பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது நபர் கொலை செய்த இளம்பெண்

24 Dec,2019
 

 

 

 60 வயதான அம்மன் சேகர் என்பவரை இளம்பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் இந்தியாவின் திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
 

திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியை சேர்ந்த கற்பூர வியாபாரியான குறித்த நபர்  5 ஆண்டுகளாக  இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ள நிலையில், அவரை கொலைசெய்ய திட்மிட்டு அதனை அரங்கேற்றியுள்ளர் குறித்த பெண்.
நேற்றைய தினம் மாலை புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு மைதானம் அருகில் ஏ.ஏ.ஸ்கீம் சாலையில் அவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை தொடர்பில் விசாரனைமேற்கொண்ட பொலிஸார்,  பெண் ஒருவர் அம்மன் சேகரிடம் பேசிக்கொண்டிருந்தாக பொது மக்கள் கொடுத்த வாக்கு மூலத்துக்கு அமைய விசாரனைகளை மேற் கொண்டு அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்தப்பெண் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில்,
அம்மன் சேகர் கடந்த 5 ஆண்டுகளாக தமக்கு தொல்லை கொடுத்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வேறு யாரையும் திருமணம் செய்யக் கூடாது எனவும் “உனக்கு தெரியாமல் செல்போனில் ஆபாச படங்களை எடுத்து வைத்துள்ளேன். நான் சொல்வதை கேட்காவிட்டால் அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன்” என்று மிரட்டியதன்  காரணமாகவே அவரை கொலை செய்ததாகவும் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அம்மன் சேகரை கொலை செய்த இளம்பெண் அவரது மகளுடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பை மேற்கொண்டவர்.
 கல்லூரி தோழி, என்பதால் இளம்பெண் அம்மன்சேகரின் வீட்டுக்கு அவரது மகளை சந்திக்க சென்று வந்துள்ளார். இதனை சாதகமாக பயன் படுத்திய அம்மன்சேகர் இளம்பெண்ணிடம் பழகி அவரை ஏமாற்றி கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அம்மன் சேகரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றதால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய குறித்தப்பெண்  அம்மன் சேகரின்  பிறந்த நாளன்று பரிசு தருவதாக கூறி பெசன்ட் நகர் கடற்கரைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
கொலை செய்ய கத்தியுடன் தயாராக சென்ற அவ் இளம்பெண்  தருணம் பார்த்து புதுவண்ணாரப்பேட்டைக்கருகே இன்பஅதிர்ச்சி தருவதாக கூறி  அம்மன் சேகரை  கண்களை மூடும்படி கூறியுள்ளார்.
அவர் கண்களை மூடியதும் தான் வைத்திருந்த பசையை கண்ணில் பீய்ச்சி அடித்து அவரை நிலை குழையச்செய்து  பின்னர் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அம்மன் சேகர் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மன் சேகரை கொலை செய்த இளம்பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின் குறித்த  இளம்பெண்ணை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies