டீன் ஏஜ் உறவு மூளை நரம்புகளை பாதிக்கும் –

05 Nov,2013
 

அந்த நேரத்தில கூட செல்போன்ல பேசறாங்கப்பா!

 

தாம்பத்ய உறவின் போது கவனம் அதில் மட்டுமே இருந்தால்தான் உறவு சுவைக்கும் என்பார்கள். ஆனால் 62 சதவிகித பெண்கள் உறவின் போது செல்போனில் வரும் மெசேஜை வாசித்துக் கொண்டிருக்கிறார்களாம். செக்ஸ் உறவின்போது என்னவெல்லாம் செய்கிறார்கள் இந்தப் பெண்கள் என்று ஒரு சர்வே நடத்தி அதன் சுவாரஸ்யமான முடிவை வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொரு உறவின்போதும் பெண்கள் எதையெல்லாம் நினைக்கிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதே இந்த சர்வேயின் சாராம்சம்.

 

செல்போனில் கவனம்  

62 சதவீத பெண்கள் செக்ஸ் உறவின்போது அதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு செல்போனை எடுத்து யாராவது கால் பண்ணாங்களா என்று நோண்டுகிறார்களாம்.


 

 48 ஆண்கள் 

அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை இப்படி உறவின்போது செல்போனைப் பார்ப்போர் எண்ணிக்கை 48 சதவீதம்தானாம்.

 
 

 

அந்த நேர பேச்சு 

உறவின்போது செல்போனில் பேசுவது என்பது 34 சதவீதம் பேராக உள்ளது.

 

எஸ்.எம்.எஸ் அனுப்புறாங்க  
 உறவில் ஈடுபட்டபடியே மெசேஜ் படிப்பது, அனுப்புவது ஆகிய வேலைகளில் 24 சதவீதம் பேர் ஈடுபடுகிறார்களாம்.

 
 

இ.மெயில் கூட  
22 சதவீதம் பேர் செக்ஸ் உறவில் ஈடுபடும் மும்முரத்திலும் கூட இமெயில் அனுப்புவதில் கவனம் செலுத்துகிறார்களாம்.

 

கொஞ்ச நேரம் இடைவெளி  
4 சதவீதம் பேர் செக்ஸ் உறவை சில நிமிடங்களுக்கு நிறுத்தி வைத்து விட்டு போனை செக் செய்வதாகவும் கூறியுள்ளனர்.

 

கண்டுக்கிறதில்லைஸ 
34 சதவீத பெண்கள், தாங்கள் இப்படி செல்போனைப் பார்ப்பதிலும், பேசுவதிலும், மெசேஜ் அனுப்புவதிலும், இமெயில் அனுப்புவதிலும் ஈடுபடும்போது தங்களது துணைஅதைக் கண்டு கொள்வதில்லை என்றும் கூறியுள்ளனர்.

 

கொஞ்சம் ஓவர்தான்  
 மிகவும் நூதனமான காரியங்களில் கூட பெண்கள் செக்ஸின்போது ஈடுபடுகிறார்கள் என்று கூறுகிறது இந்த சர்வே.


டச் பண்ணாமலே மூட் வரவைக்கணுமா


ஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும்.

பூக்களின் வாசம் தரும் இதம்

மலர்களின் வாசனை தரும் இதம் பெண்மையை மலர வைக்கும். காதலை சொல்லாமலேயே சொல்லும் மலர்கள் பெண்களை சரியான மூடுக்கு கொண்டு வரும். கைகள் பேசும் பாஷையை அந்த மலர்கள் பேசும் அப்புறம் பாருங்கள்.

நெருக்கமாக அமருங்கள்

துணையின் அருகில் நெருக்கமாக அமருங்கள், தொடவேண்டாம். கூந்தலையும், காதுமடலையும் லேசாக முகர்ந்து பார்த்தாலே போதும். உணர்ச்சி வசப்படத் தொடங்கி விடுவார்கள் பெண்கள். உங்களின் உணர்வுப்பூர்வமான இந்த நெருக்கம் தொடாமலேயே உங்களின் அதீத காதலை வெளிப்படுத்தும். இருவருக்குமிடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.

திராட்சையும் ஸ்ட்ராபெரியும்

காதலை வெளிக்கொணரும் பழங்களில் திராட்சைக்கும், ஸ்ட்ராபெரிக்கும் தனி பங்குண்டு. இந்த பழங்களைக் கொண்டு பெண்களில் இதழ்களைத் தீண்டலாம். கைகளால் தீண்டுவதை விட இந்த பழங்களினால் தொடுவது அதிக கிளர்ச்சியை ஏற்படுத்துமாம். அதேபோல் சாக்லேட், கேக் கிரீம்களும், காதலின் உணர்வை வெளிப்படுத்தும் என்கின்றனர் ஆராய்சியாளர்கள்.

இதமாக வருடுங்கள்

பெண்களின் மென்மையான உடலை கைகளால் தொடுவதை விட பறவையின் இறகினால் லேசாக வருடுவது இதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். அவர்களின் அந்த கிளர்ச்சி ஆணின் உணர்வுகளையும் அதிகரிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். மென்மையான தோலினை மயிலிறகால் வருடும் போது ஏற்படும் உணர்ச்சிக்கு ஈடு இணையில்லை என்கின்றனர் அவர்கள்.

பேச்சிலேயே கிளர்ச்சியூட்டலாம்

தொட்டுத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை. பேச்சிலேயே கூட கிறங்கடிக்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். காதலை சொல்ல நெருக்கமான ஒரு சூழலில் மென்மையான, ரகசியத்தைப் போல பேசும் பேச்சிலும் கூட கிளர்ச்சியூட்டலாம் என்கின்றனர்.

இந்த வழிமுறைகளை நீங்கள் முயற்சி  செய்து பாருங்கள். அப்புறம் என்ன நீங்கள் தொடவே வேண்டாம். உங்களுக்கு என்ன வேணும்னு நினைக்கிறீங்களோ அது வேண்டியது தானாகவே கிடைக்கும்.

 

ஆசையா வர்றப்ப போரடிக்குதுன்னு சொல்லாதீங்க!

 

இல்லற வாழ்க்கையில் தம்பதியர் இருவரும் தனியாக சந்திக்கும் ஒரே இடம் படுக்கையறைதான். அங்கேயும் அவசர கதியில் இயங்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதனால் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் மனைவி ஏமாற்றமடைய நேரிடுகிறது. எனவே மனைவியை கவரும் வகையில் நடந்துகொள்ள ஆண்களுக்கு சில சங்கதிகளை தெரிவித்துள்ளனர் உளவியல் வல்லுநர்கள்.

சுத்தமா இருக்கணுங்க

படுக்கையறையில் சுத்தமும், சுகாதாரமும் கடைபிடிக்கவேண்டியது அவசியம், சிகரெட் வாசமோ, மது வாடையோ மூடை மாற்றிவிடும். அனைத்து பெண்களுமே சுத்தமான சுகந்தமான வாசனையையே படுக்கையறையில் எதிர்பார்க்கின்றனர். எனவே ஆண்களே உங்களின் சுத்தமும், சுகந்தமும்தான் பெண்களை கவரும்.

ரொமான்ஸ் அவசியம்

தாம்பத்ய உறவு என்பது இயந்திரத்தனமானது அல்ல. அது உணர்வுப் பூர்வமானது. ஏதோ கடமைக்கு செயல்படும் கணவர்களை பெண்கள் விரும்புவதில்லை. கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம் கலந்த கணவர்களையே மனைவிகள் விரும்புகின்றனர். படுக்கையறையில் உடல் ரீதியான தொடுகைகளை விட உள்ளரீதியான தொடுகை முதலில் அவசியம். அதைத்தான் பெண்களும் எதிர்பார்க்கின்றனர்.

வேலையிருக்கு

வேலை யாருக்குதான் இல்லை. படுக்கையறையில் ஆசையாய் உங்கள் துணை உங்களின் அருகில் வரும்போது வேலை பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள். அப்புறம் அலுவலகத்திற்கும், படுக்கையறைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அப்புறம் அன்றைய அப்செட் ஒருமாதம் வரையும் நீடிக்கலாம்.

மென்மையான அணுகுமுறை

படுக்கையறையில் கடுமையான அணுகுமுறையை பின்பற்றுவதை எந்த பெண்ணுமே விரும்புவதில்லை. அநேகம் பெண்கள் புகார் தெரிவிப்பது இதைத்தான். நீங்கள் வேட்டைக்காரர் போல செயல்பட படுக்கையறை ஒன்றும் கானகம் அல்ல. அங்கே மென்மையான அணுகுமுறையை கடைபிடித்தால் இனிய கனவுகள் உற்பத்தியாகும். இல்லையெனில் வேட்டைகாரன் கையில் அகப்பட்ட மானைப் போலத்தான் பெண்கள் உணர்வார்கள்.

அப்பாடா முடிஞ்சது

உறவு முடிந்த உடனே எதோ கடமை முடிந்தது என்ற கணக்காக தம் அடிக்கவோ, தூங்கவோ போய்விடும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லையாம். அழகாய் ஒத்துழைத்த துணைவியின் நெற்றியில் மென்மையாய் ஒரு முத்தம். மார்பில் சாய்ந்து செல்லமாய் ஒரு உறக்கம். தலைகோதுவது போன்ற சின்ன சின்ன ஐட்டங்களை ரொமான்ஸ் நடவடிக்கைகளை கணவர் செய்யவேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். இதெல்லாம் படுக்கையறையில் நிகழ்ந்தால் உங்கள் மனைவி உங்களின் மகுடிக்கு மயங்கிய துணைவியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை

 


டீன் ஏஜ் உறவு மூளை நரம்புகளை பாதிக்கும் – எச்சரிக்கை ரிப்போர்ட்

 

 

சமீப காலங்களில் பள்ளி மாணவர்கள் பலர் பாலியல் பிரச்சினைகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு குழந்தை பிறப்பது, அதேபோல் மாணவர்கள் சிலர் மாணவிகளுடன் உறவில் ஈடுபட்டு அதை வீடியோ எடுப்பது என கலாச்சார சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற டீன் ஏஜ் வயதில் உறவில் ஈடுபடுவது எதிர்காலத்தில் அவர்களின் மூளை நரம்புகளை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இளம் வயதில் உறவில் ஈடுபடும் கலாசாரம் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் மட்டுமே அதிகம் இருந்தது. தற்போது இந்தியாவிலும் இது அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

எலிகளில் பரிசோதனை

பிறந்து 40 நாட்கள் ஆன பெருச்சாளிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நன்கு வளர்ந்தவை, நடுத்தர வயதில் இருப்பவை, இளம் எலிகள் என மூன்றாக பிரிக்கப்பட்டன. அவைகளுக்கு உணர்வை தூண்டும் ஊசி போட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர், எலிகளிடம் மருத்துவ ரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆராயப்பட்டன.

மூளை செயல்கள் பாதிப்பு

மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது இளம் வயது எலிகளின் செயல்பாடுகள் உறவுக்கு பிறகு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், சோர்வு ஏற்பட்டது. அன்றாட உணவைக்கூட உண்ணாமல் ஒரே இடத்தில் முடங்கி கிடந்தது. சரியான பருவத்தில் இருந்த எலிகள் வழக்கம்போல இருந்தன.நரம்பு மற்றும் மூளை செயல்களும் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இளம் பருவத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது மூளை, நரம்புமண்டல வளர்ச்சியை பாதிக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாக தெரிகிறது. மனிதர்களுக்கும் இது பொருந்தும். இதன் பாதிப்பு உடனடியாக இருக்காது என்றாலும் எதிர்காலத்தில் அதிகரிக்கும்.

பாலியல் விழிப்புணர்வு கல்வி

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இளம் வயதில் பாலியல் ரீதியான உறவுகளில் ஈடுபடுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களின் மூளையும், செயல்பாடுகளும் பாதிக்கப்பவடுவதாலேயே கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை தடுக்க பாலியல் விழிப்புணர்வு குறித்த கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும் என்பது உளவியல் நிபுணர்களின் அறிவுரையாகும்.

 


பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்ததும் பிடிக்காததும்

 

 


பெரும்பாலான பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் பெரிய லிஸ்ட்டே தருவார்கள் ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய  கொடுப்பார்கள். அதில் சில

பெரும்பாலான ஆண்களை பொருத்தவரை செக்ஸ் உறவு என்பதை உடல்ரீதியான விஷயமாகவே கருதுகிறார்கள். ஆனால் பெண்களைப் பொருத்தவரை அப்படி இல்லை அதை மனதோடும் சம்பந்தப்படுத்தி உண்மையான இன்பத்தை அனுபவிப்பவர்கள் பெண்கள் தான். உடலும், மனதும் இணையும் நிகழ்வாகவே உடல் உறவை பெண்கள் கருதுகிறார்கள்.

சில ஆண்கள் மென்மையான இசையை கேட்டுக் கொண்டே செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது பிடிப்பதில்லை. இசை உண்மையான ஈடுபாட்டை தருவதில்லை என்பது பெண்கள் கூறும் காரணம். எனவே உங்களது துணைக்கு இசை பிடிக்குமா, இல்லையா என்பதை அறிந்து கொண்டு இசையை  கேட்பதா வேண்டாமா என முடிவு செய்யுங்கள்.

அவசரத்தை கைவிடுங்கள்

இன்று கிட்டத்தட்ட அத்தனை பேருமே செல்லும் கையுமாகத்தான் உள்ளனர். சாப்பிடும்போதும் செல்போனில் பேச்சு, குளிக்கும் போதும் கூட சிலர் பேசப் பார்த்திருக்கலாம். ஆனால் உறவின்போது மட்டும் எப்பாடுபட்டாவது இந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள், உறவு தொடர்பான பேச்சுக்களை மட்டுமே “ஆன்” செய்து வைத்திருங்கள். பெண்களுக்கு இந்த செல்போன் பேச்சு, குறிப்பாக அந்த நேரத்தில் அரட்டை அடிப்பது அறவே பிடிக்காது. சில ஆண்கள் கைப்பேசியை உபயோக படுத்திக்கொண்டே செக்ஸில் ஈடுபடுகின்றனர்.

எடுத்தோம் முடித்தோம் என்று அவசர அவசரமாக செக்ஸில் ஈடுபடுவார்கள் அந்த அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள் முக்கியமாக செக்ஸ் விஷயத்தில். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

கெஞ்சுவதை தவிருங்கள்.

பெரும்பாலான பெண்களுக்கு ஐஸ் வைப்பது, கெஞ்சுவது, தாஜா செய்வது பிடிக்காது. நேர்மையாக, நேருக்கு நேராக கேட்பதும், தெளிவாகப் பேசுவதும்தான் பல பெண்களுக்குப் பிடித்திருக்கிறது. அதைத்தான் அவர்கள் ஆண்களிடம் பொதுவாக எதிர்பார்க்கிறார்கள். எப்போது ஒருவர் தாஜா செய்கிறாரோ, ஐஸ் வைக்கிறாரோ அவர் நிச்சயம் வெளிப்படையான ஆள் இல்லை என்று பெண்கள் கருதத் தொடங்கி விடுகிறார்களாம்.

எனவே உறவுக்காக கெஞ்சுவதை தவிருங்கள். மாறாக, வெளிப்படையாக பேசுங்கள். இன்று வேண்டாம், இன்னொரு நாள் பார்ப்போம் என்று உங்கள் துணை கூறினால் உடனே முகம் சுளிக்காதீர்கள். இதன் மூலம் உங்கள் துணையின் மனதை நீங்கள் முழுமையாக ஆக்கிரமிக்க முடியும்.

பொறுமை அவசியம்

செக்ஸ் உறவின்போது பெண்கள் முழுமை அடைய நிறைய நேரம் பிடிக்கும். ஆண்களுக்கோ சில நிமிடங்களில் எல்லாம் நெருங்கி வந்து முடிந்தும் விடும். அதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. முத்தமிடுவது, தொடுதல், உரசுதல், தழுவுதல் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள். ஆண்கள் இதையெல்லாம் செய்வதற்கு பொறுமை இழத்தல் கூடாது.

மேலும் ஒரு பெண்ணுக்கு உச்ச நிலை ஏற்பட 2 நிமிடங்களுக்கும் மேலாகும். எனவே எந்த அளவுக்கு பெண்ணின் உணர்வுகளை தூண்ட முடியுமோ(வருடுதல் காதுமடல்களில் கிசுகிசுத்தல், கட்டிபிடித்தல்), அந்த அளவுக்கு இன்பத்தில் பூர்த்தி நிலை கிடைக்க வாய்ப்புண்டு. மாறாக அதி வேகமாக உறவுக்குப் போக முற்பட்டால் இன்பத்திற்குப் பதில் கசப்புதான் வந்து சேரும்.

சுத்தம் அவசியம்

முத்தமிடுவதில் சொதப்புவதை தவிருங்கள். எந்த மாதிரியான முத்தம் உங்களது துணைக்குப் பிடிக்கும் என்பதை அறிந்து அதை வாரிக் கொடுங்கள். அது உங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவும். முத்தம் கொடுப்பதற்கு முன்பு வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் – அது ரொம்ப ரொம்ப முக்கியம்.

உணர்வுகளைத் தூண்டுங்கள்

உறவின்போது நடைபெறும் முன்விளையாட்டுக்களில் முக்கியமான ஒரு விஷயம் உணர்வுகளைத் தூண்டும் பேச்சு. இது இரு பாலாருக்கும் முக்கியமானது. இருவரும் பேசுவதற்கு நிறைய விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். போர் அடிப்பது போன்ற பேச்சு்க்களை அறவே தவிருங்கள். உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் சித்தாந்தம் பேசுவதை விட்டு விட்டு செக்ஸியாக பேசுவதற்கு முயலுங்கள்.

பெர்மிஷன் கேட்பதை தவிருங்கள்

எல்லாவற்றையும் விட முக்கியமானது, எதைச் செய்தாலும் அதற்கு பெர்மிஷன் கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது. உங்களது துணைக்குப் பிடித்ததை அறிந்து வைத்துக் கொண்டு அதில் ஈடுபட்டு அவரை உங்கள் வசப்படுத்த வேண்டும். மாறாக, இப்படி கட்டிப்பிடிக்கவா, இங்கு முத்தமிடவா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்து அவரை முழுமையாக உங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம், இன்பமான உறவுக்கு வழி கோல முடியும்.

இப்படி சின்னச் சின்னதாக நிறைய வருடல்கள் உள்ளன. இவற்றைப் புரிந்து கொண்டு, தெளிவாக செயல்படும் ஆண்கள் மீது பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாகுமாம்.

 


அந்த நேரத்தில் ‘புஸ்’ஸ்ஸ்ஸ்ஸ்ஸா?

 

வண்டி வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென ஸ்பீட் பிரேக்கர் குறுக்கிட்டால் எவ்வளவு டென்ஷனாக இருக்கும். அதுபோலத்தான் செக்ஸ் உறவில் மும்முரமாக இருக்கும்போது ஏதாவது ஒரு இடையூறு வந்து மூட் அவுட் ஆக்கி விடும். இது பலருக்கும் பல சந்தர்ப்பங்களில் நடந்திருக்கும்.

சிறப்பாக தொடங்கி, சீராக தொடர்ந்து, வேகமெடுத்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து ஏற்படும் இதுபோன்ற குறுக்கீடுகளால் உறவு கசந்து போகும் வாய்ப்புள்ளது.

நல்ல மூடுடன் உறவில் மும்முரமாக இருப்பீர்கள். அந்த நேரம் பார்த்து சிலருக்கு ‘டொம்’ என்று ‘வெடி’ வெடிக்கும். இந்த ‘கேஸ் லீக்’, பார்ட்னரை முகம் சுளிக்க வைக்கும். சிலருக்கு திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருக்கும். சிலர் மோகத்தில் மனைவி பெயரைச் சொல்வதற்குப் பதில் தங்களது முன்னாள் தோழி அல்லது பிடித்த பெண்ணின் பெயரைச் சொல்லி மாட்டிக் கொள்வார்கள்.

இப்படி ஏகப்பட் அசவுகரியங்களை நாம் தினசரி செக்ஸ் வாழ்க்கையில் சந்திக்க நேரிடுகிறது. இதை எப்படித் தவிர்க்கலாம்?.

உடலுறவு தொடர்பான வேலைகளில் மும்முரமாக இருக்கும்போது சிறுநீர் வரும் பிரச்சினை பலருக்கும் உண்டு. இருப்பதிலேயே பெரிய குழப்பம் இதுதான். சிறுநீர் வருவது போல உணர்வு வந்தால் அவர்களுக்கு விந்தணு வெளியாவதில் சிக்கல் வரும். அதேபோல பெண்களுக்கு சிறுநீர் வருவதாக இருந்தால், ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதில் சிக்கல் ஏற்படும்.

செக்ஸ் உணர்வு தூண்டுதலின்போது சிறுநீரக பை அதிக அளவில் அழுத்தப்பட்டால் அவர்களுக்கு சிறுநீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது பெரும்பாலும் பெண்களுக்குத்தான் ஏற்படுமாம். இருப்பினும் சில நேரம் ஆண்களுக்கும் வரும்.

இதுபோன்ற சூழல் ஏற்படும் போது இருவருக்குமே மூட் அவுட் ஆகி விடும் வாய்ப்புள்ளது. வேகம் குறைந்து, மந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவர்.

இதைத் தவிர்க்க உறவின்போது அதிக அளவில் அழுத்தம் தருவதைத் தவிர்க்கலாம். மேலும், செக்ஸ் உறவுக்கு முன்பாகவே பாத்ரூம் போய் விட்டு சமர்த்தாக வருவது மிகவும் அவசியம்.

அடுத்தது ‘கேஸ்’ டிரபுள். இந்த சுத்தமாக மூடை கொன்று விடும் தன்மை கொண்டது. முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கும்போது சிலருக்கு காற்று பிரிந்து உறவை நாறடித்து விடும். சிலருக்கு அதற்கு மேல் மூடே இருக்காது உறவைத் தொடர. இதைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். காரணம், செக்ஸ் உறவு என்பது மணம் வீசும் உறவு, அப்படிப்பட்ட சமயத்தில் இதுபோன்ற காற்றுப் பிரச்சினையால் உறவு கசக்கும் வாய்ப்புள்ளாக அவர்கள் சொல்கிறார்கள்.

இதைத் தவிர்க்க வயிற்றில் கண்டதையும் போட்டு அடைப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக் கிழங்கு, தானிய வகைகள், பேக்கரி வகையறாக்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடக் கூடாது. இவை வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தி கேஸ் டிரபுளை ஏற்படுத்தும். மேலும், சாப்பிட்டு முடித்த பின்னர் நன்கு நடந்து விட்டு வருவது அதை விட முக்கியமானது. சாப்பிட்ட சாப்பாடு நன்கு ஜீரணமான பின்னர் படுக்கைக்குள் புகுவது இன்னும் உத்தமம்.

இப்படி செக்ஸ் உறவை குழப்பும், இடையூறு செய்யும் விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம் செக்ஸ் உறவை முழுமையாக, அழகாக, திருப்தியாக அனுபவிக்க முடியும்.Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம்india

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Kommende Film danmark

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies