வரலாற்றில் இன்று Today in History டிசம்பர் 27

26 Dec,2013
 

 

வரலாற்றில் இன்று Today in History டிசம்பர் 27

 

* 1831 - சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
 * 1836 - இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் இடம்பெற்றது. 8 பேர் கொல்லப்பட்டனர்.
 * 1845 - பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.
 * 1864 - இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
 * 1918 - ஜேர்மனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.

 * 1922 - ஜப்பானின் ஹோஷோ உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவிக்கப்பட்டது.
 * 1923 - ஜப்பானிய மாணவன் ஒருவன் இளவரசர் ஹிரோஹிட்டோவைக் கொல்ல முயற்சித்தான்.
 * 1934 - பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.
 * 1939 - துருக்கியில் ஏர்சின்கன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
 * 1945 - 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்டது.

 * 1949 - இந்தோனேசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.
 * 1956 - தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
 * 1968 - சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
 * 1978 - ஸ்பெயின் 40 வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் ஜனநாயக நாடானது.
 * 1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.

 * 1985 - ரோம் மற்றிம் வியன்னா விமானநிலையங்களில் பாலஸ்தீன தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
 * 1996 - தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.
 * 1997 - வடக்கு அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து துணை இராணுவக்குழுத் தலைவர் பில்லி ரைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 * 2000 - யாழ்ப்பாணம், தென்மராட்சி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற 8 பொதுமக்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 * 2002 - செச்சினியாவில் மாஸ்கோ சார்பு அரச தலைமையகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 72 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்தனர்.
 * 2007 - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

பெனாசீர் பூட்டோ கொல்லப்பட்ட நாள் (டிசம்பர் 27- 2007)

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்தவர். பெனாசீர் பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக இருமுறை (1988–1990; 1993–1996) பதவி வகித்தார்.  பாகிஸ்தானின் ஒரே பெண் பிரதமர் இவர் மட்டும்தான்.

முன்னாள் பிரதம மந்திரி சுல்பிக்கார் அலி பூட்டோவிற்கும், ஈரானிய-குர்திஷ் வம்சாவழியில் வந்த பேகம் நஸ்ரத் பூட்டோவிற்கும் மூத்த குழந்தையாக பெனசீர் பூட்டோ பிறந்தார். அவரின் தந்தைவழி தாத்தா சர் ஷா நவாஜ் பூட்டோ ஆவார். இவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள பட்டோ காலன் என்ற அவரின் சொந்த ஊரில் இருந்து சுதந்திரத்திற்கு முன்னாள் சிந்தில் உள்ள லார்கானா மாவட்டத்திற்கு வந்தவராவார்.

பூட்டோ, தமது 35வது வயதில், 1988ல் முதன்முறையாக பிரதம மந்திரியாக பதவியேற்றார், ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அப்போதைய பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் குலாம் இசாக் கானின் உத்தரவின் கீழ் 20 மாதங்களுக்கு பின்னர் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 1993ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதேபோன்ற குற்றச்சாட்டுக்களுக்காக, இந்த முறை ஜனாதிபதி பரூக் லெஹரியினால் மீண்டும் 1996ல் நீக்கப்பட்டார். அவர் 1998ல் தானே முன்வந்து நாடு விட்டு துபாய் சென்றார்.

பூட்டோ 18 அக்டோபர் 2007-ல் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார், பின்னர் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்புடன் ஒரு புரிதலுக்கு வந்தவுடன், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது, அத்துடன் அவர் மீதிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் திரும்பப் பெறப்பட்டன.

திட்டமிடப்பட்டிருந்த 2008 பாகிஸ்தான் பொது தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால், அப்போது அவர் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தார், 27 டிசம்பர் 2007-ல் பாகிஸ்தான் நகரமான ராவல்பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஒரு பேரணியில் புறப்பட்ட போது அவர் படுகொலை செய்யப்பட்டார்.

உலக வங்கி உருவாக்கப்பட்ட நாள் (டிசம்பர் 27- 1945)


 வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். உலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர வறுமையைக் குறைப்பதாகும். இதன் அனைத்து முடிவுகளும் வெளி முதலீடு, பன்னாட்டு வணிகம் ஆகியவற்றை முன்னேற்றுவதிலும் முதலீட்டு நிதியை அமைத்துத் தருவதிலும் ஈடுபாடு கொண்டவையாக இருக்க வேண்டும்.

உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய உலக வங்கிக் குழுமத்தின் முதன்மை நிறுவனம் ஆகும். உலக வங்கி உலக வங்கிக் குழுமத்தின் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) மற்றும் பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (IDA) என்ற இரு நிறுவனங்களை மட்டுமே அங்கமாகக் கொண்டது. உலக வங்கிக் குழுமத்தில் இவற்றைத் தவிர மூன்று நிறுவனங்கள் அடங்கியுள்ளன[4] :பன்னாட்டு நிதிக் கழகம் (IFC), பலதரப்பு முதலீட்டு பொறுப்புறுதி முகமை (MIGA), பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள் தீர்வு மையம் (ICSID) உலக வங்கியும் உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டிசியில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன.

தனி நிறுவனமான அனைத்துலக நாணய நிதியம் யும் சேர்த்து உலக வங்கி குழுமம், சிலசமயங்களில் "பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள்" என அழைக்கப்பெறுகின்றன. நியூ ஹாம்சயர் மாநில, பிரெட்டன் உட்ஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் செலாவணி மற்றும் நிதி மாநாட்டிற்கு பிறகு (1 முதல் 22 ஜூலை, 1944) இன்நிறுவனங்களுக்கு இப்பெயர் வந்தது.



Share this:

NEAR REJSE. DK

Tamilmatrimony.world

.

, Kommende Film

Kommende Film

Nearairtravelsdk-DANMARK

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies