நான்கு குற்றவாளிகளுக்கும் 22ஆம் திகதி தூக்குத் தண்டனை

12 Jan,2020
 

 

 
டெல்லியில் பெண் நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 7மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றவாளிகளின் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான உத்தரவு வழங்கப்பட வேண்டும் எனவும் அப்பெண்ணின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த திகதிக்கு முன்னதாக குற்றவாளிகள் கருணை மனு மற்றும் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.
“எனது மகளுக்கு நீதி கிடைத்து விட்டது. குற்றவாளிகள் நான்கு பேரை தூக்கில் போடுவதன் மூலம் இந்த நாட்டில் உள்ள பெண்கள் வலிமை பெறுவார்கள்.
இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை அதிகரிக்கும்” என நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
இத்தீர்ப்புக்கு முன்னதாக குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நான்காவது மற்றும் கடைசி மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
    கடந்த டிசம்பர் 2012ஆம் ஆண்டு 16ம் திகதி, 23வயதான ‘பிசியோதெரபி’ மாணவி நிர்பயா திரைப்படம் பார்த்து விட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சம்பவத்தில் அவருடைய நண்பரும் தாக்கப்பட்டார்.
மிகவும் மோசமாக காயமடைந்த அம்மாணவியை வீதியோரம் அக்கும்பல் தூக்கி எறிந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, 13நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.
நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை:
2012டிசம்பர் 16: நிர்பயா படுகொலை செய்யப்பட்டார்.
2012டிசம்பர் 17: முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
2012டிசம்பர் 29: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிர்பயா உயிரிழந்தார்.
2013மார்ச் 11: முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2013ஓகஸ்ட் 31: வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
2013செப்டம்பர் 13: இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2014மார்ச் 13: நால்வரின் மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
2014மே-_ஜூன்: குற்றம் சாட்டப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும் வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது.
2017மே: டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இதேவேளை “ஒன்றிரண்டு நாளில் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம். ஐந்து மூத்த நீதிபதிகள் அதனை விசாரிப்பர்.
இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே ஊடகங்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் நெருக்கடி இருந்துக் கொண்டே வருகிறது.
இந்த வழக்கில் சார்பற்ற விசாரணையை மேற்கொள்ள முடியாது” என குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் சிக்கியது எவ்வாறு?
குற்றவாளிகளான வினய் சர்மா மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரின் தண்டனைக்கு தடயவியல் நோய்க் குறியியல் என்ற அறிவியல் பரிசோதனையே முக்கிய காரணம் என்பது பலருக்குத் தெரியாது.

 



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies