பட்ஜெட்டில் சென்று வர ஏற்ற 5 வெளிநாடுகள்!

10 Aug,2022
 

 
 
 
ஸ்மார்ட்போனில் மூழ்கியிருப்பவர்களுக்கு உலகம் உள்ளங்கைக்குள் இருப்பதாக தோன்றும். ஆனால் பயணிக்க தொடங்கினால் தான் உலகம் எவ்வளவு பரந்து விரிந்தது, எத்தனை ஆச்சர்யங்கள் நிரம்பியது என புரியும். அதுவும் வெளிநாடு சுற்றுலா என்றாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அந்த நினைவுகள் தரும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது. தமிழ்நாட்டிலிருந்து பட்ஜெட்டில் சுற்றி வர ஏற்ற 5 நாடுகள் குறித்து பார்ப்போம்
 
 
 
1.) சிங்கப்பூர்
 
 
 
தமிழர்கள் அதிகம் பேர் வசிக்கும் ஆசிய நாடுகளில் ஒன்று தான் சிங்கார சிங்கப்பூர். சென்னை 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவு என்றால், சிங்கப்பூர் அதனை விட சற்றே அதிகம். 728 சதுர கிலோமீட்டர். சிறிய நவீன நாடு அது. நீங்கள் இதுவரை எந்த வெளிநாடுகளுக்கும் சென்றதில்லை எனில் இந்த நாட்டை தேர்ந்தெடுக்கலாம். சென்னையிலிருந்து சென்று வர விமானக் கட்டணம் ரூ.30 ஆயிரத்திற்குள் அடங்கும். 4 நாட்கள் இங்கு தங்கினால் முக்கிய இடங்களான தேசிய அருங்காட்சியகம், கார்டன்ஸ் பை த பே, மெரினா பே சேன்ட்ஸ், சிங்கப்பூர் பிளையர், அண்டர்வாட்டர் வேர்ல்டு, சிங்கப்பூர் வனவிலங்கு பூங்கா, பறவைகள் பூங்கா, தேசிய ஆர்ஜிட் தோட்டம் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். இவை ஒவ்வொன்றுக்கான கட்டணம் மாறுபடும். அதிகபட்சம் ரூ.3 ஆயிரத்திற்குள் இருக்கும். இங்கு தங்கும் விடுதிகள் பட்ஜெட்டில் தேடினால் நாளொன்றுக்கு ரூ.2 ஆயிரத்திற்குள் கிடைக்கும். மேலும் இலவசமாக சுற்றிப்பார்க்கவும் நிறைய விஷயங்கள் உள்ளன. ஜூலை - ஆகஸ்ட் இங்கு செல்ல உகந்த மாதம்.
 
 
 
2.) மலேசியா
 
 
தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக மலேசியா உள்ளது. ஒரு லட்ச ரூபாய்க்குள் வெளிநாட்டுப் பயணங்களைத் தேடுபவர்கள் மலேசியாவுக்குச் செல்லலாம். தமிழ்நாட்டிலிருந்து மலேசியா சென்று திரும்ப ஒருவருக்கு விமானக் கட்டணம் ரூ.25 ஆயிரத்திற்குள் அடங்கும். முன்னரே திட்டமிட்டாலும் மேலும் சில ஆயிரங்கள் குறையும். கோலா லம்பூர் சென்று இறங்கிய உடன் ஒரு இரவுக்கு தங்க 500 ரூபாய்க்கு எல்லாம் டார்மிட்டரி அறைகள் கிடைக்கும்.
 
 
கோலா லம்பூரில் நம்மூர் இட்லி, தோசையிலிருந்து அவர்கள் நாட்டு பீப், சிக்கன் நூடுல்ஸ், அப்பம் பாலே, நீல அரிசி சாதம் போன்ற வகை வகையான உணவுகளை ருசிக்கலாம். டிசம்பர் - பிப்ரவரி வரை மலேசியா சென்று வர உகந்த காலம். இங்கு சுற்றிப் பார்க்க ஏற்ற இடங்கள், பெட்ரோனாஸ் டிவின் டவர், நம்மூர் பிரம்மாண்ட முருகன் கோயில் உள்ள பத்து மலை, ரெடாங் தீவு ஆகியவை உள்ளன. அங்குள்ள யானைகள் சரணாலயம், சைனா டவுனில் பேன்சி ரிக்சா ரைடு, சிங்கப்பூர் நதிக்கரையில் இரவு உணவு ஆகியவை அவசியம் அனுபவிக்க வேண்டியவை.
 
 
3.) தாய்லாந்து
 
 
 
 
ஆண்டுதோறும் அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நாடு தாய்லாந்து. அதன் கடற்கரைகள், மலைகள், கலாச்சாரம், உணவு என கண்டுகளிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. சென்னையிலிருந்து தாய்லாந்து சென்று திரும்ப ஒரு நபருக்கு விமானக் கட்டணம் ரூ.25 ஆயிரம் ஆகும். முன்னரே திட்டமிட்டால் இரண்டு, மூன்று ஆயிரங்கள் குறையும். சாகச ஆர்வலர்கள் முதல் ஓய்வு தேடுபவர்கள் வரை, தாய்லாந்து அனைத்து வகையான பயணிகளுக்கும் ஏற்றது. அங்கு 2 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. ஒன்று பாங்காக் மற்றொன்று புக்கெட். இங்கு சென்று இறங்கி சுற்றிப்பார்க்கலாம்.
 
தாய்லாந்தில் தங்கும் அறைகள் ரூ.600லிருந்தே ஆரம்பிக்கின்றன. பட்ஜெட் உணவுக்கு இங்கு பஞ்சமில்லை. ஏனெனில் தாய்லாந்து தெரு உணவுக்கு பிரபலமானது. மதிய உணவு 60 ரூபாய்க்கு கூட கிடைக்கும். பாங்காக், பட்டாயா, பவளத் தீவுகள், அயுத்தாயா, சியாங் மாய் போன்ற இரண்டு மூன்று நகரங்களுக்கு செல்வது தாய்லாந்து கலாசாரத்தை அறிய உதவும். பழங்கால புத்தர் கோயில்கள், பட்டாயா மிதக்கும் சந்தைகள், யானைகள் கண்காட்சி ஆகியவை இங்கு கண்டுகளிக்க வேண்டியவை. 5 நாட்கள் செலவிட்டால் அங்குள்ள முக்கிய இடங்களை தவறவிடாமல் பார்த்து வரலாம்.
 
 
4.) இந்தோனேசியா
 
 
 
விசா இல்லாமல் சென்று வர சிறந்த மற்றும் பட்ஜெட் சுற்றுலாவுக்கு இந்தோனேசியா உகந்தது. கலாசார பாரம்பரியமும், எழில்மிகு இயற்கைக் காட்சிகளும் காணக்கிடைக்கும் இடம் தான் இது. பாலி, ஜாவா, யோககர்த்தா, ஜகார்த்தா மற்றும் சுமத்ரா ஆகிய தீவுகள் இங்கு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடங்களாக உள்ளன. இங்கு நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள் உண்டு. எரிமலைச் சுற்றுலா போன்ற சுவாரஷ்யமிக்கவையும் உள்ளன. ஜகார்த்தாவில் தங்குமிடங்கள் ரூ.700லிருந்தே கிடைக்கும். உணவு இங்கு கொஞ்சம் காஸ்ட்லி. பட்ஜெட்டிலும் கிடைக்கும். அவற்றை முன்னரே தேடி தெரிந்துகொள்ள வேண்டும். விமான கட்டணம் இந்தோனேசியா சென்று திரும்ப ஒரு நபருக்கு ரூ.30 ஆயிரம் வரை ஆகும்.
 
 
 
5.) செஷல்ஸ்
 
 
 
இந்தியாவிலிருந்து குறைந்த பட்ஜெட்டில் ஒரு வெளிநாட்டு தீவு நாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் செஷல்ஸ் ஏற்றது. ஜொலிக்கும் இந்தியப் பெருங்கடலின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த ஆப்பிரிக்க நாடு 100க்கும் மேற்பட்ட தீவு கூட்டங்களால் உருவானது. அதன் எல்லையில்லா இயற்கை அழகும், கவின் மிகு கடற்கரைகளும் பயணிகளை உறைய வைக்கக் கூடியது. குடும்பத்துடன் அல்லது கணவன் மனைவியாக ரொமாண்டிக் டிரிப் செல்லவும் சிறந்த இடம்.
 
 
 
மாஹே தீவு, லா டீக், மாய் பள்ளதாக்கு, அன்சி சோர்ஸ் டி'அர்ஜெண்ட், பிரிகேட் தீவு போன்றவை இங்கு பிரபலமாக உள்ள தீவுகள். பரபரப்பான நெரிசல் மிகுந்த வாழ்விலிருந்து ரிலாக்ஸ் தேடி செல்ல விரும்புவோருக்கு இந்த தீவுகள் வரப்பிரசாதம். இங்கு சைக்கிள்கள் எளிதாக கிடைக்கும். அவற்றை எடுத்துக்கொண்டு தீவை அளக்கலாம். சென்னையிலிருந்து விமானத்தில் செல்ல 15 மணி நேரம் ஆகும். சென்று வர விமானக் கட்டணம் மட்டும் ரூ.1 லட்சம் தேவைப்படும். அங்கு ஒரு 30 ஆயிரம் ரூபாய் தேவைப்படும்.



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies