கனடாவில் நேற்றும் 105 பேர் கொரோனாவுக்குப் பலி!
24 May,2020
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், நேற்று 105 பேர் உயிரிழந்திருப்பதாகவும், புதிதாக 1141 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கனடாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 6,355 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,621 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 43,305 பேர் குணமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.