குரங்குகளில் இருந்து மனிதர்களுக்கு அபாயகரமான நோய் மீண்டும் பரவுகிறது!
30 Nov,2019
குரங்குகளிடம் இருந்து மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஹெர்பஸ் பி எனும் வைரஸ் மீண்டும் பரவுவதாக ஜப்பானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ககோஷிமா நகரில் குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையின் இந்த விபரம் தெரியவந்துள்ளது. குரங்குகளைப் பிடித்து ஆய்வு நடத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர் ஹெர்பஸ் பி வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
கடந்த 1932ம் ஆண்டு முதல் ஹெர்பஸ் பி வைரசால் பாதிக்கப்பட்ட 50 பேரில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. குரங்குகள் கடித்தாலோ அல்லது நகத்தினால் கீறினாலோ பரவும் இந்த நோயினால் மனிதர்களுக்கு காய்ச்சல், கடுமையான தலைவலி போன்றவற்றுடன் மூளை முற்றிலும் செயலிழந்து மரணம் நேரிடக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.