ஸ்காட்- லானில் தோண்ட தோண்ட தங்கம்: கண்டு பிடிக்கப்பட்ட 225 மில்லியன் தங்கம்ஸ
26 Oct,2020
பிரித்தானியாவின் ஸ்காட் லன் பகுதியில் உள்ள டை-ரம் என்னும் இடத்தில் உள்ள சுரங்கத்தில் தங்கம் பாறைகளோடு சேர்ந்து கொட்டிக் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது வரை நாளும் இது எவ்வாறு மறைந்து இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் எதேட்சையாக ஒரு நபரால் கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது அரச சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கே இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட தங்கம் 225 மில்லியன் பவுண்டுகள் பெறுமதி என்று கூறப்படுகிறது.
குறித்த குகைக்குள் ஒரு சிலர் மட்டுமே சென்று இந்த தங்கத்தை அகழ்ந்து எடுத்து வந்துள்ளார்கள். ஆனால் தற்போது இவை அரசாங்கத்தின் பார்வையில் விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் கண்டு பிடிக்கப்பட்டுள்ள தங்கச் சுரங்கம், நிச்சயம் ஸ்காட் லான் தேசத்தை செழிப்படையச் செய்யும்