ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொல்லவில்லை!! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புத்தகம்!!

12 Aug,2021
 

 
 
 
'ராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்மது என்கிற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார்.
 
அந்த நூலின் பெயர: Assassination of Rajiv Gandhi: An Inside Job?'
 
ஃபராஸ் அஹ்மது என்பவர் சாதாரண ஒரு எழுத்தாளர் அல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ், தி பயனியர், டெக்கான் கிரானிக்கில், தி ஆசியன் ஏஜ் மற்றும் ட்ரிபியூன் போன்ற முன்னணி ஊடகங்களில் அரசியல் மற்றும் புலனாய்வு பிரிவுகளில் பணியாற்றியவர்.
 
இதுவரை ராஜீவ் காந்தி கொலை குறித்து வந்த நூல்கள் யாவும் ஒன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு குறித்தோ, அல்லது SIT கார்த்திகேயன், ரகோத்தமன் போன்றவர்கள் தங்களின் புலனாய்வு குறித்தோ எழுதப்பட்டவை .
 
ஆனால், இந்த நூல்தான் முதன்முறையாக புலனாய்வு, குற்றச்சாட்டப்பட்டவர்களின் வாதம் தாண்டி, அனைத்திற்கும் மேலாக அதன் பின்னே இருக்கும் 'அரசியல்' குறித்து தெளிவாக விவரிக்கிறது.
 
இந்த நூலில் அவர் 'இப்படி' துவங்கி 'இப்படியே' முடிக்கிறார். அதாவது, எந்த ஒரு காவல் அமைப்பும், புலனாய்வு நிறுவனமும் அதிமுக்கிய கொலைகளை விசாரிக்கும் போது, கொலைக்கு பின்னே இருக்கும் கொலையாளிகளின் நோக்கம், கொலை செய்ய ஏற்படும் தூண்டுணர்வு (motivation), கொலையால் கிடைக்ககூடிய ஆதாயம்.. இவற்றை ஆராயாமல் எந்த ஒரு குற்ற விசாரணையையும் நிகழ்த்த முடியாது, துப்பு துலக்குவதில் வெற்றியும் கிட்டாது என்கிறார்.
 
ராஜீவின் கொலையை அந்த நோக்கில் ஆராயும்போது... ஆதாயமடைந்தவர்கள் யாராக இருக்கிறார்கள் என்பதை ராஜீவுக்கு பிந்தைய கடந்த இரு தசாபத்ங்களின் அரசியல் போக்கில் பார்க்க முடிகிறது.
 
ராஜீவ் இறக்கும் முன்னர் பாராளுமன்றத்திற்கு உள்ளேயே நுழைய முடியாமல் இருந்த ஒரு கும்பல் இன்று பாராளுமன்ற அரசியலை மட்டுமின்றி, அரச நிறுவனங்கள் அனைத்தையும் ஆட்சி செய்கிறது. கொலையோடு நேரடியாக சம்பந்தப்பட்ட அல்லது ஜெயின் மற்றும் வர்மா கமிஷனால் சந்தேக நிழல் படிந்த.. நரசிம்மராவ் துவங்கி சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி, டி என் சேஷன், நாராயணன், மார்கரெட் ஆல்வா, மரகதம் சந்திரசேகர் உள்ளிட்ட தலைவர்களும்.. விசாரணையை திட்டமிட்டு குழப்பி, திசை திருப்பிய அதிகாரிகள் எண்ணற்றோர் தங்கள் புரொஃபஷனில் உச்சத்திற்கு செல்கிறார்கள்.
 
குறிப்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு (SIT) கார்த்திகேயன், ராகவன் பிற்காலத்தில் சிபிஐ தலைவராகிறார். இவர்தான் பின்னர் குஜராத் படுகொலைகளில் மோடிக்கு 'புனிதர்' பட்டம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டிற்கு அறிக்கை அளித்தவர். அந்த ராகவன் தற்போது சைப்ரசுக்கான இந்தியாவின் ஹை கமிஷனர்.
 
மற்றொரு அதிகாரி Radhavinod Raju பின்னர் NIA வின் தலைவரானார்.
 
ஆமு நாராயணன் NSA தலைவராகி, பிரதமரின் சிறப்பு ஆலோசகராகி, பின்னர் வங்காள கவர்னர் ஆனார்.
 
ராஜீவ் கொலை விசாரணையில் தொடர்புடையவர்கள் அனைவரும் தத்தமது வாழ்வின் உச்சத்தை தொட்டது கொலையின் சூத்திரதாரிகளை காப்பாற்றியதற்காக கிட்டிய பரிசா?
 
அதேவேளை, புலிகளுக்கு ராஜீவின் இறப்பால் ஏற்பட்ட ஆதாயம் என்று ஏதுமில்லை. மாறாக பெரும் இழப்பே மிச்சம்.
 
ஏனெனில்இ சோதனைக் காலங்களில் புலிகளின் பதுங்கு அரண் தமிழ் நாடு. புலிகளின் 'இதயத்துடிப்பு' தமிழர்களின் புலிப்பற்று. ராஜீவ் கொலையால் அது முற்றிலும் நின்று விட்டது. தமிழ்நாடு தொடர்பறுந்தால், இன்றல்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் எதிரிகளிடம் இலகுவாக expose ஆகிவிடுவோம் என்பதை யூகிக்கத் தெரியாத இயக்கமல்ல புலிகள் இயக்கம்.
 
அமைதிப்படையை அனுப்பி தமிழர்களை கொன்றதற்கு பழிக்கு பழியாக ராஜீவை கொன்றார்கள் என்ற இந்திய அதிகார வர்க்கத்தின் சொத்தை வாதத்தை ஆய்வு செய்தால்.. ஒரு தேசத்தை கட்டி எழுப்ப பெரும் கனவுடன் முப்படை கட்டி வீரச் சமர் புரியும் ஒரு விடுதலை இயக்கம்... போஃபர்ஸ் ஊழலில் சிக்கி பல்லு புடுங்கப்பட்டு, ஆட்சியை இழந்து, மண்டல கமிஷனால் விபி சிங்கிடம் தன் வசீகரத்தையும் இழந்த ஒரு தனி நபர் ராஜீவின் பின்னால்.. அவரின் உயிருக்கு குறி வைத்து, படை அனுப்பி, கொலைசெய்ய காத்திருக்கும் சிறுபிள்ளை விளையாட்டை செய்யும் என்பதை உலக அரசியல் தெரிந்த எவரும் நம்ப மாட்டார். (ராஜா வீட்டு கன்றுக்குட்டி ராஜீவுக்கு தவறான ஆலோசனை வழங்கிஇ அமைதிப்படையை வைத்து புலிகளை அழிக்க ஒரு 'வர்க்கம்' முயல்வதை, அமைதிப்படையே பிரபாகரனிடம் விளக்கி இருக்கிறது).
 
 
 
SITகார்த்திகேயன் தரப்பு மற்றும் சுப்பிரமணியசாமி தரப்பு உளவு மற்றும் ஊடகங்கள் மூலம் பரப்புவது போல .. ராஜீவ் மீண்டும் ஆட்சிக்கு வந்து அமைதிப்படை அனுப்புவார் என்று புலிகள் பயந்தார்கள் என்பதும் பொருளற்ற வாதம்.
 
ஏனெனில்
 
1. ராஜீவின் செல்வாக்கு அதள பாதாளத்தில் இருந்தது. அவர் ஜெயிக்க வாய்ப்பேயில்லை. ராஜீவ் இறந்த பின்னரும், அந்த அனுதாப அலையிலும் கூட அத்தேர்தலில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெற முடியவில்லை. 244 தொகுதிகளில் மட்டுமே வென்றது, 28 தொகுதிகள் மெஜாரிட்டிக்கு குறைவு. (இந்திரா இறந்து ஏற்பட்ட அனுதாப அலையில் 410 இடங்களை காங்கிரஸ் வென்றது நினைவில் இருக்கலாம்)
 
2. மேலாக, இறையாண்மை கொண்ட இலங்கைக்கு இஷ்டம் போல இந்தியா அமைதிப்படை அனுப்ப முடியாது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் காலாவதியாகி.. ராஜீவின் பரம வைரியும், அமைதிப்படையை இலங்கை மண்ணில் இருந்து வெளியேற்றுவேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த பிரேமதாசா அப்போது அதிபராகி இருந்தார். பிரேமதாசா இந்தியப்படையை எதிர்க்க புலிகளுக்கு ஆயுதம் வழங்கியவர். இப்படியாக, புலிகளின் நட்பு சக்தியாக இருந்த விபிசிங்- ஜார்ஜ் பெர்னாண்டஸ்சின் ஜனதா தளம் மீண்டும் ஆட்சிக்கு வர இருந்த வாய்ப்பையும் கெடுத்தது ராஜீவ் கொலை.
 
ஆகவே எல்லா கணக்குப்படியும் நஷ்டம் வரும் வேலையை புலிகள் செய்யமாட்டார்கள்.
 
ஒருவேளை, ஆயுதம் வாங்க பணத்திற்காக புலிகள் அந்த ராஜீவ் கொலைக்கான சர்வதேச 'சப் கான்டராக்ட்' எடுத்திருந்தாலும்.. அந்த கான்டராக்டை வழங்கியவர்களை சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி, நரசிம்மராவ் போன்றோர் மறைப்பதேன்?
 
ஒருவேளை, மோஸாத்திற்காகவோ, சிஐஏவிற்காகவோ அந்த கான்டராக்ட் வேலையை புலிகள் செய்திருந்தாலும்.. மோஸாத்தோ, சிஐஏவோ புலிகளை அந்த கொலைப்பழியில் இருந்து பாதுகாத்து இருக்காதா?
 
இவ்வாறு ஃபராஸ் அஹ்மது என்ற ஊடகவியலாளர் எழுதிய Assassination of Rajiv Gandhi: An Inside Job?' என்ற நூலிலேயும், அந்த நூல் பற்றி பல்வேறு தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விவாதங்களிலும் நியாயப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.    Share this:

india

india

danmark

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies