ஒரு எஜ­மா­னியும் வேலைக்­கா­ரியும் இரு தேசங்களின் சண்டைக் கதை.!

23 Dec,2013
 

 

ஒரு எஜ­மா­னியும் வேலைக்­கா­ரியும் இரு தேசங்களின் சண்டைக் கதை.!

 

 

அமெ­ரிக்­காவின் அகம்­பா­வமும்,  இந்­தி­யர்­களின் தேசப்­பற்றும் அடிக்­கடி மோதிக் கொள்­வது வழக்கம். அந்த மோதல் இன்று உச்­சத்தைத் தொட்­டி­ருக்­கி­றது. அதற்குக் காரணம், அமெ­ரிக்­காவில் பணி­பு­ரியும் இந்­திய ராஜ­தந்­திரி சம்­பந்­தப்­பட்ட விவ­காரம். தேவ­யானி கொப்­ர­கடே என்ற 39 வய­து­டைய பெண்.

நியூ­யோர்க்­கி­லுள்ள இந்­திய தூத­ர­கத்தில் பிரதி கொன்­சியூலர் ஜெனரல் என்ற உயர் பத­வியை வகிப்­பவர். தமது வீட்டில் பணி­பு­ரி­வ­தற்­காக இந்­தி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரை நியூ­யோர்க்­கிற்கு அழைத்து வந்து சிக்­கலில் மாட்டிக் கொண்­டி­ருப்­பவர்.

இந்த சிக்­கலின் கதை சற்று குழப்­ப­மா­னது. மேலோட்­ட­மாக ஆராய்வோம்  .

தேவ­யானி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியூயோர்க் தூத­ர­கத்தில் பணிக்கு அமர்த்­தப்­பட்டார். தம்­முடன் வீட்டு வேலைக்­காக சங்­கீதா ரிச்சர்ட் என்ற பெண்­ணையும் அழைத்துச் சென்றார்.

ஒரு இராஜ­தந்­திரி என்ற ரீதியில் தமக்­குள்ள சலு­கை­களின் அடிப்­ப­டையில் ராஜ­தந்­திர கடவுச் சீட்டைப் பயன்­ப­டுத்தி சங்­கீ­தாவை அழைத்துச் செல்ல அவரால் முடிந்­தது. தமக்கு வழங்­கப்­பட்ட சம்­ப­ளத்தில் சங்­கீ­தா­வுக்கு திருப்தியில்லை. அவர் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளி­யே­றினார். அவர் கடவுச் சீட்­டையும் சில ஆவ­ணங்­க­ளையும் கொண்டு சென்­ற­தாகத் தெரி­கி­றது.

இரு­வா­ரங்­க­ளுக்குப் பின்னர் தேவ­யா­னிக்கு ஒரு தொலை­பேசி அழைப்பு வந்­தது. மறு­பு­றத்தில் ஒரு சட்­டத்­த­ர­ணி­யுடன் சங்­கீதா. இரு­வ­ருக்கும் இடை­யி­லான சம்­பா­ஷணை தொடர்ந்­தது. தேவ­யா­னியின் முகம் வெளி­றி­யது. புதுடில்லியில் வாழும் தமது தந்­தையைத் தொடர்பு கொண்டார்.

 ஒரு மாதத்­திற்குப் பின்னர், புதுடில்லி நீதி­மன்­றத்தில் தேவ­யா­னியின் சார்­பாக வழக்­கொன்று தொடுக்­கப்­பட்­டது. அந்த வழக்கை ஆராய்ந்த மேல் நீதி­மன்றம், சங்­கீ­தா­விற்கு எதி­ராக இடைக்­கால தடை உத்­த­ரவைப் பிறப்­பித்­தது. இந்த உத்­த­ரவு,  தமது  தொழில் உடன்­ப­டிக்­கையின் அடிப்­ப­டையில் தேவ­யா­னிக்கு எதி­ராக சங்­கீதா அமெ­ரிக்­காவில் வழக்குத் தொடுப்­பதை தடை செய்­கி­றது.

நாட்கள் கழிந்­தன. டிசம்பர் 12ஆம் திகதி தேவ­யானி அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டார். சங்­கீ­தாவும், அவ­ரது கண­வரும் வழங்­கிய வாக்­கு­மூ­லங்­களின் அடிப்­ப­டையில் அமெ­ரிக்க இராஜ­தந்­திர பாது­காப்புச் சேவையின் விசேட முகவர் ஊடாக  அமெ­ரிக்க நீதி­ய­மைச்சில் தாக்கல்  செய்­யப்­பட்ட முறைப்­பாட்டின் அடிப்­ப­டையில் கைது நிகழ்ந்­தது.

இங்கு சங்­கீ­தாவின் கணவர் எப்­படி சம்­பந்­தப்­பட்டார் என்று கேட்டால், அமெ­ரிக்க அர­சாங்கம் வழங்­கிய விசாவின் அடிப்­ப­டையில் சங்­கீ­தாவின் குடும்­பத்­த­வர்கள் சில தினங்­க­ளுக்கு முன்னர் நியூயோர்க்கை அடைந்­தி­ருந்­தனர். கைது செய்­யப்­பட்ட தேவயானி சற்று விசே­ட­மான முறையில் சோத­னை­யி­டப்­பட்டார்.

பின்னர் பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்டார். எஜ­மானி தேவ­யா­னிக்கும் பணிப்பெண் சங்­கீ­தா­விற்கும் இடை­யி­லான முறு­கலின் சம்­பவக் கோர்வை இது தான். இந்தக் கோர்­வையில் நிகழ்ந்த ஒவ்­வொரு சம்­ப­வத்தின் பின்­பு­லத்­திலும் பல முரண்­பா­டுகள்.

ஆரம்­பத்தில் குறிப்­பிட்­ட­வாறு அமெ­ரிக்­காவின் அகம்­பா­வத்­தையும், இந்­தி­யாவின் விட்டுக் கொடுக்க முடி­யாத தேசப்­பற்­றையும் ஒன்­று­ட­னொன்று மோத­விட்டுப் பார்க்கும் முரண்­பா­டுகள் என்று கூறினால், அதில் தவ­றேதும் இருக்க முடி­யாது.

 முத­லா­வது முரண்­பாட்டின் அடித்­தளம் தேவ­யா­னியின் கைது. இரண்­டா­வது முரண்­பாட்டின் அடித்­தளம் தேவ­யானி கைது செய்­யப்­பட்ட விதம். மூன்­றா­வது முரண்­பாட்டின் அடித்­தளம் கைதுக்­கான காரணம்.

முத­லா­வது முரண்­பாட்டை ஆராய்வோம் . தேவ­யானி சாமான்ய பிரஜை அல்ல. வியன்னா  சாச­னத்தின் மூலம் தூது­வர்­க­ளுக்கும், இராஜ­தந்­தி­ரி­க­ளுக்கும் கிடைக்­கக்­கூ­டிய சலு­கைகள் உறுதி செய்­யப்­பட்ட உயர்­மட்ட பிர­தி­நிதி. அவரை அமெ­ரிக்கா எவ்­வாறு கைது செய்ய முடியும் என்­பது இந்­தி­யர்­களின் கேள்வி. அமெ­ரிக்க சட்­டத்­த­ரணி ப்ரீத் பராரா என்­பவர் தமது தரப்பு நியா­யத்தை விளக்­கினார்.

தேவ­யானி இந்­திய இராஜ­தந்­தி­ரி­யாக இருந்­தாலும் அவர் அமெ­ரிக்­காவின் சட்­டங்­களை மீறினார் என்­பது பரா­ராவின் வாதம். இராஜ­தந்­திர நட­வ­டிக்­கையின் பிர­தி­ப­ல­னாக ஒருவர் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு எதி­ராக மாத்­தி­ரமே வியன்னா சாசனம் பாது­காப்பு அளிக்­கி­றது. அந்த சாசனம் தனிப்­பட்ட செயல்­களின் அடிப்­ப­டையில் இராஜ­தந்­தி­ரி­யொ­ரு­வ­ருக்கு விலக்­க­ளிப்பு வழங்­கு­வ­தில்லை என அவர் வாதிட்டார். ஐந்து அம்­சங்­களை முன்­வைத்து பராரா வெளியிட்­டுள்ள அறிக்கை இந்­தியத் தரப்பை பெரிதும் ஆத்­தி­ரப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பது வேறு விடயம்.

அடுத்­த­தாக இரண்­டா­வது முரண்­பாடு. தமது பிள்­ளையின் முன்னால் பொது இடத்தில் தம்மை விலங்­கிட்டு இழுத்துச் சென்ற அமெ­ரிக்க அதி­கா­ரிகள், சோத­னை­யென்ற பெயரில் இனி­யில்லை என்று கீழ்த்­த­ர­மாக நடத்­தி­னார்கள் என்று தேவ­யானி சாடினார்.

ஒரு இரா­ஜ­தந்­தி­ரியின் கைகளில் எவ்­வாறு விலங்­கி­டலாம் என்­பது இந்­தி­யாவின் சார்பில் முன்­வைக்­கப்­பட்ட முக்­கி­ய­மான கேள்வி . அதை விட பிரச்சி­னை­யாக அமைந்­தி­ருப்­பது தேவ­யானி மீதான சோதனை தான். தமது ஆடை களை­யப்­பட்­டது  மாத்­தி­ர­மன்றி,  தம்­மீது ஊயஎவைல ளுநயசஉh என்ற சோத­னையும் நடத்­தப்­பட்­ட­தாக தேவ­யானி குறிப்­பிட்டார். இது சற்று விவ­கா­ர­மான சோதனை.

ஒரு­வ­ரது உடலில் எங்­கெல்லாம் மறை­வான பாகங்கள் இருக்­கின்­ற­னவோ, அந்தப் பாகங்கள் சோத­னை­யி­டப்­படும். டோர்ச் போன்ற கரு­விகள் ஊடாக மறை­வான பாகங்கள் (வாய், காது, அந்­த­ரங்க உறுப்­புகள்) மீது வெளிச்சம் பாய்ச்சும் சோதனை முறையும் உள்­ளது. அத்­த­கைய பாகங்­க­ளுக்குள் விரலை நுழைத்து சோத­னை­யிடும் முறையும் இருக்­கி­றது.
 
இந்­திய கலா­சா­ரத்தின் அடிப்­ப­டையில் ஆராய்ந்தால், இவற்றில் எத்­த­கைய சோத­னையும் ஒரு பெண்­ணிற்கு இழைக்­கக்­கூ­டிய ஆகக்­கூ­டு­த­லான கொடு­மை­யாக அமையும் என்­பதில் சந்­தேகம் கிடை­யாது. இந்­தி­யாவில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் கொடும்­பா­வியை எரிக்கும் அள­விற்கு கோபக் கணல் தூண்­டப்­பட்­ட­தென்றால், அதற்கு தேவ­யானி மீதான ஊயஎவைல ளுநயசஉh சோதனை ஏற்­ப­டுத்­திய எதிர்­வி­ளை­வுகள் தான் காரணம் எனலாம்.

இவ்­வகை சோத­னையின் நோக்கம், சந்­தேக நபர் மறைத்து வைத்­தி­ருக்­கக்­கூ­டிய ஆயு­தங்கள் அல்­லது போதைப் பொருளைக் கண்­டு­பி­டிப்­பது தான். ஒரு இராஜ­தந்­திரி மீது அத்­த­கைய சோத­னைகள் தேவை தானா என்­பது இந்­திய தரப்பின் கோரிக்கை. இங்­கேயும் அமெ­ரிக்­காவின் பதிலில் அகம்­பாவம் தொனிப்­பதைக் காணலாம். ஆடை களைந்து சோத­னை­யி­டு­வது அமெ­ரிக்­காவின் சட்டம் எனவும், அதில் ஏழை-­, ப­ணக்­காரர், அமெ­ரிக்­க­வர்-­வெ­ளி­நாட்­டவர் என்ற பேதம் கிடை­யாது எனவும் ப்ரீத் பராரா குறிப்­பி­டு­கிறார்.

 இனி மூன்­றா­வது முரண்­பாட்டை ஆரா­யலாம். அமெ­ரிக்க அதி­கா­ரிகள் தேவ­யா­னியைக் கைது செய்­வ­தற்­காக இரு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தார்கள்.

விசா மோசடி என்­பது முத­லா­வது குற்­றச்­சாட்டு. சங்­கீ­தா­விற்கு குறைந்த சம்­பளம் வழங்­கினார் என்­பது இரண்­டா­வது குற்­றச்­சாட்டு. சங்­கீதா தெரி­வித்த கருத்­துக்­களின் அடிப்­ப­டையில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. தம்மை இந்­தி­யாவில் இருந்து அழைத்து வந்த சமயம், (இந்­திய நாண­யத்தின் படி) முப்­ப­தா­யிரம் ரூபா தான் சம்­பளம் என்று தேவ­யானி உறு­தி­ய­ளித்­த­தாக சங்­கீதா முறை­யிட்­டி­ருக்­கிறார்.

ஆனால், கடந்த ஆண்டு ஒக்­டோபர் மாதம் சங்­கீ­தா­விற்கு விசா கோரி விண்­ணப்­பித்த ஆவ­ணங்­களில் அவ­ரது மாதாந்த சம்­பளம் 4,500 டொலர் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக சங்­கீதா சாடு­கிறார். சம்­பளம் வழங்­கு­வ­தற்­காக மற்­றொரு தொழில் உடன்­ப­டிக்­கையை ஏற்­ப­டுத்­திய தேவ­யானி, அது பற்றி வெளியே சொல்­லக்­கூ­டா­தென உத்­த­ர­விட்­ட­தா­கவும் தமது முறைப்­பாட்டில் சங்­கீதா குறிப்­பிட்­டுள்ளார்.

மாதாந்தம் 30,000 என்ற அடிப்­ப­டையில் ஆராய்ந்தால், மணித்­தி­யா­லத்­திற்கு சங்­கீ­தா­விற்கு கிடைக்கும் தொகை 3.31 டொலர். இது அமெ­ரிக்க விதி­மு­றை­களின் பிர­காரம் இராஜ­தந்­தி­ரி­களின் பணிப்­பெண்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய தொகையை விடவும் மிகக் குறை­வா­ன­தென அமெ­ரிக்க அரசு குற்­றஞ்­சாட்­டு­கி­றது. ஆனால், சங்­கீதா பொய் சொல்­கிறார் என்று தேவ­யா­னியின் தந்தை குறிப்­பி­டு­கிறார்.

அவர் புது­டில்லி மேல் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சங்­கீ­தா­விற்கு மணிக்கு 8.75 டொலர் என்ற அடிப்­ப­டையில் சம்­பளம் கொடுத்து, அந்தத் தொகையில் 30,000 ரூபாவை நோய்­வாய்ப்­பட்ட கண­வ­னுக்கு அனுப்பி வைப்­பது என்ற உடன்­ப­டிக்கை எட்­டி­ய­தா­கவும்; குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த முரண்­பாட்டின் அடிப்­ப­டையில் எழுந்த சட்டச் சிக்­கல்­க­ளையும் பேசி­யாக வேண்­டி­யி­ருக்­கி­றது. சங்­கீதா அமெ­ரிக்­காவின் அனு­ச­ர­ணை­யுடன் நிவ்யோர்க் சென்ற போதிலும், சம்­பளப் பிரச்சினை சங்­கீ­தா­விற்கும் – தேவ­யா­னிக்கும் இடைப்­பட்­ட­தாகும்.

இந்தப் பிரச்சி­னையைத் தீர்ப்­ப­தற்கு இந்­திய நீதி­மன்­றத்தில் வழக்குத் தொடுக்­கப்­பட்டு, சங்­கீ­தா­விற்கு எதி­ராக இடைக்­கால தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய பின்­ன­ணியில், அமெ­ரிக்­காவின் அர­சாங்கம் சங்­கீ­தாவின் கண­வ­ருக்கு எவ்­வாறு விசா வழங்க முடியும் என்­பது இந்­திய தரப்பின் கேள்வி. இது பற்றி இந்­திய அர­சாங்கம் உத்­தி­யோ­கபூர்வமான அறிக்­கை­யொன்றை வெளியிட்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவின் நட­வ­டிக்­கையை இந்­தி­யாவின் நீதி நடை­முறை மீதான  தலை­யீ­டென அறிக்கை விப­ரித்துச் செல்­கி­றது. அதற்கு பதி­லாக அமெ­ரிக்கா விடுத்­துள்ள அறிக்­கையில் தேவ­யானி மீதான குற்­றச்­சாட்­டுக்கள் வாபஸ் பெறப்பட மாட்­டா­தெனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது இந்­தி­யர்கள் சுய­கௌ­ரவம் மீது கொண்­டுள்ள பற்­று­த­லுக்கும், அமெ­ரிக்­கர்­களின் அகம்­பா­வத்­திற்கும் இடை­யி­லான போரின் மற்­றொரு பரி­மாணம் எனலாம்.

இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான கயி­றி­ழுப்பில் மறைக்­கப்­படும் விட­யங்கள் ஏராளம். உணர்ச்­சி­களின் மேலீட்டால் மிகைப்­ப­டுத்­தப்­படும் அல்­லது திரி­பு­ப­டுத்­தப்­படும் விட­யங்­களும் ஏராளம். இந்த ஒளிவு மறை­வு­க­ளிலும், மிகைப்படுத்­தல்­க­ளிலும் ஊட­கங்­களின் பங்கு அளப்­ப­ரி­யது.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில், இது இராஜ­தந்­தி­ரி­யாகத் திகழும் எஜ­மா­னி­யொ­ருவர் ஏழைப் பணிப்­பெண்ணைக் கொடு­மைப்­ப­டுத்­திய கதை­யாக சித்­த­ரிக்­கப்­ப­டு­கி­றது. இன்று தேவ­யா­னிக்கு எதி­ராக கொதித்­தெழும் இந்­தியா, சங்கீ­தா­விற்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்­காக மௌனம் காப்­பது ஏனென அமெ­ரிக்க ஊட­கங்கள் சாடு­கின்­றன. 

கடந்த ஜூன் மாதம் தேவ­யா­னியின் வீட்டில் இருந்து வெளி­யே­றிய சங்­கீதா, சரி­யாக அமெ­ரிக்க ராஜ­தந்­திர பாது­காப்பு சேவையை அடைந்­தது எவ்­வாறு என்­பதை முத­லா­வது கேள்­வி­யாகக் கருத முடியும்.

 இரு வாரங்­க­ளுக்குப் பின்னர் தமது சட்­டத்­த­ர­ணி­யுடன் தேவ­யா­னியைத் தொடர்பு கொண்ட சங்­கீதா, 10,000 டொலர் ரொக்கப் பணத்­துடன் வழ­மை­யான அமெ­ரிக்க கடவுச் சீட்டை பெற்றுத் தரு­மாறு நிபந்­தனை விதித்­த­தாக இந்­திய ஊட­கங்கள் அறி­வித்­துள்­ளன. புது­டெல்லி நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்த மனுவில் தேவ­யா­னியின் தந்­தையும் இதே விட­யத்தைக் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இங்கு இன்­னொரு விஷ­யத்­தையும் கவ­னிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. சங்­கீதா நியூயோர்க்கில் தலை­ம­றை­வா­னதை அடுத்து இந்­திய தரப்பில் தாக்கல் செய்த இரு முறைப்­பா­டுகள் தொடர்பில் அமெ­ரிக்கா முறை­யாகக் கையா­ள­வில்லை என்று இந்­திய ஊட­கங்கள் அறி­வித்­துள்­ளன.

சங்­கீதா காணா­மற்­போ­னமை பற்­றியும், அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் தேவ­யா­னி­யிடம் கப்பம் கோரி­யமை பற்­றியும் தாக்கல் செய்த முறைப்­பா­டு­களை அமெ­ரிக்கா கவ­னிக்­கா­தது ஏன் என்ற கேள்­வி­யி­லுள்ள நியா­யத்தை மறுக்க முடியாது.

சதீஸ் கிருஸ்Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies