ஐஸ்லாந்து: சிறிய நிலநடுக்கத்தால் கிரிம்ஸ்வோட்ன் எரிமலை வெடிக்கும் அபாயம்.!
07 Dec,2021
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தில் மக்கள் வசிக்காத தொலைதூர பகுதியில் அமைந்துள்ளது கிரிம்ஸ்வோட்ன் எரிமலை. இந்த எரிமலையானது ஒரு பெரிய பனிப்பாறையின் கீழ் அமைந்துள்ளது.
அங்கு நேற்று 3.6 ரிக்டர் அளவில் பல சிறிய நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன் காரணமாக கிரிம்ஸ்வோட்ன் எரிமலை தற்போது வெடிக்கும் அபாயத்தில் உள்ளது. இதனை அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐஸ்லாந்தின் மிகப்பெரிய பனிப்பாறையான வட்னஜோகுல்லின் கீழ் அமைந்துள்ள க்ரிம்ஸ்வோட்ன் எரிமலை, கடைசியாக 2011 இல் வெடித்தது. அதன் சமீபத்திய வெடிப்புகள் ஒவ்வொரு ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.