பராஷூட் கயிற்றை வெட்டி கொலை செய்த படகோட்டி- மர்மத்தை கண்டு பிடித்த பொலிசார் !
25 Sep,2022
தனது மகன் மற்றும் மருமகனோடு பராஷூட்டில் பறந்தவேளை, மர்மமான முறையில் சுப்ரஜா இறந்தார். அவரது மகனும் மருமகனும் கடும் காயங்களோடு பிழைத்துக் கொண்டார்கள். இவர்கள் பறந்த பராஷூட் கயிறு அறுந்து, அது ஒரு பாலத்தின் மேல் தீடீரென விழுந்ததால் இந்த இறப்பு ஏற்பட்டது என, அமெரிக்க பொலிசார் முதலில் நம்பினார்கள். இதனால் படகோட்டியான டானியல் கவின்(49) அவர்கள் விடுதலை செய்தார்கள். ஆனால் முக்கிய தடங்கள் சில சிக்கியுள்ள நிலையில். டானியல் கவின் இந்தக் கொலையை திட்டமிட்டுச் செய்ததாக பொலிசார் அவரை மீண்டும் கைது செய்துள்ளார்கள்.
படகை ஓட்டிச் சென்ற டானியல், ஒரு கட்டத்தில் படகில் கட்டி இருந்த பராஷூட் கயிற்றை கத்தியால் வெட்டியுள்ளார். இதன் காரணத்தால் தான் சுப்ரஜா இறந்துள்ளதாக பொலிசார் கண்டு பிடித்துள்ளார்கள். இந்தச் சம்பவம் அமெரிக்காவின் புளோஃரிடா மாநிலத்தில் நடந்துள்ளது. குறித்த இந்தியப் பெண்ணை ஏன் டானியல் கொலை செய்ய வேண்டும் ? என்ற கோணத்தில் பொலிசார் ஆராய்ந்து வருகிறார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறாரள் ? இது ஏன் நடந்தது என்பது போன்ற விடையங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளது.