ஏழை பெண்களை சீரழிக்கும் உல்லாசப்பயணிகள்

19 Oct,2013
 

ஏழை  பெண்களை சீரழிக்கும் உல்லாசப்பயணிகள்


ஏழ்மை மிகுந்த ஆசிய நாடுகளுக்கு உல்லாசப் பயணிகளாகச் சென்று, அங்குள்ள சிறு பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் மேலை நாடுகளின் உல்லாசப் பயணிகளின் துர் நடத்தைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதற்கெனவே ஒரு கூட்டம் வெளிநாடுகளில் இருந்து ஏழை நாடுகளை நோக்கி பறப்பெடுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறு பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் ஒரே நோக்கத்திற்காகவே இரகசியமான இந்த உல்லாசப் பயணங்கள் நடைபெற்று வருகின்றன.

எந்தெந்த நாடுகளில் மலிவான விலையில் விபச்சாரம் கிடைக்கிறது, போலீசாரின் கெடுபிடி குறைவான இடங்கள் எவை என்ற தகவல்களும் இந்தப் பயணிகளிடையே இரகசியமாக பரிமாறப்படுகிறது.

இந்தவகையில் ஏழ்மை மிக்க கம்போடியாவுக்கு உல்லாசப் பயணிகளாகச் சென்று பெரும் சீரழிவைச் செய்து வருகிறார்கள்.

இத்தகைய பயணங்களை மேற்கொள்வோர், இவர்களுக்கான இரகசிய தகவல்கள் பரிமாறப்படும் இணையத் தளங்கள் போன்றவை குறித்த துப்பறியும் பணிகளை சுவீடிஸ் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் டென்மார்க்கில் இருந்தும் இப்பகுதிகளுக்கு பயணிப்போர் குறித்த கண்காணிப்புக்களும் ஆரம்பித்துள்ளன.

இதுகுறித்து டென்மார்க் யு.என்.ஐ.சி.எச்.ஆர் பிரதிநிதி பெரும் கவலை வெளியிட்டுள்ளார்.

மிகவும் கேவலமான, வெட்கக்கேடான இந்தச் செயலைச் செய்து, ஏழைச் சிறுமிகளின் வாழ்வை சிதைப்பது கண்டிப்பாக சட்டத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

டென்மார்க்கில் ஓடும் ஐ.சி.4 ரயில்வண்டிகள் போடும் சத்தம் வழமையைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது.

ஐ.சி – 3க்கும் ஐ.சி. 4க்கும் இடையே ஒப்பீடு செய்தால் ஐ.சி 4 போடும் சத்தம் கூடுதல் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.

சாதாரணமாக ஒரு ரயில்வண்டி போடும் சத்தத்தைவிட இதனுடைய சத்தம் அதிகமாக இருப்பதால் பயணிகளுக்கு பலத்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக இன்ஜினீயர் பத்திரிகை நடாத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரு ரயில் வண்டியின் ஒலி அளவு 75 டி.பி ஆகவும், இன்னொன்றின் ஓலம் 65 டி.பி ஆகவும் இருந்துள்ளது.

மனிதர்களுடைய காதுகள் இதைப்போல இன்னொரு மடங்கு ஒலியைக் கேட்கக் கூடியது, இருப்பினும் அந்தக் காலத்து கரிக்கோச்சி போடும் சத்தத்தை இந்தக்கால ஐ.சி.4 சத்தம் போட்டால் யாரால் பொறுக்க முடியும்.

ஏற்கெனவே ஐ.சி. 4 ரயில்வண்டிகளின் பிரேக் கட்டைகளில் பிரச்சனை ஏற்பட்டு அவற்றின் பாவனையை முற்றாகவே நிறுத்துவதலாம் என்று கருதப்பட்டது.

அதன் பின்னர் இந்த ரயில் வண்டிகளின் சேவையைத் தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இப்போது அது போடும் ஒலி பிரச்சனையாகியுள்ளது.


வன்முறையாளருக்கு பத்து ஆண்டுகள் சிறை


இருபது வயது கொண்ட இரண்டு வன்முறைக் குழு உறுப்பினர்களுக்கு கொலஸ்ரப் நீதிமன்றம் பத்து வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

வன்முறை, கொலை முயற்சி போன்ற குற்றச் செயல்களில் தொடர்புபட்டுள்ளதால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிற்சாக்கடை ஒன்றின் முன்னால் நின்ற 17 வயது இளைஞர்மேல் சகட்டுமேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவரைக் கொல்ல முயன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது இவ்விதமிருக்க பெனி றணர் என்ற றணாஸ் நகரத்தின் அரசியல்வாதி ஏற்கெனவே குற்றமிழைத்தவர் என்றும் அவர் மறுபடியும் தேர்தலில் போட்டி போட முடியாது என்றும் கோஷம் கிளம்பியுள்ளது.

இந்த அரசியல்வாதி நகரசபை தேர்தலில் வென்று உறுப்பினராக இருந்தபோது பிற்சாக்கடை ஒன்றில் வன்முறையில் ஈடுபட்டு, 60 தினங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக இவர் பதவியையும் இழந்திருந்தார், இப்போது மறுபடியும் தேர்தலில் நிற்பதால் பழைய குருடி கதவைத்தட்டியுள்ளது.

முதலில் பதவியில் இருக்கும் தகுதியை இழந்தாலும் அது தொடர்ந்தும் தன்னுடைய உயர்வைக் கட்டுப்படுத்தாது என்று கூறுகிறார் வேட்பாளர்.

தான் போட்டியிடுவதா இல்லையா என்பதை அதற்குரியவர்கள் கூற வேண்டும் கண்டவர்களும் கருத்துரைக்க முடியாது என்கிறார்.

இவர் தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த விவகாரம் மறுபடியும் பூதாகரமாக மாறலாம்.

 


டென்மார்க்கில் உள்ள 98 நகரசபைளில் பெரும்பாலானவை பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள், வோக்ஸ்ரூவ போன்றவற்றை நடாத்த பெரும் சிரமப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின்படி நாட்டில் உள்ள 98 நகரசபைகளில் 45 நகரசபைகள் பண நெருக்கடியில் பெரும் சிரமங்களை சந்தித்துள்ளன.

எனவே பிள்ளைகள் பராமரிப்பு நிலையம், வோக்கஸ்ரூவ ஆகிய இரண்டையும் ஒன்றாக்கி நிர்வகித்தால் இலகுவாக இருக்கும் என்று மேற்கண்ட 45 நகரசபைகளும் கருதுகின்றன.

மிகுதியாக உள்ள நகரசபைகள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடவில்லை அதேநேரம் 14 வீதமான நகரசபைள் இரண்டுங்கெட்டான் நிலையில் உள்ளன.

இப்படியான திட்டங்களை எழுந்தமானத்தில் மேற்கொண்டு, பொருளாதாரத்தை மீதம் பிடிப்பதே இலட்சியமாக செயற்படுவதை குழந்தைகள் பராமரிப்புப் பிரிவு பேராசிரியர் சலோற்றா றிங் மூஸ் கண்டித்துள்ளார்.

பிள்ளைகளும், பராமரிப்பாளரும் இடமும் சூழலும் மாறுவதால் களைப்பும், விரக்தியும் அடைய நேரிடும், அது பிள்ளைகளின் உள்ளத்தில் பாதகமான விளைவுகளை உண்டு பண்ணிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

tks.s.durai


 



Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம்india

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Kommende Film danmark

Tamilnews.cc-facebook

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Kashmir Tour 09N in- 3* Hotel

Maldives Special

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies