பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை தொடர்கிறது
14 Oct,2019
புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் பிரித்தானியப் பிரதிநிதிகளும் பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் கூடி பேசிவருகின்றனர்.
ஐரோப்பிய ஆணைக்குழுவில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானியாவின் ஆலோசகர் டேவிட் ஃபொரஸ்ட் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை இன்று முழுவதும் தொடரும் என்பதுடன் இது ‘ஆழ்ந்த தொழில்நுட்ப பேச்சுவார்த்தை’ என குறிப்பிடப்படுகிறது.
ஆனால், பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான சிறிதளவான வாய்ப்பே உள்ளதாக ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்துடனோ அல்லது ஒப்பந்தம் இன்றியோ பிரித்தானியா எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் என பிரதமர் ஜோன்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.