வைல- கிறீன்ஸ்ரெ-டென்ராம் தமிழகக் கலைஞர்களின் வெள்ளிவிழாகள்

16 Dec,2013
 

வைல- கிறீன்ஸ்ரெ-டென்ராம்  தமிழகக் கலைஞர்களின் வெள்ளிவிழாகள்

 


டென்மார்க் வைல நகரத்தில் உள்ள வைல டேனிஸ் தமிழ் நட்புறவுக்கழகத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாவில் தமிழகத்தில் இருந்து இரண்டு சிரிப்புக் கலைஞர்கள் பங்கேற்று அவையை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர்.

இவர்களில் ஒருவர் வடிவேலு பாலாஜி, மற்றவர் பல்குரல் கலைஞர் விஜய் டி.வி புகழ் சேது, இவர் நிகழ்ச்சிகளையும் பல்குரலில் தொகுத்து வழங்கினார்.

வடிவேலு பாலாஜி மக்களோடு மக்களாக இணைந்து வடிவேலு பாணியில் உடை உடுத்தி தனது காமடி வெடிகளை வீசி, பல தடவைகள் அரங்கைக் கவர்ந்தார்.

சேது தனது தொலைக்காட்சித் தயாரிப்பு அனுபவங்களை பல்குரல் மிமிக்கிரி பண்ணிக் கூறியதுடன் பல சிறப்பு நிகழ்ச்சிகளையும் செய்து காட்டினார்.

கௌரி வசந்தி தயாராஜனின் திருக்கோணேஸ்வர நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கிய பரத நாட்டியங்கள், உள்ளிட பல்வேறு நடன நிகழ்வுகள் தொடர்ந்து இடம் பெற்றன.

நடனங்களில் இன்னொரு சிறப்பம்சமாக விஜய் டீ.வியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நடனப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்ற பிரேம் கோபாலும் பாரியாரும் இணைந்த நடனமும் இடம் பெற்றது.

இவருடைய மாணவர்கள் வழங்கிய பல நடனங்கள் விழாவிற்கு புது மலர்ச்சி கொடுத்தன.

திரைப்பட நடிகர், இசையமைப்பாளர் வஸந்த் குழுவினர் வழங்கிய சிறப்புப் பாடல், உரை நிகழ்ச்சி காதல் என்ற கருத்தை மையமாக வைத்து அரங்கப்படுத்தப்பட்டு பாராட்டுப் பெற்றது.

வைல திடீர் நாடக மன்றம் வழங்கிய நித்தி சின்னையா அவர்களின் நாடகம் அவையை வயிறு குலுங்க சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்ததோடு ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பழைய நினைவுகளுக்கும் அழைத்துச் சென்றது.

சங்கத்தின் தலைவர் ஸ்ரீ இளங்கோ, உளவியலாளர் திரு. செ.கதிர்காமநாதன், ஆசிரியர் கி.செ.துரை உள்ளிட பலர் உரையாற்றினர்.

நூல் வெளியீடு உட்பட பல்வேறு கலைத்துவமான நிகழ்வுகளுடன் பி.ப. 14.00 மணிக்கு ஆரம்பித்து, அரங்கு நிறைந்த நிகழ்வாக நள்ளிரவு 23.00 மணிவரை வெற்றிகரமாக நடந்தேறியது.

சங்க உறுப்பினர், நிர்வாகத்தினர் அனைவரும் இணைந்து கல்வியில் வெற்றிபெற்ற மாணவரை கௌரவித்தது விழாவிற்கு முத்தாய்ப்பாய் அமைந்தது.


கிறீன்ஸ்ரெல் தமிழர் கலாச்சார கலையகம் நத்தார் விழா

 

கிறீன்ஸ்ரெல் நகரத்தில் உள்ள தமிழர் கலாச்சார கலையகம் நத்தார் விழா நிகழ்வுகளை நேற்று சனிக்கிழமை மாலை வெகு விமரிசையாக நடாத்தியுள்ளது.

கலந்து கொண்ட குடும்பங்களுக்கு விசேட நத்தார் பரிசுகளும் வழங்கப்பட்டன.

நத்தார் கொண்டாட்டம் ஒரு கிறீத்தவ விழாவாக இருந்தாலும் இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையினர் இந்து சமயத்தவரே என்பதும் கவனிக்கத்தக்கது.

மதங்கள் கடந்து மக்களிடையே நல்லுறவு வளர்ப்பதில் நத்தார் விழா முக்கியமான பங்களிப்பு செய்து வருகிறது.

இதுபோல டென்மார்க்கில் உள்ள பெருந்தொகையான தமிழ்ச் சங்கங்கள் நத்தார்விழா ஏற்பாடுகளை வேகமாக செய்து வருகின்றன.

 


டென்ராம் கழகம் நத்தார் விழா ஏற்பாடுகள்


வருடாவருடம் நத்தார் விழா கொண்டாட்டங்களை விமரிசையாக நடாத்திவரும் கேர்னிங் டென்ராம் விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டும் வழமைபோல அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

சென்ற ஆண்டு கழக உறுப்பினருக்கு மிகச்சிறந்த நத்தார் இரவு உணவு விருந்துபசாரத்தை நடாத்தி அசத்தலான விருந்தென பாராட்டப்பட்ட கழக நிர்வாகம் இந்த ஆண்டு அதைவிட சிறப்பாக செய்வதற்கு களமிறங்கியுள்ளது.

ஒரு டேனிஸ் நத்தாரில் வழங்கப்படும் உணவு கலாச்சாரத்தை கடைப்பிடித்து வருவதும் கவனிக்கத்தக்கது.

எதிர்வரும் 28ம் திகதி டிசம்பர் மாதம் டென்ஸ்க் மெற்றலில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது.

மாலை ஆறுமணிக்கு ஏப்ல ஸ்கீவ வழங்கப்படுவதுடன் விழா களைகட்ட இருக்கிறது.

ஆடல், பாடல், நத்தார் பரிசு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..

பரிசுப்பொருள் விளையாட்டும் இடம் பெறுவதால் 10 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் குறைந்தது 10 குறோணர் பெறுமதியான பொருளை பார்சல் செய்து கொண்டுவருவது மிக முக்கியம் அம்மா..

டென்ராம் அங்கத்தவர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் இதில் பங்கேற்க முடியும் எதிர்வரும் 21 டிசம்பருக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும், அல்லது சிவமோகன் அவர்களின் 21765989 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்க.


 

 

வைலை டேனிஸ் தமிழ் நட்புறவு கழகத்தின் வெள்ளி விழா மலர்

 

டென்மார்க் வைல நகரத்தில் கடந்த 25 வருடங்களாக சிறப்பாக இயங்கி வரும் டேனிஸ் தமிழ் தோழமை ஒன்றியம் தனது வெள்ளிவிழாவை நேற்று வைல நகரத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடியது.

இந்த நிகழ்வில் சங்கத்தின் வெள்ளி விழா நினைவுகளை பகிர்ந்து கொள்ளுமுகமாக நூல் ஒன்றும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

ஒன்றியம் ஏன் என்ற பார்வையுடன் தலைவர் ஸ்ரீ இளங்கோ அவர்கள் எழுதிய முகமன் கட்டுரையுடன் இந்த மலர் பல்வேறு சிறந்த ஆக்கங்களையும், வண்ணப்படங்களையும் தாங்கி நிற்கிறது.

நட்பாலும், சகோதரத்துவத்தாலும் வரையப்பட்ட கால் நூற்றாண்டு வரலாறு என்ற கட்டுரையில் இதுவரை டேனிஸ் மக்களும் தமிழ் மக்களும் இணைந்து தொட்ட சிகரங்களை அடையாளப்படுத்தியுள்ளார் கி.செ.துரை.

இன்று டென்மார்க்கில் மற்ற எல்லா இனங்களையும் முந்தி டேனிஸ்காரருக்கு அடுத்தபடியாக கல்வி, பொருளாதாரம், கலைகள், இணைவாக்கத்தில் முன்னேறிய தமிழரின் வெற்றி அதில் படிமுறையாகப் பதியப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் போராட்டமும் அதற்கமைய புலம் பெயர் தமிழர் ஆற்ற வேண்டிய பணிகளும் என்ற கட்டுரையில் பாலசுந்தரம் நிர்மானுசன் தாயகத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகளை செப்பமாக, காரண காரியங்களுடன் எடுத்துரைத்துள்ளார்.

தேசிய நீரோட்டத்துடன் இணைந்து வைல டேனிஸ் தமிழ் தோழமை ஒன்றியத்தின் 25 வருடகால வேலை என்ற தலைப்பில் றே. வாசிங்டன் விபரமான கட்டுரையை படைத்துள்ளார்.

அதுபோல புலம் பெயர் தமிழர்களும் அரசியல் தெளிவு நிலையும் என்ற கட்டுரையை அகரமுதல்வன் எழுதியுள்ளார்.

மேலும் பொன். மகேஸ்வரன், ராஜிலோஜன், உளவியலாளர் கதிர்காமநாதன் எழுதிய ஆக்கங்களும் நூலை அலங்கரிக்கின்றன.

இந்த நூலை வெளியிட்டு, புலம் பெயர் மக்களின் இணைவாக்கம் தொடர்பாக வைல நகரத்தில் நடைபெற்ற கருத்தரங்கை அடியொற்றி உளவியலாளர் திரு. கதிர்காமநாதன் உரையொன்றை ஆற்றி, நூலின் சிறப்பை அவைக்கு எடுத்துரைத்தார்.

நூல் இலவசமாக பார்வையாளருக்கு வழங்கப்பட்டது.

 

tks.s.durai



Share this:

NEAR REJSE. DK

ayngaran.dk

.

DENMARK

Kommende Film danmark

DANMARK TAMIL FILM

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies