லத்தியை ஆசன வாய் பகுதியில் நுழைத்து... கண்ணீர்விட்டு கதறும் மனைவி - தந்தை மகனுக்கு நேர்ந்த கொடூரம்!

25 Jun,2020
 

 

 

தமிழகத்தில் சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவத்தில், ரத்தம் சொட்ட சொட்ட பொலிசார் அடித்ததாக மனைவி புகார் அளித்துள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருக்கு பென்னிக்ஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் காமராஜர் சிலை அருகில் செல்போன் கடை வைத்துள்ளனர். கடந்த 19-ஆம் திகதி, கடையை கூடுதல் நேரமாக திறந்து வைத்திருந்தது கூறி பொலிசாரிடம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது, சாத்தான்குளம் எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் 2 பேரும் அங்கு வந்து, கடையை ஏன் இவ்வளவு நேரம் திறந்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். ஜெயராஜ் வாக்குவாதத்தில் இறங்கியதால், பொலிசார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஜெயராஜ்ஜை பொலிசார் தாக்கப்படுவதைக் கண்டு மகன் பதறியுள்ளார்.
  
இது குறித்து கேட்ட போது, பென்னிக்ஸையும் பொலிசார் தாக்கியுள்ளனர். அதன் பின், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின் நேற்று முன்தினம் இரவு பென்னிக்ஸ் நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போதே உயிரிழந்துவிட்டதாகவும், இவரைத் தொடர்ந்து தொடர்ந்து ஜெயராஜும் மரணமடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அது எப்படி 2 பேரும் அடுத்தடுத்து இறக்க முடியும் என்று வணிகர்கள் ஒருபக்கம், பொதுமக்கள் மறுபக்கம், எதிர்கட்சிகள் இன்னொரு பக்கம் என சேர்ந்து இவர்களின் மரணம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயராஜ் மனைவி செல்வராணி, தன்னுடைய மகன், கணவன் மர்ம மரணம் குறித்து காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், என் கணவரையும், மகனையும் பொலிசார் ஆபாசமா திட்டினர். ரத்தம் சொட்ட சொட்ட அடித்திருக்கிறார்கள். எஸ்ஐ ரகு கணேஷ் நான் யார் தெரியுமா? கொம்பன் என மிரட்டி அடித்திருக்கிறார். என் கணவன், மகன் மரணத்துக்கு காரணமான பொலிசாரை சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் இப்புகார் அளித்துள்ளார்.
மேலும், சட்டையை பிடிச்சு அடித்து இழுத்து சென்றுள்ளனர். இதை என் மகன் பார்த்துவிட்டு, ஏன் என் அப்பாவை இப்படி இழுத்துட்டு செல்கிறீர்கள் என்று கேட்ட போது, நீயும் காவல்நிலையத்திற்கு வா என்று சொல்லிவிட்டு போயுள்ளனர். காவல்நிலையத்தில் என் கணவரை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆபாசமாக திட்டி கன்னத்தில் அடித்துள்ளார். இதனைப் பார்த்த என் மகன், ஏன் என் அப்பாவை அடிக்கறீங்க என்று கேட்ட போது, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் பால்துரையிடம் எனது மகனையும் அடிக்க சொல்லியிருக்கிறார். இதற்குபிறகுதான், எஸ்ஐ பால்துரையும், பொலிசாரும் சேர்ந்து என் மகனை மூட்டுகளில் கம்பால் அடித்தனர். பொலிசார் அடித்த அடியில் பின்பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியுள்ளது.
இதனைப் பார்த்த என் கணவர், என் பையனை ஏன் இப்படி போட்டு அடிக்கறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீதர் என் கணவரையும் அடிக்க சொல்லியிருக்கிறார். எனது கணவரை கம்பால் அடித்து ரத்தம் சொட்டச்சொட்ட லாக் அப்பில் நிர்வாணமாக அடைத்துள்ளனர். இரவு 11.30 மணிக்கு வந்த எஸ்ஐ ரகு கணேஷ், நான் யார் தெரியுமா? கொம்பன் என்று கூறி கெட்ட வார்த்தைகளில் திட்டி அவரும் அடித்துள்ளார். இதெல்லாம் தெரிந்து நான் காவல்நிலையத்திற்கு சென்று பார்த்தேன். அங்கே எனது கணவரும் மகனும் காயத்துடன் நின்றிருந்தனர். 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்.
நீதிமன்றத்தில்போய் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டனர். ஜுன் 21-ஆம் திகதி என் கணவரையும் மகனையும் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு எனது கணவர் ஜெயராஜ் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அதன் பின் நேற்று காலை எனது மகன் பென்னிக்ஸ் இறந்துவிட்டான் என செய்தி வந்தது. என் கணவரும் மகனும் சாத்தான்குளம் பொலிசார் அடித்துதான் இறந்துள்ளார்கள். காட்டுமிராண்டி தனமாக அடித்து கொலை செய்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், காவல் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், பால்துரை, ரகு கணேஷ், காவலர்கள் வேலுமுத்து, ஜேசுராஜ் சாமத்துரை, பாலா, தன்னார்வ தொண்டர்களான கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா மேலும் தொடர்புடைய நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை விசாரணை செய்து நீதி, நிவாரணம் பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று செல்வராணி புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், பென்னிக்ஸை பொலிசார் தாக்கியபோது, அவரது ஆசன வாய் வழியே லத்தியால் குத்தி கொடுமைப்படுத்தியதில் காயம் ஏற்பட்டு ரத்த கசிவும் ஏற்பட்டதாம். தன்னால் சிறுநீர்கூட கழிக்க முடியவில்லை என்று அங்கிருந்தோரிடம் பென்னிக்ஸ் அழுததாக தகவல் வெளியானதால், இதை பச்சை படுகொலை என்றே பொதுமக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
தந்தை, மகன் அடித்து கொல்லப்பட்ட விவகாரம்: காவல்துறையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது அம்பலம்!

தமிழகத்தின் தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும், மகனும் மரணமடைந்த விவகாரத்தில் தந்தையும் மகனும் காவல்நிலையத்தில் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தையும், மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் கிளைச்சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 19 ஆம் திகதி கைது செய்து விசாரணைக்காக ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஜூன் 22 ஆம் திகதி பென்னிக்ஸும், மறுநாள் அதிகாலையிலே ஜெயராஜும் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
  
பொலிசார் கடுமையாக தாக்கி கொன்றுவிட்டதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் தரப்பில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக உள்ளூர் ஊடகம் ஒன்று பகீர் தகவல்களை பதிவு செய்துள்ளது. பென்னிக்ஸின் நண்பர் ராஜ்குமார் தெரிவித்த தகவலில், 20 ஆம் திகதி காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குறைந்தபட்சம் 7 முறை தந்தையும், மகனும் லுங்கிகளை மாற்றினார்கள்.
அவர்களது ஆசனப் பகுதியில் இருந்து ரத்தம் கசிந்ததன் காரணமாக உடல் ஈரமாக இருந்தது. சாத்தான்குளம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் உங்களது வாகனத்திலே வாருங்கள் என்று அவர்கள் சொன்னார்கள். காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது அவர்களது ஆடைகள் நன்றாக கிழிந்து இருந்தது. உடலில் ரத்தம் படிந்திருந்தது. ஆசனப்பகுதியில் கடுமையான வலி இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். அவர்களுக்கு உடனடியாக மாற்று லுங்கி கொடுத்தோம். வலிக்காமல் இருக்க எங்களது காரின் சீட்டில் துணிகளை கீழே போட்டோம். என்றார்.
இருப்பினும், அவர்களுக்கு ரத்த அழுத்தும் அதிகமாக இருந்ததால் உடல்தகுதி சான்றிதழ் கொடுக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். மேலும், தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னீக்ஸ் இருவரும் ரத்த அழுத்தத்தை குறைக்க ஏதாவது செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். காலை 7.05 முதல் 11.15 வரை மூன்று சோதனை செய்தனர். அவர்களது மருந்துகளும், ஊசிகளும் கொடுக்கப்பட்டன. ரத்த கசிவு நிற்பதற்கு மருந்து கொடுக்குமாறு காவல்துறையிடம் கேட்டோம். ஆனால், மருந்து கொடுக்காமலே ரத்த கசிவு நின்றுவிடும் என்றனர். பலமுறை பரிசோதனை செய்தும் அவர்களின் ரத்த அழுத்தம் குறையவில்லை, இருந்தாலும் அவர்கள் உடல்நிலை சீராக இருக்கிறது என சான்றிதழ் தருமாறு மருத்துவர்களிட சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் கூறியதாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சான்றிதழ் பெற்றபின்னர் இருவரையும் அதே காரில் அழைத்துக்கொண்டு மாஜிஸ்திரேட் சரவணனின் வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு மாஜிஸ்திரேட்டிடம் நடந்த உண்மைகளை கூறுமாறு பென்னீக்ஸிடம் தாங்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பென்னிக்ஸுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டபோது அவரைச் சுற்றி 4 காவலர்கள் இருந்ததாகவும், அவர்கள் தந்தை மகன் இருவரையும் தொடர்ந்து மிரட்டியதாகவும் கூறினார். பின்னர் அவர்கள் இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறைக்கு அழைத்துசெல்லப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து கூறிய ராஜ்குமார், தான் காரணமின்றி தொடர்ந்து தாக்கப்படுவதாக பென்னீக்ஸ் தெரிவித்தார்.
அது வெளிப்புற காயத்தைவிட மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கூறினார். அத்துடன் தனது தந்தையை பார்த்துக்கொள்ளுமாறும், விசாரணையில் நடந்த கொடுமைகளை அவரிடம் கூற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார் என்றார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளத்தில் இருந்த அனைத்து காவலர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

 



Share this:
Ayd?n mutlu son Kocaeli mutlu son Tekirda? mutlu son Adana mutlu son Çanakkale mutlu son Kayseri mutlu son Denizli mutlu son Gaziantep mutlu son Sivas mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Adana masaj salonlar? Ayd?n masaj salonlar? Kocaeli masaj salonlar? Mu?la masaj salonlar? Yalova masaj salonlar? Afyon mutlu son Kütahya mutlu son Sakarya escort Konya escort Elaz?? escort Elaz?? mutlu son Malatya mutlu son Tokat mutlu son Çorum mutlu son Yalova mutlu son

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved
Aydın mutlu son Design and development by: Gatedon Technologies