உலகின் வாழப் பொருத்தமான நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தை ஒஸ்ட்ரியாவின் வியன்ன , டென்மார்க்கின் கோபென்கன் !
26 Jun,2022
.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தை ஒஸ்ட்ரியாவின் வியன்ன நகரமும், டென்மார்க்கின் கோபென்கன் நகரமும் வகிக்கின்றமை குறிப்பிடத்கத்கது.
நகரங்களின் ஸ்திரத்தன்மை, சுகாதார வசதிகள், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உட்கட்டுமான வசதிகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொருளியல் புலனாய்வுப் பிரிவின் வருடாந்த தரப்படுத்தல் பட்டியலில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னரும் கல்கரி நகரம் இந்தப் பட்டியலின் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்திருந்த போதிலும் இந்த தடவையே 3ம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
முன்னிலை உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் மூன்று கனேடிய நகரங்கள் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பட்டியலில் கனடாவின் கல்கரி நகரம் 3ம் இடத்தையும், வான்கூவார் 5ம் இடத்தையும், றொரன்டோ எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
கல்கரி நகரிற்கு இவ்வாறான ஓர் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றமை மகிழ்ச்சி அளிப்பதாக நகர மேயர் ஜொயொட்டி கொன்டான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த தர வரிசைக்கான ஏதுக்களில் வாழ்க்கைச் செலவு உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.