பிரான்ஸ் பொலிசார் பெப்பர் ஸ்பிரே அடித்து அகதிகளை விரட்டிய காட்சிகள் !
26 Aug,2022
பிரான்ஸ் நாட்டின் கடல் கரை நகரமான கலையில் இருந்து, பிரித்தானியாவுக்கு கள்ளத் தோணியில் ஏறி வர முற்பட்ட பல அகதிகளை பொலிசார் கையும் களவுமாகப் பிடித்து கலைத்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்ததை அடுத்து, பிரான்ஸ் நாடு பிரித்தானியா மீது கடும் அதிருப்த்தியில் இருந்தது. இதனால் பிரான்சில் இருந்து பிரிட்டன் நோக்கிச் செல்லும் அகதிகளை அன் நாடு கண்டு கொள்வதே இல்லை. ஆனால் சில மாதங்களாக நிலமை மாறி விட்டது. உக்கிரைன் போர் ஆரம்பமான உடனே, பிரித்தானியா உக்கிரைனுக்கும், ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் செய்த உதவி எண்ணில் அடங்காதவை. இதனால் பிரான்ஸ் அரசு மனம் மாறி தற்போது பிரித்தானியாவுக்கு உதவி வருகிறது. அந்த வகையில், தற்போது பிரான்சில் இருந்து பிரிட்டன் செல்லும் அகதிகளை அன் நாட்டுப் பொலிசார் கடுமையாக கட்டுப்படுத்தி வருகிறார்கள்.