உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன் துவங்கிய சீனா
29 Sep,2022
தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரை அடையாளம் காண்பதற்காக, உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகின் அதிகாரமிக்க நாடாக மாறுவதற்கான முயற்சியில், நம் அண்டை நாடான சீனா ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரைக் கண்டு பிடிப்பதற்காக, உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன்களைஅந்த நாடு துவக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன
.கனடா, அயர்லாந்து உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்த சட்டவிரோத போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கியுள்ளது. சீனாவின் போலீஸ் துறையான, பி.எஸ்.பி., எனப்படும் பொது பாதுகாப்பு வாரியத்தின் கீழ், இந்த போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன. இதுவரை, 21 நாடுகளில், 30 போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கிஉள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் ஏற்கனவே மனித உரிமை மீறல் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், மற்ற நாடுகளில் தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரை கண்டுபிடிக்க இந்த போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கியுள்ளது. இதனால், மனித உரிமை மீறல் செயல்கள் அதிகரிக்கும் என, மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.தொழில் பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில், இந்த போலீஸ் ஸ்டேஷன்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.