பூமியில் உள்ள மொத்த நீரில் 97 சதவீதம் கடல் நீர்
08 Jun,2020
பூமியில் உள்ள மொத்த நீரில் 97 சதவீதம் கடல் நீர் தான். பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ம் தேதி, உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நிலையான பெருங்கடலுக்கான புதிய முயற்சி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
உலகில் கடலில் தான் அதிக சரக்கு போக்குவரத்து நடக்கிறது. உலகில் 10 கோடி பேர் தினமும், உணவு, வருமானத்துக்கு கடலை நம்பியே உள்ளனர். கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன.
கடல் மாசு
நாம் துாக்கி எறியும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் கடலில்
கலக்கின்றன. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் அழிவு ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஊரடங்கால் கடல் மாசுபடுவது குறைந்தது. கடல்வாழ்
உயிரினங்கள் எவ்வித அச்சமின்றி வந்து சென்றதை பார்க்க முடிந்தது.
30
மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் எடுத்துக்கொண்டு, பூமி வெப்பமடைவதை குறைக்கிறது.
70
கடல் மூலமாக 70 சதவீத ஆக்சிஜன் கிடைக்கிறது.
80
உலகில் ஆண்டுதோறும் 80 லட்சம் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன.
300
உலகில் 300 கோடி பேருக்கு கடல் உணவு மூலம் புரோட்டின் கிடைக்கிறது.