பிரிட்டனில் அதிவேகமாக பரவும் எரிஸ் வைரஸ்ஸ அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் கோவிட்ஸ
06 Aug,2023
தனிநபர் இடைவெளி, கைகளை கழுவுதல், மாஸ்க் அணிதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
பிரிட்டனில் கோவிட் வைரஸின் புதிய வகையான எரிஸ் (Eris) என்ற வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அறிவியல் முறையில் றையில் EG. 5.1 என்று மருத்துவ வல்லுனர்கள் அழைக்கின்றனர். ஒமிக்ரான் வைரஸின் துணை பிரிவாக இந்த எரிஸ் வைரஸ் உள்ளதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 7 பேரில் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் பிரிட்டனில் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு பின்னர் வந்த வகைகளில் தற்போது பரவி வரும் எரிஸ் வைரஸ் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. முதன் முறையாக கடந்த மாதம் 3 ஆம் தேதி இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆசியாவில் இந்த வைரஸ் அதிகம் பரவியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து மேலதிகமாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனில் சமீபத்தில் வெளிவந்த பர்பீ, ஓப்பன் ஹெய்மர் படங்களுக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் நெருக்கமாக தியேட்டர்களுக்கு சென்றனர். இதுவும் எரிஸ் வைரஸ் பரவுவதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்து வந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த வைரஸின் பாதிப்பு குறைவாக உள்ளது. வயதானவர்கள் சற்று கூடுதலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
புதிய வகை வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்பதால் பொதுமக்கள் மீண்டும் சுகாதாரத்தை பேண வேண்டும் என்றும், தனிநபர் இடைவெளி, கைகளை கழுவுதல், மாஸ்க் அணிதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.