்றை மிக்சியில் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்ததை இன்னும் சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.

மைதாவை நன்கு பிசைந்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஓர் இரவு வைத்திருந்து, மறுநாள் தண்ணீரை வடித்து விட்டு, கீழ்படிந்துள்ள மாவில் மீண்டும் தண்ணீர் ஊற்றிக் கலக்கி பாலெடுத்துக் கொள்ளுங்கள்.

மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சர்க்கரையை பாகு காய்ச்சுங்கள். நூல் பதம் வரும்போது அதில் மைதா பால் ஊற்றிக் கிளறுங்கள். இடையிடையே நெய்யையும் வண்ணப்பொடியையும் சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும்.

எல்லாம் ஒன்றிவரும் போது அன்னாசி ஜூஸை ஊற்றி, ஏலக்காய் தூள், அன்னாசி துண்டுகளைக் கொட்டி கிளறுங்கள். கரண்டியில் ஒட்டாத அளவுக்கு நீர்த்தன்மை வற்றி வரும்போது முந்திரியை வறுத்துச் சேர்க்கவும். அன்னாசி அல்வா ரெடி!











ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்



பால்  -அரை லிட்டர்,
சர்க்கரை  -200 கிராம்,
கார்ன்ஃப்ளார்  -1 டேபிள்ஸ்பூன்,
ஜெலட்டின்  -1 டீஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் (தேவைப்பட்டால்) - 200 மி.லி.,
ஸ்ட்ராபெர்ரி பழங்கள்  -100 கிராம்,
ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ்  -1 டீஸ்பூன்.பாலை அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும், சர்க்கரை சேர்த்து, மறுபடி காய்ச்சவும். ஆறிய பால் சிறிது எடுத்து, அதில் கார்ன்ஃப்ளார் கலந்து தனியே வைக்கவும். தண்ணீரில் ஜெலட்டினை கரைத்து, அடுப்பில் 2 நிமிடங்கள் வைத்து, அதில் கொதித்துக் கொண்டிருக்கிற பால், கார்ன்ஃப்ளார் சேர்க்கவும்.

கார்ன்ஃப்ளார் வெந்து, கலவை ஓரளவு கெட்டியானதும், இறக்கி, ஆற விடவும். ஆறியதும் எசென்ஸும் ஃப்ரெஷ் கிரீமும் சேர்த்து, மிக்சியில் விப்பர் பிளேடில் ஒரு சுற்று ஓட விட்டு, பொடியாக நறுக்கிய அல்லது அரைத்த ஸ்ட்ராபெர்ரி சேர்த்துக் கலந்து, 2 மணி நேரங்களுக்கு ஃப்ரீசரில் குளிர வைக்கவும். ஐஸ்கிரீம் நன்கு செட் ஆனதும் பரிமாறவும்.

தேங்காய் பர்பி  

  


மைக்ரோவேவ் உபயோகித்து மூன்றரை நிமிடங்களில் ருசியான தேங்காய் பர்பி செய்வது எப்படி? இதோ உங்களுக்கான செய்முறை.

தேவையான பொருள்கள்:

தேங்காய்த் துருவல் - 1 கப்
ஏலக்காய் - 3
முந்திரிப் பருப்பு - 8
சர்க்கரை - 1 கப்
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* தேங்காயை நைசாகத் துருவிக் கொள்ளவும்.

* ஏலக்காயையும், பச்சைக் கற்பூரத்தையும் சிறிது சர்க்கரையுடன் சேர்த்து, நைசாகப் பொடித்துக் கொள்ளவும்.

* முந்திரிப் பருப்புகளைச் சிறுதுண்டுகளாக ஒடித்துக் கொள்ளவும்.

* எல்லாப் பொருள்களையும் நன்றாகக் கலந்து ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் மூடாமல் வைக்கவும்.

* 3 1/2 நிமிடங்கள் `மைக்ரோ ஹை'யில் வைக்கவும். நடுவில் ஒருமுறை லேசாகக் கிளறிக் கொடுக்கவும்.

* மைக்ரோவேவிலிருந்து எடுத்த கையோடு, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமமாகப் பரப்பவும்.

* சிறிது சூடு ஆறத் தொடங்கியதும், நெய் தடவிய கத்தியால் 3 செ.மீ. சதுரக் கட்டிகளாக வெட்டவும்.

மூன்றரை நிமிடங்களில் தேங்காய் பர்பி தயார்.


iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
பனை ஓலை கருப்பட்டி கொழுக்கட்டை     

தேவையான பொருட்கள்:

பச்சரிசி-200 கிராம்
கருப்பட்டி-100 கிராம்
துருவிய தேங்காய்-1 கப்
ஏலக்காய்-2 பொடி செய்தது
பனை ஒலை-கெஞ்சம் (சதுர வடிவத்தில் நீளமாக வெட்டியது)

செய்முறை:

* பச்சரிசியை ஊறவைத்து, நிழலில் உலர்த்தி உரலிலிட்டு இடித்து மாவாக்கி சலித்துக் கொள்ளவும்.

* துருவிய தேங்காய், கருப்பட்டி, ஏலப்பொடி கலந்து பூரணம் செய்து கொள்ளவும்.

* மாவை தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

* மாவை உருண்டைகளாக்கி, பூரிபோல தேய்த்து, சதுர வடிவில் ஓலையின் நடுவில் இருக்கும்படியாக வைத்து அழுத்திக் கொள்ளவும்.

* தயாராக இருக்கும் பூரணத்தை நடுவில் வைத்து ஓலையை இருபுறமும் மூடி நூலால் கட்டவும்.

* கட்டியவற்றை தட்டில் அடுக்கி ஆவியில் வேகவைக்கவும்.


iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
பால்கோவா கொழுக்கட்டை     

தேவையான பொருட்கள்:

பச்சரிசி-200 கிராம்


சர்க்கரை சேர்த்த பால்கோவா-50கிராம்
துருவிய தேங்காய்-1 முடி
அவல்-1 டேபிள் ஸ்பூன்
நெய்-1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்-2 பொடி செய்தது
உப்பு-1 சிட்டிகை

செய்முறை:

* அவலை பாலில் ஊற வைக்கவும். தேங்காய்த் துருவலை நெய்யில் வதக்கிக் கொள்ளவும்.

* பச்சரிசியை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் அரை டம்ளர் தண்ணீரை ஊற்றி சூடாக்கி நெய்யும், உப்பும் சேர்த்து மாவைக் கொட்டிக் கிளறி இளந்தீயில் வதக்கிக் கொள்ளவும்.

* மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும் அதை அடுப்பிலிருந்து இறக்கி சிறு சிறு உருண்டைகளாக்கவும்.

* பாலில் ஊறிய அவல், பால்கோவா, தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் கலந்து பூரணம் செய்து கொள்ளவும்.

* இப்போது மாவு உருண்டைகளை பூரிக்கு இடுவது போல உருட்டி, அதன் நடுவில் தயாராக இருக்கும் பால்கோவா பூரணத்தை வைத்து மூடிக் கொள்ளவும்.

* இப்படி பிடித்தக் கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

* பால்கோவா சுவையுடன் இந்தக் கொழுக்கட்டையின் சுவை அபாரமாக இனிக்கும்.

iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
மில்லன் ஹார்ட் பிஸ்கெட்     

தேவையான பொருள்கள்:

மைதா மாவு - 100 கிராம்
அஸ்கா சர்க்கரைப் பொடி - 50 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
உப்பு - 1 சிடடிகை
எசன்ஸ் - சில துளிகள்
அஸ்கா சர்க்கரை குருணை - 2 ஸ்பூன்
முட்டை - 1

செய்முறை:

* முட்டையை அடித்துக் கொள்ளவும். மைதா மாவை சலித்து உப்பு சேர்க்கவும்.

* வெண்ணெய் சர்க்கரைப் பொடி இரண்டையும் கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

* இதில் அடித்து வைத்துள்ள முட்டை 2 ஸ்பூன், மைதா மாவு இரண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து மிருதுவான உருண்டையாகப் பிசைந்து கொள்ளவும்.

* 1/4 இன்ச் கனத்திற்கு சப்பாத்தி போல தேய்த்து பிஸ்கெட் கட்டரில் ஹார்ட் வடிவத்தில் கட் செய்து கொள்ளவும்.

* நெய் தடவிய டிரேயில் பரவலாக பிஸ்கெட்டை அடுக்கி மீதமுள்ள முட்டையை, தட்டையான ஸ்பூனால் அதன் மீது சமமாகத் தடவி, குருணை சர்க்கரையையும் மேலே தூவிக் கொள்ளவும்.

* ஓவனில் 350 டிகிரி பாரன்ஹீட்டில் சில நிமிடம் பேக் செய்யவும்.


iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
சாக்லேட் குக்கீஸ் பிஸ்கெட்    

தேவையான பொருள்கள்:

மைதா மாவு - 250 கிராம்


அஸ்கா சர்க்கரைப் பொடி - 125 கிராம்
வெண்ணெய் - 125 கிராம்
பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
கொக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்

 

பட்டர் க்ரீம் செய்ய:

அஸ்கா சர்க்கரைப்பொடி - 100 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
எசன்ஸ்

- சில துளிகள் இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்

செய்முறை:

* மைதாவை சலித்து வைக்கவும். முட்டையை அடித்துக் கொள்ளவும்.

* வெண்ணெய், சர்க்கரைப்பொடி இரண்டையும் நன்கு அடித்து கலக்கிக் கொள்ளவும்.

* இதில் முட்டை 2 டீஸ்பூன் கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

* இதோடு பால் பவுடர், மைதா மாவு, கொக்கோ பவுடர் மூன்றையும் கலந்து பிசைந்து கொள்ளவும்.

* முறுக்கு பிழியும் நாழியில் அகலமான வரி வடிவ பிஸ்கெட் அச்சைப் போட்டுக் கொள்ளவும்.

* இதில் பிசைந்த மாவைப் போட்டு நெய் தடவிய டிரேயில் நீளமாக பிழிந்து கொள்ளவும்.

* ஓவனில் 350 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடம் பேக் செய்யவும்.

* ஆறிய பிறகு பட்டர் க்ரீமை இரண்டு பிஸ்கெட்டுகளுக்கு இடையில் வைத்து சாண்ட்விச் போல செய்து கொள்ளவும்.


iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
ஜிஞ்சர் பிஸ்கெட்  

   

தேவையான பொருள்கள்:

மைதா மாவு - 250 கிராம்
அஸ்கா சர்க்கரைப் பொடி - 125 கிராம்
வெண்ணெய் - 125 கிராம்
தேன் - 2 டீஸ்பூன்
இஞ்சி சாறு - 1/4 டீஸ்பூன்
ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்
இஞ்சி துருவல் - 4 ஸ்பூன்
இஞ்சிப் பொடி - 1 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/4 ஸ்பூன்
முட்டை - 1

செய்முறை:

* முட்டையை அடித்துக் கொள்ளவும்.

* மைதா மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து நன்கு சலித்துக் கொள்ளவும்.

* வெண்ணெயுடன் சர்க்கரைப் பொடியைச் சேர்த்து அடித்து கலவையாக்கவும்.

* இதில் முட்டை 4 டீஸ்பூன், மைதா மாவு சேர்த்து, கரண்டிக் காம்பால் கலக்கி கொள்ளவும்.

* இஞ்சி துருவல், இஞ்சி சாறு, இஞ்சி பொடி, தேன் சேர்த்து நன்றாகக் கலந்து மிருதுவான கலவையாக்கிக் கொள்ளவும்.

* இந்த மாவை 1/4 இன்ச் கனமான சப்பாத்திகனாக தேய்த்து வட்டவடிவமாக துண்டு செய்து கொள்ளவும்.

* நெய் தடவிய டிரேயில் பரவலாக அடுக்கி போர்க்கினால் மேலே மெதுவாகக் குத்திக்கொள்ளவும்.

* 350 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடம் பேக் செய்து கொள்ளவும்.

iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
அன்னாசிப்பழ கடலைமாவு அல்வா  

   
மணத்துடன் சுவையாக இருக்கும் இந்த அன்னாசிப் பழ கடலைமாவு அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். இதோ உங்களுக்கான செய்முறை.

தேவையான பொருள்கள்:

அன்னாசிப்பழச்சாறு - 1 கப்
கடலைமாவு - 1/2 கப்
அஸ்கா சர்க்கரை - 1/2 கப்
உருக்கிய நெய் - 1/2 கப்
முந்திரி - 7 பருப்புகள்,
திராட்சை - 6
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

* அன்னாசிப்பழச் சாறுடன் கடலை மாவைக் கரைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அஸ்காவுடன் தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைந்ததும், மிதமான தீயில் அன்னாசிக் கலவையை அதில் சேர்த்துக் கிளறுங்கள்.

* அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கி விடுங்கள்.

* இதில் ஏலப்பொடி, முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.


iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
பாசிப்பருப்பு மாம்பழ அல்வா     

மிக நல்ல சுவையுடன் இருக்கும் பாசிப்பருப்பு மாம்பழ அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். செய்ய மிக எளிதானதும் ருசியானதுமாகும்.

தேவையான பொருட்கள்:

மாம்பழத் துண்டுகள் - 1 கப்
முந்திரி - 10
திராட்சை - 10
உருக்கிய நெய் - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
மண்டை வெல்லம் - 100 கிராம் (துருவியது)
தண்ணீர் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
வறுத்த பச்சரிசி மாவு - 2 ஸ்பூன்

செய்முறை:

* வாணலியில் நெய் 6 ஸ்பூன் ஊற்றி சூடானவுடன் முந்திரி, திராட்சையைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

* பிறகு அந்த நெய்யிலேயே பாசிப்பருப்பைச் சேர்த்து வதக்கி, 1 கப் தண்ணீர் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும்.

* மற்றொரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி, அது பொன்னிறமானவுடன், வேகவைத்த பாசிப்பருப்பைக் கொட்டிக் கிளறி, மாம்பழத் துண்டுகளையும் சேர்த்து அளவான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்.

* 1 ஸ்பூன் தண்ணீர், வெல்லப்பாகு - 1/2 கப் சேர்த்துக்கிளறி, 2 நிமிடம் கழித்து பச்சரிசி மாவு தூவிக்கிளறி, கலவை கெட்டியாகி அல்வாப்பதம் வந்தவுடன் 1 ஸ்பூன் நெய், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து சூடாகப் பரிமாறவும்.
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

மாம்பழ அல்வா    

நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும் இந்த மாம்பழ அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். இதோ உங்களுக்கான செய்முறை.

தேவையான பொருட்கள் :

வே‌ண்டியவை

மா‌ம்பழ‌ம் - 2
சர்க்கரை - 1 கப்
பால் - 2 கப்
ஏல‌க்கா‌ய் - 2
நெய் - 1 தே‌க்கர‌ண்டி

செய்முறை :

மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும். சு‌த்தமான வா‌ய் அக‌ண்ட பாத்திரத்தில் ம‌சி‌த்த மா‌ம்பழ‌‌த்துட‌ன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள்.

கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது நெய் சே‌ர்‌க்கவு‌ம். ஏல‌க்கா‌யை ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து சே‌ர்‌க்கவு‌ம். பா‌த்‌திர‌த்‌தி‌ல் தளதளவெ‌ன்று அ‌‌ல்வா வ‌ந்தது‌ம், ‌சி‌றிது நெய் தடவிய த‌ட்டு அ‌ல்லது ‌‌‌ட்ரே‌யி‌ல் அ‌ல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

உ‌ங்களு‌க்கு ‌வேறு ‌நிற‌ங்க‌ள் வே‌ண்டுமெ‌ன்றா‌ல் மா‌ம்பழ‌‌ம், ச‌ர்‌க்கரை, பா‌ல் கலவையுட‌ன் ‌‌நிற‌ப் பொடியை ‌சி‌றிது த‌ண்‌ணீ‌‌ரி‌ல் கல‌ந்து சே‌ர்‌த்து‌‌க் கொ‌ள்ளலா‌ம்.

சுவையான மா‌ம்பழ அ‌ல்வா தயா‌ர்.
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா     

 

இந்த அல்வாவின் சுவை மிக நன்றாக இருக்கும். செய்வதும் மிகவும் எளிதுதான்!

தேவையான பொருள்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/2 கிலோ (குக்கரில் வேகவைத்து தோல் நீக்கவும்)
பொடித்த வெல்லம் - 2 கப்
ஆரஞ்சு ரெட் பவுடர் - 1 சிட்டிகை
நெய் - 3 ஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்

செய்முறை:

* வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை மசித்துக் கொள்ளவும்.

* அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் போட்டு, தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், கிழங்கு விழுது சேர்த்துக் கிளறிக் கொண்டேயிருக்கவும்.

* பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது 5 ஸ்பூன் நெய்விட்டு, கலர், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
கேரட் அல்வா     

சாப்பிட சுவையானதும் உடலுக்கு ஆரோக்கியமானதுமான கேரட் அல்வா செய்வது எப்படி? இதோ எளிய செய்முறை.

தேவையான பொருள்கள்:

கேரட் துருவல் - 1 கப் (துருவிக் கொள்ளவும்)
அஸ்கா சர்க்கரை - 1 கப்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
காய்ச்சிய பால் - முக்கால் கப்
உப்பு - 1/4 சிட்டிகை
முந்திரி - 6 பருப்புகள்
திராட்சை - 6
உருக்கிய நெய் - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
ஆரஞ்சு ரெட்பவுடர் - 1/4 ஸ்பூன்

செய்முறை:

* கேரட் துருவலுடன் தண்ணீர் 2 கப் சேர்த்து அளவான தீயில் வேகவைக்கவும்.

* பாதி வெந்தவுடன் தண்ணீரை வடித்து கேரட் துருவலை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

* ஆறியவுடன், அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* கனமான உருளியில் பால், சர்க்கரை, கேரட் விழுது சேர்த்து, சர்க்கரை கரைந்தவுடன் கைவிடாமல் கிளறி, கெட்டியான சுருள் பதம் வருகையில் உருக்கிய நெய்யை அளவாக ஊற்றிக் கிளறுங்கள்.

* அல்வா பதம் வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, கலர், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

அவ்வளவுதான்... கமகம கேரட் அல்வா தயார்!


iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
பேரீச்சம்பழ அல்வா   

  

ரொம்பவே சத்துள்ள அல்வா இந்த பேரீச்சம்பழ அல்வா. சாப்பிட சுவையானதும் உடலுக்கு ஆரோக்கியமானதும் ஆகும்.

தேவையான பொருள்கள்:

விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 1/4 கிலோ (நீரில் ஊறவைத்துப் பிறகு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்)
அஸ்கா சர்க்கரை - 1/2 கப்
உருக்கிய நெய் - 1/4 கப்
திராட்சை, முந்திரி - தேவையான அளவு
காய்ச்சிய பால் - 4 கப்

செய்முறை:

* அடிப்பிடிக்காத கனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை, பேரீச்சம்பழ விழுது சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.

* அடுப்பை நிதானமாக எரிய விடவும். ஓரளவு கெட்டியானதும் நெய்யை சிறிது சிறிதாக அதில் ஊற்றிக் கிளறி, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதம் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கிவிடுங்கள்.

* நெய் தடவிய தட்டில் அல்வாவைக் கொட்டி அளவான துண்டுகளாக கட் செய்யவும்.


iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
தேங்காய் அல்வா     

அசத்தலான மணத்துடனும் நல்ல சுவையாகவும் இருக்கும் தேங்காய் அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவையான பொருள்கள்:

முந்திரி - 10 பருப்புகள் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
பாதாம் பருப்பு - 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்)
தேங்காய்த் துருவல் - 1/4 கப் (விழுதாக அரைக்கவும்)
சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - 1/2 கப்
திராட்சை - 6

செய்முறை:

* தண்ணிரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.

* அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள்.

* கலவை கெட்டியாகி இறுகி வரும்போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள்.

* பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.

 

iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
பால் அல்வா     

உடலுக்கும்,  உள்ளத்திற்கும் ஆரோக்கியம் தரும், மிகுந்த சுவைமிக்க பால் அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவையான பொருள்கள்:

காய்ச்சிய பால் - 5 கப்
அஸ்கா சர்க்கரை - 1/4 கப்
எலுமிச்சம்பழச் சாறு - 1/2 ஸ்பூன்
உருக்கிய நெய் - 1/4 கப்
சாரப்பருப்பு - 1 ஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
பன்னீர் - 1 ஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் - 6

செய்முறை:

* கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிறளவும்.

* பாலின் அளவு நான்கில் ஒரு பங்கு ஆனவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும்.

* பிறகு நெய்யை ஊற்றி, பாத்திரத்தின் மேல் பாகத்தில் ஒட்டியிருக்கும் பாலாடையையும் வழித்து பாலுக்குள்ளேயே போட்டு, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.

* சூடாகப் பரிமாறவும். ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்தும் பரிமாறலாம்.

 

iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

பலாச்சுளை பாயாசம்
நல்ல சுவையான பலாச்சுளை கொட்டை நீக்கி பொடிப்பொடியாக நறுப்பி 200 கிராம் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு லீட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பலாச்சுளை துண்டுகளைப் போட்டு வேக வைக்கவும்.

முற்றின தேங்காயின் மூன்று முடிகளைத் துருவிக் கொள்ளவும் இதில் 200 மி.லி. வெந்நீர் விட்டு கெட்டியாகத் தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் அதே தேங்காய்த் துருவலில் 200 மி.லி. நீர் விட்டு பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு முடி தேங்காயை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெந்து கொண்டிருக்கும் பலாச்சுளையில் 300 கிராம் நாட்டுச் சர்க்கரையை போட்டு, பலாச்சுளைகளை நன்றாக மசித்துக்கொண்டு 2வது தடவை எடுத்த தேங்காய்ப் பாலைக் கொட்டிக் கொதிக்க விடவும்.

பலாச்சுளைகள் நன்றாக வெந்து பதமானதும் முதலில் பிழிந்த பாலை விட்டுக் கிளறிக் கீழே இறக்கவும்.

பின்னர், பொடிப் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தேங்காயை நெய்யில் செந்நிறமாக வறுத்து பாயாசத்தில் தூவவும்.

ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, மிதமான சூட்டில் பாயாசத்தை பரிமாறவும்.

llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
தேங்காய் அல்வா


தேவையானவை

தேங்காய் - 1
சர்க்கரை - 250 கிராம்
பால் - 1 லிட்டர்
ஏலக்காய் - 6 (பொடி செய்தது)
முந்திரி - 200 கிராம் (அரைப்பதற்கு)
நெய் - 1 ஸ்பூன்
முந்திரி - 50 கிராம் (நெய்யில் வறுத்தது)

செ‌ய்யு‌ம் முறை

தேங்காயையும் முந்திரியையும் தண்ணீர் விட்டு நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அதனோடு அரைத்த விழுதை
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii


கோதுமை ரவா கேசரி  
தேவையானவை

கோதுமை ரவை - 250 கிராம்
வெல்லம் - 250 கிராம்
நெய் - 75 கிராம்
முந்திரிப் பருப்பு - 15
ஏலக்காய் - 4

செ‌ய்யு‌ம் முறை

கோதுமை ரவையை லேசாக வறுத்தெடுத்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வையுங்கள்.

அது நன்றாக வெந்ததும் வெல்லத்தைத் தட்டிப் போட்டுக் கிளறிவிடுங்கள்.

தொடர்ந்து வெல்லப்பாகு கெட்டியானதும் சிறிதளவு நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை அதில் போடுங்கள்.

ஏலக்காயையும் தட்டிப்போட்டு இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு நெய்யை ஊற்றுங்கள்.

தொடர்ந்து கிளறிவிட்டு அந்தக் கலவை கேசரி பக்குவத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

நெய்யில் வறுத்த உலர்ந்த திராட்சையைச் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies