டைனசோர்கள் முட்டையை கடவுளாக வழிபடும் இந்திய கிராம மக்கள் அதிசயம் !
29 Dec,2022
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள, தார் என்ற கிராமத்தில் மட்டும் சுமார் 300 டைனசோர்கள் எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை விட முக்கியமான விடையம் என்னவென்றால், அங்கே உள்ள ஒரு பகுதி மக்கள் சுமார் 300 ஆண்டு காலமாக ஒரு டைனசோர் முட்டையை சிவலிங்கமாக வழிபட்டு வருகிறார்கள் என்பது தான்.
இந்தக் கிராமத்தை சுற்றியும் பல டைனசோர்களின் படிமங்கள் உள்ளது. சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து அழிந்து போன டைனசோர்கள் இங்கே தான் கடைசியாக வாழ்ந்து இறந்து போனது என்கிறார்கள். அப்படிப்பட்ட பெரிய ஒரு ஜீராசிக் பார்க்கே இங்கே உள்ளது. ஆனால் உண்மையானது.
டைனசோர்கள் உருவத்தில் மிகப் பெரியவை. ஆனால் இந்தக் கிராமத்தில் முன்னர் அதனை விடப் பெரிய டைட்டன்ஸ்சோர் என்ற இனமும் வாழ்ந்துள்ளது. அவை மிக மிகப் பெரிய டைனசோர்கள் ஆகும் என்பது மிகுந்த ஆச்சரியம் தான்.