மாண­வியை பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் 72வயது பூசகர்கைது

13 Dec,2019
 

 

 

 
9 வய­தான மாண­வியை பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட ஆலயம் ஒன்றின் பூசகர் உள்­ளிட்ட இரு­வ­ரது விளக்­க­ம­றி­ய­லையும் எதிர்­வரும் 20ஆம் திக­தி­வரை நீடித்து பருத்­தித்­துறை நீதிவான் நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது.
அர்ச்­ச­கரின் சார்பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி என்.சிறி­காந்தா பிணை விண்­ணப்பம் செய்­த­போதும் பாதிக்­கப்­பட்ட மாண­வியின் நலன் சார்பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி கன­க­ரட்னம் சுகாஷ், கடு­மை­யான ஆட்­சே­ப­னையை முன்­வைத்த நிலையில் சந்­தேக நபர்­களின் பிணை விண்­ணப்பம் நிரா­க­ரித்து விளக்­க­ம­றி­யலை நீதி­மன்றம் நீடித்­தது.
கடந்த நவம்பர் 27ஆம் திகதி பாட­சா­லையில் குறித்த மாணவி கைத்­தொ­லை­பேசி வைத்­தி­ருப்­பதை ஆசி­ரியர் ஒருவர் கண்­ட­றிந்தார். இது­தொ­டர்பில் மாண­வி­யிடம் விசா­ரித்­த­போது, வல்­வெட்­டித்­துறை ஆலயம் ஒன்றின் பூசகர் அதனை வாங்கிக் கொடுத்­த­தா­கவும் அவர் தனக்குப் பிர­சாதம் தரு­வ­தற்­காக அழைப்­ப­தற்கு கைத்­தொ­லை­பே­சியைத் தாந்தார் எனவும் கூறி­யுள்ளார்.
மாண­வியின் தக­வலில் சந்­தேகம் கொண்ட ஆசி­ரியர், சிறுவர் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ருக்கு அறி­வித்தார். அவர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து உட­ன­டி­யாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.
பூசகர் தன்னை ஆலய மடப்­பள்­ளியில் வைத்து துன்­பு­றுத்­த­லுக்­குள்­ளா­கி­ய­தா­கவும் தனக்கு அதி­க­ள­வான பணத்தை அவர் தந்­த­தா­கவும் மாணவி விசா­ர­ணையில் தெரி­வித்தார்.
மேலும் தனது உற­வினர் ஒரு­வரும் இவ்­வாறு தன்னை துன்­பு­றுத்­து­வ­தா­கவும் மாணவி தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன், பூச­கரால் வழங்­கப்­பட்ட பணத்தின் ஒரு­தொ­கை­யையும் மாணவி பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்ளார்.
மாண­வியின் கைத்­தொ­லை­பே­சியின் சிம் அட்டை அர்ச்­ச­கரின் பெய­ரி­லேயே இருந்தமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 72 வயதான பூசகரும், சிறுமி குறிப்பிட்ட 50 வயதுடைய சிறுமியின் உறவினரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies