நெய் சோறு
11 Feb,2021
நெய் சோறு
தேவையான பொருள்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
முந்திரி - 10
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பட்டை -2
கிராம்பு - 2
நெய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் 2 கப் அரிசி சேர்த்து சாதமாக வடித்து ஒரு பௌலில் சாதத்தை கொட்டி ஆற விட வேண்டும். அப்படி செய்தால் சாதம் உதிரி உதிரியாக கிடைக்கும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு கப் நெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.
பிறகு அதில் வாசனைக்காக பட்டை, கிராம்பு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
பொன்னிறமாக வறுத்த பிறகு வடித்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து பத்து நிமிடம் கிளற வேண்டும்.
கடைசியில் கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான நெய் சோறு தயார்...