இரண்டாகப் பிரியும் ஆப்பிரிக்க கண்டம். புதிதாக உருவாகப்போகும் பெருங்கடல்..
19 Mar,2023
ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாகப் பிரிவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். நிலம் இரண்டாகப் பிரிவதுடன் அங்குப் பெருங்கடல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள கென்யா, எத்தோப்பியா மற்றும் தான்சான்னியா ஆகிய பகுதிகள் இன்னும் பல ஆயிரம் கோடி வருடத்தில் பிரிந்து அங்குப் பெருங்கடல் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
’rifting’ எனப்படும் நில பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இந்த தகவல் கூறிப்பட்டுள்ளது. நில பிளவு ஏற்படக் காரணம் என்ன? புதிதாக ஒரு பெருங்கடல் உருவாக எத்தனை காலம் எடுக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
டெக்டோனிக் தட்டுகள் (tectonic plate) ஆனது தான் நிலப்பகுதி. கடலுக்கு அடிப்பகுதியிலும் டெக்டோனிக் தட்டுகள் இருக்கிறது. இந்த தட்டுகள் சிறிது நகர்வதினால் தான் நில அதிர்வுகள் ஏற்படுகிறது. இந்த தட்டுகள் உடைவதையே rifting என்று கூறுகின்றனர். இந்த நிகழ்வு நிலப்பகுதியில் மட்டுமின்றி கடல் பகுதியிலும் நிகழக்கூடும்.
IFL Science தகவலின் படி, ஆப்பிரிக்கா பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற சுமார் 138 மில்லியன் ஆண்டுகள் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 30 ஆண்டுக் காலமாக இந்த நிகழ்வு அப்பகுதியில் நடைபெற்றுவருவதாகவும் கூறியுள்ளனர். 2005 ஆம் ஆண்டில் எத்தியோப்பியா பகுதியில், கிழக்கு ஆப்பிரிக்கா டெக்டோனிக் தட்டுகள் பிளவைத் தொடர்ந்து, 56 கி.மீ தொலைவிற்குப் பெரிய பிளவு ஏற்பட்டது. அதனின் விளைவு தான் தற்போது ஆப்பிரிக்கா கண்டம் பிரிவதாகக் கூறப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் அளித்த தகவலின் படி, இந்த நிகழ்வு நடக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் இதற்கு மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். அதில் கடல் உருவாக சுமார் 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.