ஜப்பானில் பெண்கள் உட்பட 9 பேரை கொடூரமாக கொன்றுவிட்டு உடல்பாகங்களை சேமித்து வந்த இளைஞன்!
01 Oct,2020
ஜப்பானில் டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு 9 பேரை கொடூரமாக கொலை செய்த இளைஞன் தொடர்பில் அவர் வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன் வைத்துள்ளனர். Takahiro Shiraishi என்ற 29 வயது இளைஞன் டிவிட்டரில் தற்கொலை எண்ணங்களை வெளியிடும் 15 முதல் 26 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை கண்டறிந்து அவர்களை கொன்று உடல் பாகங்களை துண்டித்து, கூல்பாக்ஸில் சேமித்து வைத்திருந்ததாக பொலிசார் அவனை கைது செய்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்டவர்களின் பணத்தை Takahiro திருடியதும், கொலை செய்யும் முன்னர் பெண்களை துஷ்பிரயோகம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. 2017 காலக்கட்டத்தில் தான் இந்த கொடூர செயல்களை Takahiro செய்திருக்கிறான்.
தன் மீதான குற்றச்சாட்டை Takahiro நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிலையில், தண்டனையை குறைக்கும் நோக்கில், தற்கொலை எண்ணங்கள் கொண்டவர்களை கொன்று அவர்களுக்கு Takahiro உதவியதாக அவனது வழக்கறிஞர்கள் வாதிட்டார்கள். தொடர்ந்து Takahiro மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.