வரலாற்றில் இன்று
TODAY IN HISTORY நவம்பர் 9
1793 - கிறிஸ்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.
1799 - பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட்
பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
1872 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் ந்கரில் களஞ்சிய சாலை
ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் பொஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது. 776
கட்டடங்கள் அழிந்து 20 பேர் கொல்லப்பட்டனர்.
1887 - ஐக்கிய அமெரிக்கா ஹவாயின் பேர்ள் துறைமுகத்தின்
உரிமையைப் பெற்றது.
1913 - மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.
1921 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவை
விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1927 - சீனாவுக்கே உரிய பாண்டா கரடி கண்டுபிடிக்கப்பட்டது
1937 - ஜப்பானியப் படைகள் சீனாவின் ஷங்காய் நகரைக் கைப்பற்றினர்.
1938 - ஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பலியான யூதர்களின் எண்ணிக்கை
ஆறு மில்லியன்
1953 - கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1965 -பிரிட்டனில் மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாள்.
1967 - நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1985 - சதுரங்க உலகக்கிண்ணப் போட்டியில் காரி கஸ்பரோவ்
அனத்தோலி கார்ப்பொவைத் தோற்கடித்து உலகின் முதலாவது வயது
குறைந்த சதுரங்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
1989 - பனிப்போர்: கம்யூனிசக் கிழக்கு ஜேர்மனி பேர்லின் சுவரைத் திறந்து
விட்டதில் பலர் மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.
1990 - நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
1994 - டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium) என்ற தனிமம்
கண்டுபிடிக்கப்பட்டது.
2000 - உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில்
இருந்து பிரிக்கப்பட்டது.
2005 - வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம்
கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது.