ஸ்பெயினில் பெருகும் கொரோனா - 30 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை
09 Feb,2021
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 7-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்து 5 ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 63,061 ஆக உயர்ந்துள்ளது.