அற்புதங்கள் நிறைந்த பொக்கிஷம் - 21ஆம் நூற்றாண்டின் புதையல்

29 Nov,2022
 

 
 
"அனைத்து இடங்களும் ஒளிரும் தங்கம்" என திகைப்பூட்டும், புதையல் நிறைந்த துட்டன்காமனின் கல்லறையை பார்ததும் ஈர்க்கப்பட்டதை நினைவு கூர்கிறார் பிரிட்டிஷ் தொல்லியலாளர் ஹோவர்ட் கார்ட்டர்.
 
 
மெழுகுவர்த்தி ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு1922ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மூவாயிரம் ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருந்த ஒரு கதவில் லேசான உடைந்த பகுதி வழியே அவர் உற்று நோக்கினார். அவர் அருகில் இருந்த மூத்த தொல்லியலாளர் கார்னார்வோன் பிரபு ஆவலுடன் காத்திருந்தார்.
 
எகிப்து நாட்டின் லக்சர் நகரில் பல ஆண்டுகளாக நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் இந்த இரண்டு தொல்லியலாளர்களின் நம்ப முடியாத கண்டுபிடிப்பில் கொஞ்சம் வெளிப்பட்ட அது, உலகையே வசீகரித்தது. மீண்டும், மீண்டும் சொல்லப்பட்டது.
 
பாய் கிங் (சிறிய வயதில் அரசரானவர்) என்று அழைக்கப்பட்டவரின் ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் விரைவில் திறக்கப்படுவதற்கு, வியப்பு அளிக்கக் கூடிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு அதிநவீன கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் அனுமதி அளித்திருக்கிறது.
 
துட்டன்காமன் எப்படி அரசியல் சின்னமாக மாறினார்? கார்ட்டர் அவரது கல்லறையை கொள்ளையடித்தாரா? அதை கண்டுபிடிக்க உதவியதற்கு எகிப்தியர்களுக்கு ஏன் சிறிதளவு மட்டுமே பெருமை கிடைத்தது? என்பதைப் பற்றிய புதிய கேள்விகள் ஒரு நூற்றாண்டாக தொடர்கின்றன.
 
தொடக்கத்தில் இருந்தே, இந்த தொல்லியல் அகழ்வாய்வு சர்ச்சையில் சிக்கியது.
 
இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சிகள் நடந்ததாக நம்பப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வெளியான தீர்ப்பின்படி, அரச கல்லறையில் இருப்பவை அனைத்தும் அப்படியே எகிப்து நாட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
 
இதற்கிடையே கார்ட்டர் மற்றும் கார்னார்வோன் இருவரும் சர்வதேச ஊடகப்பரபரப்பில் எதிர்ப்பை எதிர்கொண்டனர். ஒரு பிரிட்டிஷ் நாளிதழுடன் ஒரு ஒப்பந்தம் செய்தனர். அதன்படி எகிப்திய பத்திரியைகாளர் உள்ளிட்டோரை, கல்லறை தொடர்பான செய்திகளுக்கு அப்பாற்பட்டு வைத்திருப்பது என முடிவு செய்யப்பட்டது. இது பகையை உருவாக்கியது.
 
 
எகிப்து நாட்டினை மிகவும் பழமைவாய்ந்த நாடு, இனவாத மனப்பான்மை மற்றும் அதிகாரங்களுடன் மிகவும் இணைந்துள்ளது என்று இருவரும் (கார்ட்டர் மற்றும் கார்னார்வோன் ) பார்ப்பதில் இது முடிவடைந்தது என வரலாற்றாசிரியர் கிறிஸ்டினா ரிக்ஸ் கூறுகிறார்.
 
1882ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகளால் இந்த நாடு ஆக்கிரமிக்கப்பட்டது. 1922ஆம் ஆண்டு தொடக்கத்தில் பகுதி அளவுக்கு சுதந்திரம் பெற்றது. ஏகாதிபத்திய செல்வாக்கிலிருந்து விடுபடுவதற்கான தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு பகுதியாக துட்டன்காமன் ஆனது.
 
"எகிப்து மறுபடியும் பிறந்தபோதுதான் இந்த அரசரும் மறுபடி பிறந்திருக்கிறார் என்பது ஒரு சக்திவாய்ந்த அடையாளமாக இருக்கிறது,"என்கிறார் 'பொகிஷம்; ஒரு நூற்றாண்டை துட்டன்காமன் எப்படி வடிவமைத்தார்' என்ற புத்தகத்தை எழுதிய டாக்டர் ரிக்ஸ் "எகிப்து நாடானது நாகரீகத்தின் தாயாக இருக்கிறது.
 
துட்டன்காமன் எங்களுடைய தந்தை," என 1920 களில் எகிப்திய திவா மௌனிரா அல்-மஹ்தியா பாடினார். இதற்கிடையே புகழ்பெற்ற கவிஞர் அகமது ஷாவ்கி, "எங்கள் பூர்வீகம் தவறாக நடத்தப்படுவதையோ அல்லது திருடர்கள் அதை திருடுவதையோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,"என தீர்க்கத்துடன் எழுதியுள்ளார்.
 
 
எகிப்திய பழம் பொருள் ஆய்வில், மிகவும் புகழ்வாய்ந்த கண்டுபிடிப்பில், மிகவும் சிறந்த சொத்து என மிகைப்படுத்தப்படுகிறது. அரசர்களின் பள்ளத்தாக்கின் தளத்தில் தோண்டப்பட்டபோது கல்லறையின் நுழைவாயிலை அங்கிருந்த இடிபாடுகள் நீண்டகாலமாக  கொள்ளையர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பார்வையில் இருந்து மறைத்திருந்தன.  
 
எனினும், 1923 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கார்னார்வோன் பிரபுவின் அதிர்ஷ்டம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஒரு தொற்றுக்குள்ளான கொசு கடித்ததில் அவர் இறந்து விட்டதாகத் தெரிகிறது. பெரும்பாலான ஊடகங்கள் அவரது மரணத்தை ஒரு பாரோனிக் சாபம் என்று கூறினர்.
 
அடுத்த தசாப்தத்தில், கார்ட்டர் தனது குழுவினருடன் கல்லறையின் முக்கியத்துவமான பொக்கிஷங்களை பிரித்தெடுதார். அவர் ஒரு பிடிவாதக்கார நபராக, ராஜதந்திரமற்ற மனிதர் என அறியப்படுகிறார். அவரது பணியை மேற்பார்வை செய்த எகிப்திய பழங்கால சேவையுடன் அவரது உறவுகள் பெரும்பாலும் விரோதமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
தொடக்கத்தில் இருந்தே, அவர் திருட முயன்றார் என வதந்திகள் பரவத்தொடங்கின. இப்போது, திருட்டு நடைபெற்றதற்கான உறுதியான ஆதாரங்களை எகிப்தியலாளர் பாப் பிரையர் கண்டுபிடித்திருக்கிறார்.
 
'துட்டன்காமன் மற்றும் உலகத்தை மாற்றிய கல்லறை' என்ற புத்தகத்தில் தத்துவவியலாளர் சர் ஆலன் கார்டினர் கூறியதில் இருந்து மேற்கோள்காட்டுகிறார். கார்ட்டர் கொடுத்த ஒரு தாயத்து மற்றும் கல்லறை முத்திரைகள் திருடப்பட்டதாக ஒரு நிபுணரால் கூறப்பட்ட பின்னர் அவர் தனது மோசமான நிலையைப் பற்றி அதில் குற்றம் சாட்டியுள்ளார்.
 
"கார்ட்டர் அந்த பொருட்களை நினைவுப் பொருட்களாகக் கொடுப்பதை நான் கண்டுபிடித்தேன்," என டாக்டர் பிரையர் என்னிடம் கூறுகிறார். அவர் அதை சொந்தமாக வைத்திருப்பதாக நினைத்தார்.
 
 
இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் உள்ள ஹைக்லெர் கோட்டை போன்ற அரண்மனையின் ஆடம்பரமான அறைகள்  மன்னர்களின் தூசி நிறைந்த பள்ளத்தாக்கிலிருந்து அகற்றப்பட்ட பழமையானவற்றை கொண்டவை என்று தோன்றுகிறது. லார்ட் கார்னார்வோனின் மூதாதையர் இல்லமான கம்பீரமான வீடு, டோவ்ன்டன் அபே எனும் இங்கிலாந்து தொடர் நாடகத்தின் மேடையாக இப்போது அறியப்படுகிறது.
 
வாழ்நாள் சாகசக்காரரான அவர், வாகனத்தில் உலகம் முழுவதும் சுற்றி வர முயற்சி மேற்கொண்டார். எகிப்திய பழமை ஆய்வில் கவனம் செலுத்தும் முன்பு, ஒரு சாலை விபத்தில் உயிர் தப்பினார்.
 
எகிப்தில் அவர், வாழ்க்கையின் மீதான ஆர்வத்தை கண்டார், என நவீன காலத்தின் லேடி கார்னார்வோன் கூறுகிறார். தனது குடும்பத்தின் பழங்கால பொருட்களை ஆராய்ந்து ஏர்ல் மற்றும் பார்வோன் (The Earl and the Pharaoh) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
 
அவரது நம்ப முடியாத கண்டுபிடிப்பின் மதிப்பிட முடியாத சேமிப்பை பாதுகாக்க எப்படி நிதி அளிப்பது என்பது குறித்து அவர் கவலைப்படுகிறார். எகிப்து நாட்டிலேயே தங்க வேண்டும் என்று கார்னார்வோன் உணர்ந்ததாக தனது உறவினர் எழுதிய ஒரு குறிப்பை கண்டுபிடித்ததாக லேடி கார்னார்வோன் சொல்கிறார். பத்திரிகைகளில் மோசமான எண்ணற்ற தவறான தகவல் வேறுவிதமான நிலையை முன் வைத்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
 
"பொக்கிஷம், தங்கம் ஆகியவற்றின் மீதான ஆர்வத்தை விடவும் கண்டுபிடிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவரது ஆர்வமாக இருந்தது", என்று லேடி கார்னார்வோன்  சொல்கிறார்.
 
 
துட்டன்காமன் கல்லறையின் உள்ளே இருந்து கண்டுபிடிக்கப்பட்ட அற்புதங்களை பாதுகாப்பதை எகிப்தால் சமாளிக்க முடிந்தது. பல தசாப்தங்களாக, கெய்ரோவில் உள்ள தாஹிர் சதுக்கத்தில் நியோ கிளாசிக்கல் எகிப்திய அருங்காட்சியகத்தில் மதிப்பு மிக்க கண்காட்சியாக காட்சிப்படுத்தப்படுகின்றன.
 
துட்டன்காமனின் திடமான தங்கத்தால் ஆன புதையல் முகமூடியானது,  பழங்கால கலையின் தலைசிறந்த படைப்பாக தெரிகிறது. நவீன எகிப்தின் சின்னமாக மாறியுள்ளது.
 
முக்கியமான 1922ஆம் ஆண்டு கண்டுபிடிப்பின் அதிகாரபூர்வ கதையில் எகிப்தியர்கள் தொடர்புடைய விஷயங்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற கோபம் எகிப்தியர்களிடம்  தொடர்ந்து இருக்கிறது.
 
 
"தொல்லியல் ஆவணங்களில் இருந்து பெரும்பாலான பெயர்கள் காணாமல் போயிருக்கின்றன. அவர்கள் என்ன செய்தார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர்களின் எதிர்வினைகள் என்ன?" என்று எகிப்திய வல்லுநர் மோனிகா ஹன்னா கேள்வி எழுப்புகிறார்.
 
கல்லறை பகுதியை சுத்தம் செய்ய எகிப்திய தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டது தவிர, அஹ்மத் கெரிகர், காட் ஹசன், ஹுசைன் அபு அவாத் மற்றும் ஹுசைன் அகமது சைட் உட்பட திறமையான எகிப்திய மேற்பார்வையாளர்களையும் கார்ட்டர் பணியமர்த்தினார்.
 
எகிப்து நாட்டுக்கு பயணம் செல்லும் முன்பு, குறைந்த அளவிலேயே முறையான கல்வியை கார்டர் பெற்றிருந்தார். அவர், தனது 17வது வயதில்  ஒரு தொல்லியல் ஆய்வு பயணத்தில் சேர்ந்தார். இந்த வேலைக்காக அவர்கள் பயிற்சி அளித்தனர்.
 
எகிப்திய தொழிலாளர்களின் பங்கு குறித்து  முன்னிலைப்படுத்தும் ஒரு கண்காட்சியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த ஆண்டு நடத்தியது. அவர்களைப் பற்றிய ஒர் அதிகாரப்பூர்வ புகைப்படம் இடம் பெற்றிருந்தது. ஆனால், அவர்கள், யார், யார் என்பது குறித்த தகவல்கள் அதில் இடம் பெறவில்லை.
 
 
ஒரு நீண்ட மெளனத்துக்குப் பிறகு, துட்டன்காமன் மீதான வசீகரம் 1960, 1970ஆம் ஆண்டுகளில் அதிகரித்து. கண்காட்சிகள் பெரும் வெற்றியை பெறும் வகையில் வெளிநாட்டு அருங்காட்சியங்களுக்கு தங்களது மதிப்புமிக்க சொத்துகளை கடனாக கொடுப்பதற்கு எகிப்து அனுமதி அளித்தது.
 
 
 
உலகின் பெரிய அருங்காட்சியங்களில் ஒன்றான கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் கிசா பிரமிடுகளுடன் அநேகமாக 2023ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது.
 
புதிய ஆர்வத்துக்கு இது உந்துதலாக இருக்கும். ஆண்டுக்கு 50 லட்சம் பார்வையாளர்களை கொண்டு வரும் சுற்றுலாத்துறைக்கு இது ஊக்கமளிக்கும் என்பது நம்பிக்கை.
 
 
"100 ஆண்டுகளுக்கு முன்பு ஹோவர்ட் கார்ட்டர் மேற்கொண்ட அதே வழியில் மீண்டும் கல்லறையை கண்டறிவதற்கான தனித்துவமான வாய்ப்பை கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் அளிக்கும்," என அதன் முன்னாள் இயக்குநர் தாரேக் தவ்பிக் கூறினார்.
 
பழங்கால குஃபு படகு மற்றும் 83 டன் எடையுள்ள ராம்செஸ் II சிலை ஆகியவை கெய்ரோவின் முக்கிய ரயில் நிலையத்திலிருந்து மிகவும் சிரமப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சிறப்பம்சங்கள் அற்புதமாக இருக்கும்.
 
 
சேதம் அடையக்கூடிய செருப்பு போன்ற கலைப்பொருட்களை சீரமைக்க நவீன பாதுகாப்பு பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விண்கல்லில் தயாரிக்கப்பட்ட இரும்பு பிளேடை குத்துவாளாக அவர் வைத்திருந்தது புதிய தகவலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 
 
அவருடைய மம்மி கேட் ஸ்கேன் முறையில் ஸ்கேன் செய்யப்படுகிறது. டிஎன்ஏ பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு முகம் புனரமைக்கப்பட்டு வருகிறது. அரச குடும்பத்தில் வளர்ப்பின் விளைவாக பலவிதமான மரபணுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட, பலவீனமான, முடமான, பற்கள் துருத்திக்கொண்டுள்ள இளைஞராக அவரைப் பற்றிய ஒரு படத்தை அது உருவாக்கியுள்ளது,
 
எனினும் மம்மிஃபிகேஷனில் நிபுணத்துவம் பெற்றதன் காரணமாக மிஸ்டர் மம்மி என்று அறியப்படும் டாக்டர் பிரியர்,  எலும்புகளைப் பார்த்ததில் இருந்து துட்டன்காமுனுக்கு ஒரு கால் இருந்தது என்ற கருத்து குறித்து இப்போது கேள்வி எழுப்புகிறார். அவரது கல்லறையில் கவசம் மற்றும் பிற கலைப்பொருட்கள் இருந்ததையும் அவர் குறிப்பிடுகிறார். அவை அவரை ஒரு போர்வீரனாகக் காட்டுகின்றன.
 
பலவீனமான பார்வோன் என்ற எண்ணத்திலிருந்து வெகு தொலைவில், "இவை அனைத்தும் துட்டன்காமன் குறைந்தபட்சம் போருக்குச் சென்றதான காட்சியுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றன" என்று அவர் கூறுகிறார்.
 
தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அவரைப் பற்றி கற்பனை செய்ததிலிருந்து மிகவும் வித்தியாசமான ஒன்றாக  துட்டன்காமனின் ஒரு சுவாரசியமான அழியா தன்மையின் வாழ்க்கையைப் பெருமைப்படுத்த முடியும்.Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies