ஏஞ்சலினா ஜோலி’ சர்ச்சையில் சிறை சென்ற பெண்ணின் உண்மையான புகைப்படம் வெளியீடு
29 Oct,2022
இரானில் பிரபலமாக வேண்டும் என்று நடிகை போல் அறுவை சிகிச்சை செய்து பயமுறுத்தும் வகையில் புகைப்பட வெளியிட்டு சிறை சென்ற பெண்ணின் உண்மையான முகம் தெரியவந்துள்ளது.
ஈரானில் 2019 ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போன்ற முக வடிவத்தைப் பயமுறுத்தும் வகையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு புகைப்படத்தை வெளியிட்ட பெண்ணின் உண்மையான முகம் வெளிவந்துள்ளது.
ஈரானில் பிரபலமாக வேண்டும் என்று 19 வயதான சஹர் தபார் என்ற பெண் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார். அதில் அவர் சோம்பி போன்ற தோற்றத்தில் இருந்தார். மேலும் அவரின் முக அமைப்பு அப்படியே பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போலவே இருந்தது. நடிகை ஏஞ்சலினா ஜோலி போல மாறுவதற்காக அந்த பெண் முக அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகக் கூறப்பட்டு வந்தது. அவரின் புகைப்படங்கள் உலகம் முழுவதும் வைரலாக பரவிய நிலையில் ஈரான் அரசு அந்த பெண்ணை ஊழல் மற்றும் மதரீதியான நிந்தனை ஏற்படுத்துதல் என்ற வழக்குகளில் கைது செய்தனர். அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பலைகளை கிளப்பியது. இரானின் சட்டப்படி அவர் செய்தது தவறு என்று 19 வயது பெண்ணை 2019 வருடம் அக்டோபர் மாதம் கைது செய்தனர். தற்போது இரானின் ஹிஜாப் வழக்கில் இறந்த மஹ்ஸா அமினி ஆதரவாக நடக்கும் போராட்டத்தின் எதிரொலியாக இவர் 14 மாதங்கள் கழித்து விடுதலையாகியுள்ளார்.
சாஹர் தபாரின் உண்மையான முகம்
அவரின் உண்மையான முகம் வெளியில் தெரியாத நிலையில் புகைப்படத்தில் உள்ளது தான் அவரின் முகம் என்று பலரும் நினைத்தனர். இந்த நிலையில் சஹர் தபாரின் உண்மையான முகம் வெளியில் வந்துள்ளது. அச்சுறுத்தும் வகையில் நடிகை ஏஞ்சலினா ஜோலி முக வடிவப் புகைப்படம் மேக் அப் மற்றும் கணினி மூலம் கொண்டுவரப்பட்டது என்று கூறியுள்ளார்.