உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத ஒரே நாடு
12 Sep,2023
இந்த நாட்டிற்கு சொந்த ராணுவமும் கூட இல்லை.
1/ 11 இன்று உலகில் பல மதங்கள், நம்பிக்கைகளை பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சிலர் தங்களை மத நம்பிகை அற்றவர்களாக கூறிக்கொண்டும் வாழ்கின்றனர்.
2/ 11 ஒரு நாடு என்று இருந்தால் அதில் பல தரப்பு மக்கள் வாழ்கின்றனர். உலகில் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் முதன்மையானது கிறிஸ்துவம். அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மதம் இஸ்லாம்.
3/ 11 இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள் முஸ்லீம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். உலகின் கணிசமாக முஸ்லீம்கள் வாழும் இடம் மத்திய கிழக்கு ஆசியா.
.
4/ 11 இவர்களின் புனித தலமான மெக்கா இருக்கும் சவுதி அரேபியா தொடங்கி ஓமன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக், ஈரான் என பல நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.
.
5/ 11 அப்படி உலகின் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமியர்கள் பரவி வாழும் நிலையில், ஒரு இஸ்லாமியர்கள் கூட வாழாத நாடு ஒன்று உலகில் உள்ளது.
6/ 11 அது எது தெரியுமா. அது தான் உலகிலேயே மிகச் சிறிய நடான வாடிகன் சிட்டி. ஐரோப்பிய நாடான வாட்டிகன் சிட்டி உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமாகக் கருதப்படுகிறது.
.
7/ 11 இங்கு தான் அவர்களின் மத குருவான போப் ஆண்டவர் வசித்து ஆட்சி செய்கிறார்.
8/ 11 உலகின் மிக அழகான சிறிய புகழ்பெற்ற நாடான வாட்டிகன் சிட்டியில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை.
9/ 11 இது இத்தாலியின் ரோம் பகுதிக்குள் அமைந்துள்ளது. இந்த நாட்டிற்கு சொந்த ராணுவமும் கூட இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு வாட்டிகன் நகரத்தைப் பாதுகாக்க சுவிஸ் மிஷனரிகள் போப்களால் நியமிக்கப்பட்டனர்.
10/ 11 அன்றில் இருந்து இத்தாலிய ராணுவ உதவியுடன் சுவிஸ் காவலர்கள் தான் வாட்டிகன் சிட்டியை பாதுகாக்கின்றனர்.
11/ 11 2019 புள்ளி விவரப்படி இந்நாட்டின் மக்கள் தொகை 453 மட்டுமே. அத்துடன் சிலர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை 372 ஆகும்.