கலைஞர் சண்ணின் இரு கில்லாடிகள் 7ம் திகதி கொல்ஸ்ரபோவில்
29 Nov,2013
கலைஞர் சண்ணின் இரு கில்லாடிகள் 7ம் திகதி கொல்ஸ்ரபோவில்
டென்மார்க் கொல்ஸ்ரபோ நகரில் வாழ்ந்துவரும் கலைஞர் சண்ணின் இயக்கத்தில் உருவான இரு கில்லாடிகள் திரைப்படம் எதிர்வரும் 07.12.2013 சனிக்கிழமை 10.30 மணிக்கு கொல்ஸ்ரபோ நகரில் உள்ள ஸ்கெலா திரையரங்கில் காண்பிக்கப்பட இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தை அனைவரும் கண்டுகளிப்பதற்காக இலவசமாகவே காண்பிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்ய விரும்புவோர் ஆசனத்திற்கு 10 குறோணர் முன்பணம் செலுத்த வேண்டும்.
பல திரைப்படங்களை இலங்கையிலும் டென்மார்க்கிலும் இயக்கிய சண் தமிழகக் கலைஞர்களுடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார்.
அனைவரும் பார்த்து மகிழவேண்டிய திரைக்காவியம்.