நீங்கள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? அதன் வகைகளைப் பற்றி தெரியுமா?

31 Jan,2020
 

 

 
மனச்சோர்வு அல்லது மனத்தளர்ச்சி வகையில் முக்கியமாக கருதப்படுபவை மகிழ்வின்றிய கோளாறு (Dyshthymic Disorder) மற்றும் பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு (Major Depressive Disorder) போன்றவையாகும்.
மனச்சோர்வின் முக்கிய வடிவமாக பார்க்கப்படுவது பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு ஆகும். இந்த மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் கலவையான அறிகுறிகளை வெளிப்படுத்துவார். மேலும் இந்த வகை பாதிப்பு ஒரு நபரின் வேலை, தூக்கம், படிப்பு, உணவு, சந்தோசம் ஆகியவற்றில் பாதிப்பை உண்டாக்கும். இந்த வகை மனச்சோர்வு ஒரு மனிதனை இயல்பு நிலையில் செயல்பட விடுவதில்லை.
மகிழ்வின்றிய கோளாறு என்னும் நிலை இரண்டு அல்லது மேற்பட்ட ஆண்டுகள் ஒரு நபரை பாதிக்கலாம்
சில வகை மனச்சோர்வு எந்த ஒரு நபரையும் பாதிக்கலாம். இந்தப் பதிவில் மனச்சோர்வின் வடிவங்கள் பற்றி நாம் கூறவிருக்கிறோம். இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.
மகப்பேறுக்குப் பின்னான மன இறுக்கம் (Postpartum depression)
குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்கு பிறகு மனச்சோர்விற்கான அறிகுறிகள் தலைதூக்கினால் அதனை மகப்பேறுக்கு பின்னான மன இறுக்கம் என்று கூறுவார்கள். பிரசவத்திற்கு பிறகு 10-15% பெண்கள் இந்த பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.
தீவிர மனத்தளர்ச்சி கோளாறுடன் சிலவகை மனநோய் ஒருங்கிணையும் போது, இந்த வகை மனத்தளர்ச்சியை மனப்பித்து என்று கூறுவர். உண்மையை உணராமல் இருப்பது, மாயத்தோற்றம், எந்த ஒரு விஷயத்தையும் பற்றி கருத்து இல்லாமல் இருப்பது போன்ற மனநிலையைக் கொண்ட ஒரு பாதிப்பு மனப்பித்து ஆகும்.
சீசனல் அஃபக்ட்டிவ் டிஸார்டர் (Seasonal Affective Disorder (SAD)
இயற்கையாக சூரிய ஒளி குறைவாக இருக்கும் குளிர்காலத்தில் இந்த வகை மனக்கோளாறு உண்டாகிறது. வசந்த காலம் மற்றும் கோடைக்காலங்களில் இதன் தாக்கம் இயல்பாக குறைகிறது. லைட் தெரபி என்னும் ஒளி சிகிச்சை கொண்டு இந்த பாதிப்பை சரிசெய்ய முடியும். ஆனால் இந்த பாதிப்பைக் கொண்டவர்களில் பாதி பேர் மட்டுமே இந்த சிகிச்சையை மட்டும் பெற்று குணமாக முடியும். மனஅழுத்த எதிர்ப்பு மாத்திரைகள் மற்றும் சைக்கோ சிகிச்சை ஆகியவற்றை பயன்படுத்தி இவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதனுடன் ஒளி சிகிச்சையையம் சேர்த்து மேற்கொள்ளலாம்.

” 3 ” படத்தில் நடிகர் தனுஷ் இந்த வகை மனக்கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பார். இந்த வகையான மனச்சோர்வு வெறிபிடித்த மனச்சோர்வு நோய் என்றும் அழைக்கப்படுகிறது. பெரும் மனத் தளர்ச்சி, மகிழ்வின்றிய கோளாறு போன்றவை போல் இது ஒரு பொதுவான மனக்கோளாறு அல்ல. இருமுனைய கோளாறு பாதிப்பில் ஒரு நபரின் மனநிலை திடீரென்று மிக உயர்ந்த வெறித்தனமான நிலையில் இருந்து மிகக் குறைந்த மனச்சோர்வு நிலைக்கு செல்ல நேரும்.

 



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies