250 பழமையான கார்கள் எகிப்து நாட்டவர் சேகரிப்பு
21 Apr,2022
எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் 250க்கும் மேற்பட்ட அரியவகை பழமையான கார்களை சேகரித்து அசத்தி உள்ளார்.
ஆப்ரிக்க நாடான எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் வசிக்கும் முகமது வாதான் சுற்றுலா நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப்பணிக்கு இடையே அரியவகை கார்களையும் அவர் சேகரித்து வருகிறார். இது வரையிலும் 250க்கும் மேற்பட்ட பழமையான கார்களை சேகரித்துள்ளார். இதில் எகிப்து நாட்டின் கடைசி அரசரான பரூக் பயன்படுத்திய 1924ம் ஆண்டின் 'டி - போர்டு' ரக கார் தான் மிகவும் பழமையான கார் ஆகும்.உலகிலேயே அதிக பழமையான கார்களை சேகரித்து வைத்துள்ள நபர் என்ற பெருமையை முகமது வாதான் பெறக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.