புங்குடுதீவு கொலையில் அதிர்ச்சி; வெளியான உண்மை காரணம்!

03 Oct,2020
 

 
 
புங்குடுதீவு, ஊரதீவு சிவன் கோயில் பூசகரை கொலைசெய்த குற்றச்சாட்டில் மூவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெண்ணொருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
பெண்ணொருவரை அழைத்துவந்து கலாசார சீரழிவில் ஈடுபட அனுமதிக்காது அதனைக் கண்டித்தமையைத் தொடர்ந்தே பூசகரை அவரது உதவியாளரும் ஏனைய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 
கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூப சர்மா (வயது-32) என்ற ஊரதீவு பாணா விடை சிவன் கோயில் அச்சகரே கொலை செய்யப்பட்டவராவார்.
 
இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
 
இதனையடுத்து சம்பவ இடத்தில் ஊர்காவற்றுறை நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் ஆகியோர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
 
இச்சம்பத்தில் பூசகரின் தலையின் பின்பக்கத்தில் இரும்புக் கம்பியால் தாக்கியே அவர் கொலை செய்யப்பட்டார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொலையில் ஈடுபட்டவர்கள் சி.சி.ரி.வி. கமெராக்களை கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.
 
பூசகரின் உதவியாளரான விசுவமடுவைச் சேர்ந்த விதுஷன் என்பவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சுழிபுரம் பாணாவெட்டையைச் சேர்ந்த மேலும் இரண்டு ஆலய உதவியாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், குறித்த மூவரும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கான அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
 
அத்துடன், பூசகரின் உதவியாளர் அழைத்துவந்து வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
இந்தக் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என்பதுடன் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம்india

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Kommende Film danmark

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies