பெண்ணை இழுத்து சென்ற முதலை தப்பித்தது எப்படி

07 Dec,2021
 

 

 
 
ஜாம்பியாவில் விடுமுறையை கழித்து கொண்டிருந்த டீன் ஏஜ் பெண் ஒருவர் முதலையால் தாக்கப்பட்டார். படகுச் சவாரி சென்று கொண்டிருந்த பெண்ணின் கால்களை 10 அடி நீள முதலை கவ்வி இழுத்தது என்றும் உடன் இருந்த நண்பர்கள் முதலையை தாக்கி இவரை மீட்டுள்ளனர் என்ற செய்தியும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 
18 வயதான எமிலி இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய நண்பர்களுடன் விடுமுறைக்காக தென்னாப்பிரிக்க நாடான ஜாம்பியாவிற்குச் சென்றிருந்தார். விக்டோரியா அருவியின் அருகில் எமிலி தன்னுடைய நண்பர்களுடன் படகுசவாரி சென்றுள்ளார். அப்பொழுது அங்கே படகின் அருகில் வந்த முதலை எமிலியின் காலைப் பிடித்து அவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது என்றும், அவரின் நண்பர்கள் காப்பாற்றினார்கள் என்றும் முன்னாள் ராணுவ மேஜரான எமிலியின் தந்தை தெரிவித்திருந்தார்.
 
 
 
எமிலியைத் தாக்கிய 10 அடி நீளமுள்ள முதலை ஆப்பிரிக்காவை சேர்ந்த நைல் முதலை என்று அழைக்கப்படுகிறது. இந்த இனத்தை சேர்ந்த முதலைகள் மிகவும் ஆக்ரோஷமான குணம் கொண்டவை என்றும், தன் எதிரில் இருக்கும் எந்த தன்னுடைய பார்வையின் வரம்புக்குள் இருக்கும் எந்த மிருகத்தையும் தாக்கும் பலம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. நைல் முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட எமிலி உயிர்பிழைத்தது அதிசயம் தான்.
 
 
எமிலி எப்படி காப்பாற்றப் பட்டார் என்பதை பற்றி அவரின் தந்தை தெரிவித்தார். எமிலியை ஒரு பெரிய முதலை இழுத்துச் செல்வதை பார்த்த அவரின் நண்பர்கள் முதலில் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தனர். பின்னர் சுதாரித்துக் கொண்டு, முதலையைத் தாக்கத் தொடங்கினார்கள். முதலையின் பிடியில் இருந்து எமிலியை காப்பாற்ற வேண்டுமானால் முதலையே எமிலியை விடுவித்தால் தான் நடக்கும்.
 
எனவே, முதலையின் வாயிலிருந்து எமிலியை விடுவிப்பதற்கு அதனை தொடர்ந்து தாக்கினார்கள். ஒருவழியாக எமிலியின் காலை முதலை விடுவித்த பின்னர், நண்பர்கள் அவரை உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் உடனே அவர் காயங்களுக்கு சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்திருந்தனர். முதலை தண்ணீரில் இழுத்துச் சென்றது முதல் எமிலி கொஞ்சம் கூட அழவே இல்லை என்பது அவரின் நண்பர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்று அவரின் தந்தை தெரிவித்திருந்தார். மரணப்படுக்கை வரை சென்று மீண்ட எமிலி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
தொடர் சிகிச்சையால் உடல்நிலை தேறி வருவதாகவும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் எமிலி இங்கிலாந்தில் இருக்கும் தன் குடும்பத்தினருடன் சென்று விடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஓரளவுக்கு உடல் தேறிய எமிலி. அதிர்ச்சியில் இருந்து மீண்டவுடன், அவரின் மருத்துவர் அவரிடம் மெதுவாக பேச்சு கொடுத்தார். "முதலில் என் காலை பிடித்து இழுத்து சென்ற போதும், நண்பர்கள் முதலையை தாக்கி என்னை மீட்ட போதும் நான் என்னுடைய காலை இழக்க நேரிடும் என்று உறுதியாக நினைத்தேன்.
 
என் நண்பர்களிடம் பரவாயில்லை என் கால் மட்டும் தானே, போனால் போகட்டும் நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்று சமாதானம் செய்து கொண்டேன்” என்று எமிலி தெரிவித்தார். மருத்துவர்களின் சிகிச்சையால் அவருடைய காயங்கள் விரைவிலேயே குணமாகி, மீண்டும் பழையபடி நடமாட முடியும் என்றும் கூறினார்.



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies