பால்வெளி வீதியில் விசித்திர சூழலும் பொருள்
28 Jan,2022
ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் பால்வெளி வீதியில் இதுவரை பார்த்திராத, விசித்திரமான சுழலும் பொருளை கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் வானியல் ஆராய்ச்சியில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் ஒருவர், ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்காக பால்வெளி வீதி ஆய்வில் ஈடுபட்டு இருந்தார். அப்போது விசித்திரமான சூழலும் பொருள் ஒன்றை அவர் பால்வெளி வீதியில் கண்டுபிடித்தார். இந்த பொருளில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மூன்று முறை 'ரேடியோ' சக்தி வெளிப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.இது குறித்து மேற்கொண்டு ஆய்வில் ஈடுபட்டு வரும் வானியல் இயற்பியலாளர் நடாஷா ஹுர்லி வாக்கர் கூறியதாவது:இந்த விசித்திர பொருளில் இருந்து 18.18 நிமிடங்களுக்கு ஒரு முறை 'ரேடியோ' சக்தி வெளிப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. பால்வெளி வீதியில் இது போன்ற பல விசித்திர பொருட்கள் இருந்தாலும், இது சற்று வித்தியாசமாக உள்ளது. பூமியில் இருந்து 4,000 ஒளி ஆண்டுகள் துாரத்தில் இருக்கும் அந்த விசித்திர பொருளுக்கு தானாகவே ரேடியோ சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் இருக்க வாய்ப்பில்லை.அப்படி இருக்கையில் 18.18 நிமிடங்களுக்கு ஒரு முறை அதில் இருந்து ரேடியோ சக்தி வெளிப்படுவது விசித்திரமாக உள்ளது. வேற்று கிரகவாசிகளின் செயல்பாடாகக் கூட இருக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்