தோலின் நிறம் வேறுபடுவதேன்? ஊமைக்காயம் என்றால் என்ன?

19 Sep,2013
 

தோலின் நிறம் வேறுபடுவதேன்? 

 

மெலன்கோயட்ஸ் (Melancoytes) என அழைக்கப்படும் வண்ணம் தரும் உயிர்மங்களின் (Pigment forming cells) பின்னலமைப்பால் தோலின் நிறங்கள் உண்டாகின்றன. இந்தப் பின்னலமைப்பு மேல் தோலின் (Epidemis) ஆழமான அடுக்கில் உள்ள உயிர்மங்கள் சிதறிப் பரவி கீழே அமைவதால் ஏற்படுகிறது. இதனை ஸ்டேரட்டம் பாஸல் (Stratum basale) என அழைப்பர்.

வண்ண நிறமிகள் (Melancoytes) நுண்ணிய கிளைபோன்ற நீடிப்பு கொண்டதாயும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு இருப்பதாயும் மேலும் மேல் நோக்கி மேந்தோலின் உட்பகுதியில் ஆழமாய் உயிர்மங்கள் இடையிடையே பரவியும் உள்ளன. ஒவ்வொரு சதுரமில்லிமீட்டரிலும் ஏறக்குறைய 1000 முதல் 3000 வரை தோலின் வண்ணம்தரு உயிர்மங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் உயிரகத்தோடு இணைப்பு விளைவாக, கறுப்புமை நிறமுடைய மெலானின் (Melanin) என்ற பெயர் கொண்ட நிறமியை உண்டாக்குகிறது.

இந்த உயிரகத்தோடு இணைவு செம்பு உடைய செரிமானப் பொருள் வகையால் கடுவினைக்குட்படுத்தப்பட்டு டைரோசினாஸ் (Tryosinase) என அழைக்கப்பட்டு அதனால் ஒளி நிழற்பட்டை நிறமாலை (Spectrum)யால் சிவப்பு நிறம் கொடுக்கப் பெற்றதாகிறது. பல்வேறு வடிவப் படி நிலைகளில் (stages of formation) வெளிறிய மஞ்சள் (Pale yellow) பழுப்பு மஞ்சள் (tawny) ஆரஞ்சு, நற்சிவப்பு, பழுப்பு, கடைசியாகச் செறிவான கறுப்பு ஆகிய நிறங்களை உற்பத்தி செய்கின்றன.

மனிதத்தோல் அதிகமான அல்லது குறைவான மெலானின் அளவு கொண்டது. சிவப்பு நிறத்தோல் கொண்ட இனத்தாரின் மெலன்கோயட்ஸ் ஆழ்தோல் அடுக்கு மிகக் குறைந்த அளவு வண்ண உயிர்மங்கள் கொண்டவை. கறுப்பு நிறத்தோல் இனத்தாரின் மேந்தோலின் மேலடுக்கில் வண்ண உயிர்மங்கள் மிக அதிகமாகப் படிந்து காணப்படுகின்றன.

மெலானின் (Melanin) துன்பம் தரும் ஒளிக்கதிர்களிடமிருந்து இயற்கையான பாதுகாப்பைப் பெற்றுள்ளது. சூரிய ஒளிபடும்போது மனிதனின் தோல் பொதுவாக மெல்லப் பதனிடப்படுகிறது. மெலானின் வண்ணப்பொருள் அதிகமாக இருப்பது அடியேயுள்ள இழைகளைப் பாதுகாக்க உதவுகிறது. பொன்னிறமாகவும் சிவப்பு நிறமாகவும் உள்ளவற்றில் வண்ண உயிர்மங்கள் மிகச் சிறியதாகவும் சீரில்லாமலும் எதிர்ப்பயன் தருகின்றன. இதன் விளைவாகச் சூரியப் பதனீட்டுத் தோற்றத்தை விடத் தவிட்டு நிறமுள்ள புள்ளிகள் ஏற்பட வாய்ப்புண்டு.

 

ஊமைக்காயம் என்றால் என்ன? 

பலத்த அடியை உடல் வாங்கும்போது உடலை மூடியுள்ள மேல் தோல் கிழியாமல் அல்லது சிதையாமல் இருக்கும் நிலையில் உடலுள்ளிருக்கும் இழைமங்கள் (Tissues) ஊறடைந்து காய மடைவதால் சிராய்ப்பு அல்லது கன்றிய சாயம் (Bruise) ஏற்படுகிறது.

கன்றிய காயம் என்பது ஒரு புண்ணாம். உடலிலுள்ள இழைமங்கள் வெட்டுப்பட்டோ அறுபட்டோ பிளவுபடுவதையே புண் என வரையறுக்கலாம், பல நேரங்களில் தோல் வெட்டுப்பட்டோ கிழிந்தோ போகும். ஆனால் தோலால் மூடப்பட்ட உள்புண்கள் அப்படி அல்ல, அவை உள்ளுறுப்புச் சிதைவினால் ஏற்படுபவை. வெளியில் அதற்குரிய அடையாளம் தெரிந்தே ஆக வேண்டும் என்ற அவசியமில்லை.

தோலின் கன்றிய அல்லது அடிபட்ட காயம் கீழ்த்தோலிலுள்ள ஆழ் இழைமங்களின் குருதிக் குழாய் சிதைவதாலேயே உண்டாகிறது. உடைப்புக் குழாயிலிருந்த குருதி வெளிப்பட்டு விலகி இழைமங்களின் சுற்றுப்புறத்தில் பரவி தோலில் நிறமாற்றத்தை ஏற்படுத்துகிறது. அது முதலில் சிவப்பாக மாறி அதன்பிறகு கறுப்பு நீலமாக மாறும். குருதி வண்ணம் செயலிழக்கும்போது, கன்றிய காயம் மஞ்சள்-பச்சையாக மாறி, இறுதியாக மங்கிவிடும். பொதுவாக அடிவிழுந்த இடத்தில்தான் கன்றுதல் ஏற்படும். ஆனால் சில சமயங்களில் இணைக்கும் இழைமம், தசைகள் ஆகியவற்றின் மீதும் குருதி பரவி அடிபட்ட சற்று தூரத்திற்கு அப்பாலும் கன்றிய காயத்தைக் காணச்செய்யும். இதைச் சிலர் ஊமைக்காயம் என்பர்.

 



நாம் ஏன் சில சமயங்களில் சொறிய வேண்டிய தேவை ஏற்படுகிறது? 

 

தோலில் நமைச்சல் (itchy) ஏற்படச் பொதுவான காரணங்களுள் ஒன்று ஒவ்வாமை (Allergy). 1906 ஆம் ஆண்டில் வியன்னா நாட்டுப் பேராசிரியர் சிளமென்ஸ் வொன் புகெட் (Prof. Clemens Von Puquet) “allergy” என்ற சொல்லை ஆக்கினார். சில குறிப்பிட்ட பொருள்களுடன் உடல் தொடர்புபடும்போது தனித்த விதிவிலக்கான கூருணர்வு நிலை (sensitivity) ஏற்படுவதையே, இச்சொல்லால் வரையறுத்து விளக்கமும் செய்தார். அந்த மாதிரியான ஒவ்வாமைப் பொருள்கள் “allergens” எதிர் விளைவுப் பொருள்களுள் இறகுகள், குப்பைகள், உணவுகள், விலங்கின் மென் மயிர்கள், பூந்தாதுக்கள் (மகரந்தங்கள்), மருந்துச் சரக்குகள் ஆகியவையும் அடங்கும்.

பெரும்பாலான மக்கள் ஏதோ ஒரு சமயத்தில் ஓரளவு ஒவ்வாமையை அல்லது எதிர் விளைவை அனுபவித்திருப்பார்கள். மக்கள் தொகையில் பத்துசதம் பேர் ஏறக்குறைய நிரைபேறான ஒவ்வாமை நோய்களுக்குரிய அடையாளம் காண்பிக்கின்றனர்.

alergy_370காரணம் எதுவானாலும் எப்போதும் ஒவ்வாமை யின் செயல் விளைவு ஒன்று போலவே இருக்கும். எதிர்ப் பொருள்களின் (antibodies) செயல் விளவுகளைப் போலவே இரத்த ஓட்டத்தில் அல்லாமல் உடல் உயிர்மங்களின் (nody cells) மேற்பரப்பில் அமைவதே அதற்குக் காரணம் என எண்ணப்படுகிறது.

இந்த ஒவ்வாமை எதிர் விளைவுகள் உயிர்மங் களின் சுவர்களைச் (cell walls) சிதைத்து இரண்டு எதிர்ச் செயல்களை (responses) உண்டாக்கும் இஸ்டமின் (histamine) என்ற பொருளை விடுவிக்கின்றன. குருதி நாளங்களிலிருந்து (blood vessels) சுற்றிலுமுள்ள இழைமங்களுக்கு (tissues) நீர்மங்களைத் (fluids) தப்பித்துப்போக அனுமதிக்கிறது. இது சில தசைகளின் இசிப்பை (spasm) அல்லது தானாகச் சுருங்குதலைக் கொண்டு வரும்.

ஒளி, வெப்பம், குளிர், மயிர், விலங்கின மெய் மயிர் ஆகிய ஒவ்வாமைப் பொருள்கள் உடலின் மேற்பகுதியில் படும்போது நமக்கு நமைச்சல் (itch) தோன்றும். சிப்பி நண்டின் நீர்வாழ் உயிரி (shell fish) காளான்கள், வெந்நிற விதைகள் கொண்ட சிவப்புப் பழவகை (strawberries)போன்ற உணவுப் பொருள்களும் ஒவ்வாமையை விளைவிக்கலாம். சில மருந்துச் சரக்குகளும் மருந்துகளும் கூட ஒவ்வாமையால் நமைச்சலை உண்டாக்கலாம். ஒவ்வாமைக்குரிய மணம் சுவாசிக்கப் பட்டாலும், தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக் காய்ச்சலில் ஏற்படும் விளைவைப் போல மிகையான சளி கசிவு (secretion of mucous) அல்லது ஆஸ்துமாவைப் போல நுரையீரல் காற்று வழிகளில் கடுமையான இசிப்பு (spasm) ஏற்படும்



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies