ஸ்கொட்லாந்தில் உள்ள மாணவர்கள் நீண்ட கால அடிப்படையில் வீடு திரும்பலாம்
29 Sep,2020
ஸ்கொட்லாந்தில் உள்ள மாணவர்கள் சுய தனிமைப்படுத்துதல் குறித்த விதிகளைப் பின்பற்றும் பட்சத்தில் நீண்ட கால அடிப்படையில் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வீடு திரும்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் எழுந்த நிலையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஸ்கொட்டிஷ் அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல் உயர் கல்வியைப் பயில்பவர்கள் அவசரம் அல்லது தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் பெற்றோரைப் பார்க்க முடியும் என்றும் அறிவித்துள்ளது.