சுவீடனுக்கு புதிய பெண் பிரதமர்?
11 Nov,2021
ஐரோப்பிய நாடான சுவீடனின் பிரதமராக இருந்தவர் ஸ்டெபான் லாப்வென். கடந்த 2014ம் ஆண்டில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லாப்வென், பின் 2018ல் மீண்டும் பிரதமரானார்.
இந்நிலையில், அவரது அரசுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த ஓட்டெடுப்பில் லாப்வென் தோல்வி அடைந்தார்.இதையடுத்து, மறுதேர்தல் அல்லது ராஜினாமா என்ற முடிவை எடுக்க வேண்டிய சூழலுக்குதள்ளப்பட்டார். கொரோனா தொற்று பரவல் காரணமாக உடனடியாக தேர்தல் நடத்த முடியாத நிலையில், இரண்டு கட்சிகளின் ஆதரவுடன் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
சுவீடனில் அடுத்த ஆண்டு பொது தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து ஸ்டெபான் லாபென் நேற்று விலகினார்.அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகிக்கும் மக்டலெனா ஆண்டர்சன் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் பொறுப்பேற்றால்சுவீடனின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெறுவார்.