இத்தாலியில் நோய்த்தொற்று குறைவடைவது நல்ல சமிக்ஞை -உலக அளவில் இரண்டரை மில்லியனை

21 Apr,2020
 

 

 

இத்தாலியில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று (திங்கட்கிழமை) கணிசமாகக் குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அங்கு கொரோனா வைரஸ் பரவல் இனங்காணப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக அதிகரித்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் குறைவடைந்து வந்த போதும், நேற்று அது மிகக்குறைந்த எண்ணிக்கையைக் காட்டியதாக குறிப்பிடப்படுகிறது.
நேற்று ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 237 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இருந்த எண்ணிக்கையிலும் 20 குறைவாகும்.
இந்த எண்ணிக்கை மிகச் சொற்பமாக இருக்கின்ற போதும் நோய்த்தொற்று குறைவடைந்து வருவதற்கான நல்ல சமிக்ஞை என இத்தாலி அரசின் மக்கள் பாதுகாப்பு முகவரகத்தின் தலைமை அதிகாரி ஏஞ்சலோ பொர்ரேல்லி தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் நாடளாவிய முடக்கம் எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி வரை தொடர்கின்ற போதும், அங்கு மட்டுப்படுத்தப்பட்ட சில வணிக நடவடிக்கைகளைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், பொருட்கொள்வனவில் ஈடுபடும் மக்களை சமூக இடைவெளிகளையும், சுகாதார நடைமுறைகளையும் பேணுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, ஸ்பெனுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் உள்ளது இத்தாலி. அங்கு இதுவரை ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 228 பேர் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 24 ஆயிரத்து 114 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
நேற்று மட்டும் அங்கு 2 ஆயிரத்து 256 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 454 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் இரண்டரை மில்லியனை நெருங்கும் கொரோனா தொற்றாளர்கள்!

உலக நாடுகளில் தீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் நேற்றும் 2 ஆயிரம் பேரளவில் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் இதுவரை 24 இலட்சத்து 81ஆயிரத்து 541 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 6 இலட்சத்து 47 ஆயிரத்து 744 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் நேற்று 5 ஆயிரத்து 366 ஆக மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 439 பேர் மரணித்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 939 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்தமாக 42 ஆயிரத்து 514 பேரின் மரணங்கள் பதிவாகி உலக நாடுகளில் அதிக உயிரிழப்பு பதிவாகிய நாடாக அமெரிக்கா உள்ளது.
அந்நாட்டில், 28 ஆயிரத்து 123 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 7 இலட்சத்து 92 ஆயிரத்து 759 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட எட்டு இலட்சத்தை எட்டும் வைரஸ் தொற்றாளர்களில் இதுவரை 72 ஆயிரத்து 389 பேர் மாத்திரமே குணமடைந்துள்ளனர்.
இதேவேவேளை, மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நியூயோர்க் மாநிலத்தில் நேற்று மட்டும் 631 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மட்டும் மொத்த மரணம் 18 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. இதனைவிட வைரஸ் தொற்றாளர்கள் 2 இலட்சத்து 52 ஆயிரத்து 94 ஆகப் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, நியூஜெர்ஸி மாகாணத்தில் நேற்று 175 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 377 ஆகப் பதிவாகியுள்ளது. இதனைவிட மஸ்ஸசுசெற்ஸ் (Massachusetts) மாநிலத்தில் 103 பேரும் பென்சில்வேனியாவில் 111 பேரும் மரணித்துள்ளனர். அங்கு பாதிப்புக்கள் கடந்த சில வாரங்களைவிட குறைந்துவருகிறது.
இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 491 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், நேற்று குறித்த நாடுகளில் 2 ஆயிரத்து 655 பேர் உயிரிழந்துள்ளதுடன் கடந்த நாட்களில் நிலவிய உயிரிழப்புக்களை விட சற்றுக் குறைந்துவருகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் நேற்று 23 ஆயிரத்து 840 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களை விட தற்போது ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு குறைந்து வருகின்றது. இந்நிலையில் மொத்தமாக 11 இலட்சத்து 13 ஆயிரத்து 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இதுவரை 3 இலட்சத்து 21 ஆயிரத்து 521 பேர் குணமடைந்துள்ளனர்.
குறித்த நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வந்தநிலையில் நேற்று கணிசமாக உயிரிழப்புக்கள் குறைந்துள்ளன.
அமெரிக்காவை அடுத்து அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 454 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 24 ஆயிரத்து 114 ஆகப் பதிவாகியுள்ளன.
மேலும், நேற்று புதிய நோயாளர்கள் 2 ஆயிரத்து 256 பேர் பதிவாகியுள்ள நிலையில் மொத்தமாக அங்கு ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 228 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை பதிவாகியுள்ளது.
இதனைவிட, ஸ்பெயினில் நேற்று 399 பேரின் மரணங்கள் பதிவாகியதுடன் மொத்த மரணங்கள் 20 ஆயிரத்து 852 ஆக அதிகரித்துள்ளன.
அத்துடன், புதிய நோயாளர்கள் ஆயிரத்து 536 ஆக உள்ளதுடன் 2 இலட்சத்தைக் கடந்து 2 இலட்சத்து 210 ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு 80 ஆயிரத்து 587 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையடுத்து, பிரான்ஸில் கடந்த ஒருவார காலமாக ஆயிரத்து 500 வரை உயிரிழப்புக்கள் பதிவான நிலையில் கடந்த 2 நாட்களாக கணிசமாகக் குறைந்துள்ளதுடன் நேற்று 547 ஆக மரணங்கள் பதிவாகியுள்ளன.
பிரான்ஸில் மொத்தமாக 20 ஆயிரத்து 256 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 383 பேராக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வைரஸால் நேற்று மட்டும் 449 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 16 ஆயிரத்து 509 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நேற்று மட்டும் 4 ஆயிரத்து 676 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 743 ஆக அதிகரித்துள்ளது.
இதனைவிட ஜேர்மனியில் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 65 பேருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 91 ஆயிரத்து 500 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அந்நாட்டில் நேற்று 220 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 4 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளன.
மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நேற்று 145 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்த மரணங்கள் 5 ஆயிரத்து 828 ஆக அதிகரித்துள்ளன.
இதனைவிட, நெதர்லாந்தில் நேற்று மட்டும் 67 பேர் மரணித்துள்ளதுடன் ரஷ்யாவில் 44 பேரும், அயர்லாந்தில் 77 பேரும் சுவீடனில் 40 பேரும் நேற்று மரணித்துள்ளனர். அத்துடன் பிரெஸிலில் நேற்று 125 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, அமெரிக்க நாடான கனடாவில் நேற்று 103 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளன.
ஆசியாவில் நேற்று 346 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் துருக்கியில் 123 பேர் மரணித்துள்ளதுடன் ஈரானில் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைவிட, இந்தியாவில் 33 பேரும் ஜப்பானில் 27 பேரும் நேற்று மரணித்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் பேரவத் தொடங்கிய சீனாவில் நேற்று 12 பேருக்கு வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.
இதனைவிட ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள இத்தாலியக் கப்பலான கொஸ்ரா அற்ரான்ஸிகாவில் (Costa Atranchica) 53 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாகசாகி நகர மேயர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 13ஆம் திகதி, கொரோனா அச்சம் காரணமான குறித்த கப்பல் ஜப்பானின் நாகசாகியில் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த கப்பலில் 623 பேர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies