உடலுறவு பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் .

18 Dec,2021
 

 
 
உடலுறவு பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. உடலுறவு சார்ந்த விஷயங்களை எல்லோரும் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆனால், இங்கு பலரும் அதனைப் பற்றி பேசவே தயங்குகின்றனர். இங்கே உடலுறவு பற்றி உங்களுக்குத் தெரியான சில உண்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
 
 
செக்ஸ் என்பது பலருக்கும் புதிரானதாகவே உள்ளது. இதற்கான காரணம் என்னவெனில் அதனைப் பற்றி பலரும் பேசத் தயங்குவது தான். உடலுறவு பற்றி பேசப்படும் நிறைய கட்டுக்கதைகளில் பல உண்மைகளும் இருக்கவே செய்கின்றன. ஆணும், பெண்ணும் உடல் ரீதியாகச் சேருவதன் மூலம் தான் இனப்பெருக்கம் நிகழும். எனவே நீங்கள் உடலுறவைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இங்கு செக்ஸ் பற்றி நீங்கள் அறிந்திடாத சில விஷயங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
 
​வாரத்திற்கு ஒரு முறை உடலுறவு
 
வாரத்திற்கு ஒருமுறை உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் தங்களின் ரிலேஷன்ஷிப் அல்லது திருமண உறவில் மற்ற தம்பதிகளைக் காட்டிலும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்களாம்.
 
அதேபோன்று உடலுறவுக்கு முன்னதாக மனைவியிடம் மனம்விட்டு மகிழ்ச்சியாகப் பேசி, சிரியுங்கள். முன் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். அது இருவருக்குமிடைய அதிக இணக்கத்தையும் கூச்சமின்மையையும் ஏற்படுத்தும். பொதுவாகவே அதேபோல், உடலுறவுக்கு முன்னும் முன் விளையாட்டுகளில் ஈடுபடுவது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான செயலாகும்.
 
​படுக்கையறை தந்திரங்கள்
 
நீங்கள் உங்கள் மனைவியின் மனதை நிஜமாகவே ஆத்மார்த்தமாகக் கவர வேண்டும் என்று நினைத்தால்,, அவருடன் படுக்கையில் சேர்ந்து இருக்கும் சமயங்களில் மற்ற சமயங்களை விட அதிகமாகச் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். புன்னகையை அதிகமாகச் சூடிக் கொள்ளுங்கள். அதேபோல், அவர்கள் சொல்லும் விஷயங்களுக்கும் தலையசைக்க வேண்டும்.
 
எப்போதும் இரவில் நன்றாக ஆழ்ந்து உறங்குபவர்களுக்கு, அதற்கு அடுத்த நாள் வலுவான பாலியல் ஆசை இருக்குமாம். அதனால் நன்றாகத் தூங்குங்கள். நிம்மதியான, ஆழ்ந்த தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் பாலியல் ஆசை அதிகரிக்கவும் உதவுகிறது.
 
 
 
​சுமைகளைப் பகிர்ந்துக் கொள்வது
 
வீட்டு வேலையைப் பகிர்ந்து கொள்ளும் தம்பதியினர் மற்றவர்களைக் காட்டிலும் அதிக அளவில் உடலுறவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், மனைவிக்கு உதவும் கணவன் அல்லது கணவனுக்கு உதவும் மனைவி இருவருக்கும் அதிக அளவிலான புரிதல் இருக்குமாம். அதுவும் சமையலைறையில் தங்களுக்கு உதவும் ஆண்களைப் பெண்கள் மிகவும் அதிகமாக விரும்புவார்கள். அதனால் அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கையும் உடலளவிலான அந்நியோன்யமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
​நிறைய சம்பாதிப்பீர்கள்
 
அதிகமாக உடலுறவில் ஈடுபடும் நபர்கள் மற்றவர்களைவிட அதிகமாக சம்பாதிப்பீர்கள். ஏனெனில், செக்ஸில் ஈடுபடுவதன் மூலம் அவர்களுடைய மனநிலை வெகுவாக மேம்படுகிறது. அதோடு, மன அழுத்தம் மற்றும் பதட்டமும் குறையும். இதனால், அவர்கள் வழக்கத்தைவிட உடலிலும் மனதளவிலும் புத்துணர்ச்சியாக இருப்பார்கள். இதனால் வேலையில் உங்களின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
 
 
​தோற்றம் முக்கியமல்ல
 
பொதுவாக உடலுறவில் அழகுக்கும் முக்கிய இடம் இருப்பதாக நம்மில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். படுக்கையில் இருக்கும்போது பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அவர்களின் தோற்றம் முக்கியமாகத் தெரிவதில்லை பொதுவாக எல்லோரும் அதற்குப் பதிலாக படுக்கையில் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பது தான் முக்கியமாக இருக்குமாம்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies