குழந்தை விற்பனையில் ஈடுபட்ட போலி பெண் மருத்துவர்!
04 Oct,2023
மும்பையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட போலி மருத்துவர் உள்பட 6 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
மும்பை டிராம்பேயில் போலி நர்சிங் ஹோம் ஒன்று செயல்படுவதாகவும், அங்கு சமீபத்தில் ரூ.5 லட்சத்துக்கு குழந்தை விற்பனை செய்யப்பட்டதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்டனர். இது தொடர்பாக 2 பெண்களை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி பெண் டாக்டர் உள்பட மேலும் 4 பெண்கள் இந்த குழந்தை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் குழந்தை கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர். மும்பையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது