அவசர மருத்துவ உதவிக்குழுவின் தந்தை லூயி லாரெங் காலமானார்
04 Nov,2019
!
அவசர மருத்துவ உதவிக்குழுவான SAMU சேவைகளை உருவாக்கிய லூயி லாரெங் (Louis Lareng) தனது 96 ஆவது வயதில் காலமானார்.
Haute-Garonne, (Etienne Guyot) நகரில் அவர் முதுமை காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் அனியஸ் புஸான் (Agnழூs Buzyn) இத்தகவலை வெளியிட்டதோடு, இரங்கலும் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 8 ஆம் திகதி 1923 ஆம் ஆண்டு Ayzac-Ost (Hautes-Pyrளூnளூes) நகரில் பிறந்த இவர், பின்னர் 1965 இல் இருந்து 1977 வரை தான் பிறந்த ஊருக்கு நகரமுதல்வராக இருந்தார்.
Toulouse நகரில் 1969 ஆம் ஆண்டு பெப்ரவரியில் முதன்முதலாக SAMU சேவைகளை அறிமுகப்படுத்தினார். பின்னர் 17 ஆண்டுகள் கழித்து SAMU சேவைகளின் தேவைகள் கருதி நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் லூயி லாரெங் உயிரிழந்ததை அடுத்து பல்வேறு தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.